மட்டன் செய்றீங்களா? ஆட்டுக்கறி + கோழிக்கறியில் எது பெஸ்ட் தெரியுமா.. சர்க்கரை நோயாளிகள் நோட் பண்ணுங்க
சென்னை: ஆட்டுக்கறி சிறந்ததா? கோழிக்கறி சிறந்ததா? இரண்டில் எதில் சத்துக்கள் நிறைந்துள்ளன? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. அவரவர் உடலுக்கு ஏற்றபடி, இந்த தன்மை மாறுபடும் என்றாலும், பொதுவான சில அடிப்படை விஷயங்கள் உள்ளன. அவைகள் என்ன?
நாம் 2 வகையான மட்டனை சாப்பிடுகிறோம்...செம்மறி ஆட்டுக்கறி + வெள்ளாட்டுக்கறி என்று இரண்டு வகையான மட்டன்களை சமைத்து உண்கிறோம்... செம்மறி ஆட்டில், வெறும் 100 கிராமை எடுத்துக் கொண்டால், அதில், 300 காலரிகள் இருக்கிறது.. கொழுப்பு மட்டுமே 20 கிராம் உள்ளது.. புரோட்டீன் 25 கிராமும், கொலஸ்டிரால் 100 மி.கிராமும் உள்ளது.

ஆனால், வெள்ளாட்டில் அப்படியில்லை.. 100 கிராமில் 130 காலரிதான் இருக்கிறது.. கொழுப்பு 3 கிராம்தான் உள்ளது.. புரோட்டீன் 27 கிராம் உள்ளது.. அதனால், இவைகளில் வெள்ளாடுதான் சிறந்தது..
கொழுப்பு சத்து: மட்டனை விட, சிக்கன்தான் பெஸ்ட் என்று பலர் சொன்னாலும், உண்மை வேறுவிதமாக இருக்கிறது.. மட்டனில் குறைந்த அளவு கலோரிகளும், குறைந்த அளவு கொழுப்புக்களும், புரதச்சத்து கொஞ்சம் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால், இரும்புச்சத்தும், பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளன. சிக்கனைவிட குறைந்த அளவில் சோடியம் சிக்கனில் உள்ளது.. எனவே, மட்டனை எடுத்துக் கொண்டால், சிக்கனைவிட, மட்டனில் உள்ள சாப்ஸில் நிறைய நன்மைகள் உள்ளன..
சிக்கன் நல்லது என்றாலும், மொத்த சிக்கனுமே சாப்பிடுவது நல்லதில்லை.. சிக்கனில் ஒருசில பகுதிகளே உடலுக்கு நல்லது என்கிறார்கள்.. காரணம், சில பகுதிகளில் கொழுப்பு நிறைந்து இருக்கின்றன.. குறிப்பாக, கோழி கால்கள், இறக்கைகள், தொடைப்பகுதியில் கொழுப்பு அதிகமாம். அதேபோல, கோழியின் மார்பு பகுதியில் நிறைய புரோட்டீன்கள் உள்ளது. அதனால், எப்போது சிக்கனை வாங்கினாலும், மார்புப்பகுதி சதையை எடுத்துக்கொண்டால் நல்லது என்கிறார்கள்.
பெஸ்ட் உணவு: ஆக, சிக்கனைவிட ஒருபடி பெஸ்ட் உணவாக மட்டன் கருதப்படுகிறது. அதேசமயம், நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகளை இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. மட்டனில் அதிக சத்துக்கள் இருந்தாலும் சோடியத்தை, பொட்டாசியம் அதிகமாகவே உள்ளது. அதனால், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, இது சிறந்த தேர்வாக இருக்காது
சிக்கன் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று நம்பப்படுகிறது. இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் மற்றும் B, A, D போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிக்கனே சிறந்த உணவாக இருக்கு என்கிறார்கள்.. எனவே குறைவான அளவில், குறைந்த மசாலா, எண்ணெய் சேர்த்து, குறிப்பிட்ட பகுதிகளை சாப்பிட்டாலே போதும்.
காய்கறிகள் அவசியம்: நிறைய எண்ணெய் சேர்த்து மட்டன், சிக்கனை சமைக்காமல், டீப் ஃப்ரை செய்யாமல், கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்குமாம்.. அதேபோல, மட்டன், சிக்கன் சாப்பிடும்போது கண்டிப்பாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications