தம்மாதூண்டு கடுகு.. கேன்சரையே விரட்டும் "கடுகு" விதைகள்.. ஆயுளை கூட்டும் கடுகு எண்ணெய் மகத்துவம்
சென்னை: "கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது" என்று நம்முடைய பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.. அதனால்தான், நூற்றாண்டுகளை கடந்தும்கூட, இந்த குட்டியூண்டு கடுகு, இன்னமும் நம்முடைய வீட்டு கிச்சனில் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டிருக்கிறது.
காரத்தன்மை: பெரும்பாலும் கடுகு என்றாலே, அதை தாளிப்பு-க்குரிய பொருளாகவே சிலர் நினைக்கிறார்கள்.. உண்மையை சொல்லப்போனால், மருத்துவ குணத்திற்கும் எடுபடாது.

கசப்பு + காரத்தன்மை இரண்டுமே கொண்டது இந்த கடுகு.. கருங்கடுகு, செங்கடுகு, வெண்கடுகு, மஞ்சள் கடுகு இப்படி எத்தனையோ வகைகள் இருந்தாலும் நாம் சமையலுக்கு பயன்படுத்துவது இந்த கருங்கடுகு தான். அமெரிக்காவில் மஞ்சள் கலரில் கடுகு பயன்படுத்துவார்களாம். ஆனால், நம்முடைய செங்கடுகில்தான் நிறைய மருத்துவ குணம் நிரம்பி உள்ளது.
வயிற்று பூச்சிகள்: கடுகை உணவில் சேர்த்து கொள்வதால், செரிமானம் அதிகமாகிறது.. வயிற்றிலுள்ள பூச்சிகள் அழிக்கக்கூடியது.. இதயத்திற்கு நலன் தரக்கூடியது.. பொதுவாக, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மீன் எண்ணெயில் அதிகமாக உள்ள நிலையில், தாவரப்பொருட்களில் கடுகில் இந்த கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதாம். அதனால்தான், இதயத்திற்கு கடுகு நல்லது என்கிறார்கள்.
பெருங்குடல் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கிறது.. அதிலும், கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், இதயத்துக்கு மிகவும் நல்லது.. இதயம் இருதயநோய் ஆபத்து நெருங்காது என்கிறார்கள். நரம்பு சார்ந்த வலிகள், வீக்கங்கள் இருந்தால், அதற்கு நிவாரணமாக இருப்பது இந்த கடுகு எண்ணெய்தான்.
கொழுப்பு: மார்பகம், நுரையீரல், பெருங்குடல் ஆகிய பகுதிகளில் புற்றுநோய்களை ஏற்படாமல் தடுக்கிறது. கடுகை பயன்படுத்தினால், கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதுடன், உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகள் வந்துவிட்டால், அதற்கு கடுகு அரைத்து பூசுவார்கள்..

விஷப்பூச்சிகள் கடித்துவிட்டால், அந்த விஷத்தை முறிக்கும் தன்மை இந்த கடுகுக்கு உண்டு. இருமலை கட்டுப்படுத்தக்கூடியது.. ஒற்றை தலைவலியை போக்கக்கூடியது.. ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியது.. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடியது. மாதவிலக்கு பிரச்சனையை தீர்க்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது..
உபாதைகள்: இதிலுள்ள கால்சியம், எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதி தரக்கூடியது.. நகங்கள், தலைமுடிக்கும் வலிமை தருகிறது.. சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறது.. குறிப்பாக, முதுமையை சற்று தள்ளிப்போட்டு, இளமையை தக்க வைக்கிற சக்தி கடுகுக்கு உண்டு..இவ்வளவு நன்மை இருந்தாலும், கடுகை குறைந்த அளவுக்கே பயன்படுத்த வேண்டும்.. அதிகமாக எடுத்து கொண்டால், குமட்டல், வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படும்
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications