"ஆட்டுக்கறி" செய்றீங்களா? மட்டனில் இதை மட்டும் சேருங்க.. மீன் வாங்கும்போது, அந்த விஷயம் நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறைச்சியில் நிறைய புரோட்டீன்கள் இருப்பதால், வாரம் 2 நாள் தாராளமாக இறைச்சியை சாப்பிடலாம்.. ஆனால், சரியான இறைச்சியை எப்படி வாங்குவது?

ஆடாக இருந்தாலும்சரி, கோழியாக இருந்தாலும் சரி, ஆண் + பெண் இவற்றில், அதிக ருசியே பெட்டி ஆட்டுக்குத்தான், பெட்டை கோழிக்குதான். ஆரோக்கியமான ஆடாக இருந்தால், வெட்டும்போதே அதன் உடலிலிருந்து மொத்த ரத்தமும் வடிந்துவிடும்.. ஒரு சொட்டு ரத்தமும், அதன் உடம்பில் தங்கியிருக்காது.

Health Benefits of Mutton, Fish and Do you know How to cook Non Vegetarian food

ஒருவேளை இறந்து போனபின் அந்த ஆட்டை வெட்டியிருந்தால், ரத்தம் வடிந்து போகாமல், உடலிலேயே படிந்திருக்கும். ஆட்டின் நெஞ்சுப்பகுதியில் உள்ள தசைகள் மிகவும் மென்மையானதாக இருக்கும்.. தொடை, சந்துக்கறிகள் அதிகமாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும்.

சந்துக்கறிகள்: ஆட்டுக்கறியை, விரல்களை வைத்து லேசாக அழுத்திவிட்டு, கையை எடுத்துவிட வேண்டும். அப்போது, பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே வரும் பட்சத்தில், அது நல்ல கறி என்று கண்டுகொள்ளலாம்.. கையை வைத்து அழுத்திய இடத்தில் பள்ளம் போல அமுங்கி விட்டால், அந்த கறியை வாங்க வேண்டாம். நெஞ்சுப்பகுதி மற்றும் முதுகுப்பகுதி தசைகள் மென்மையானதாக இருக்கும்.

எப்படி வாங்க வேண்டும்: அதேபோல, மட்டனில் தோல் பகுதியை நீக்கிவிட்டு வாங்க வேண்டும. காரணம், தோல் பகுதிகளில் அதிக கலோரிகள் நிறைந்திருக்கும்.. இதுதான், இதய கோளாறுகளுக்கும் காரணமாகின்றன.. அதனால், தோல் பகுதியை நீக்கிவிட்டு வாங்க வேண்டும்.. ஆட்டுக்கறி வெட்டப்பட்டு, 5 மணி நேரத்திற்குள் வாங்கி, சுத்தம் செய்து, சமையலும் செய்து, சாப்பிட்டு முடித்திட வேண்டுமாம்.

செம்மறி ஆட்டுக்கறியைவிட வெள்ளாட்டுக்கறியே சிறந்தது.. 100 கிராமில் 130 காலரிதான் இருக்கிறது.. கொழுப்பு 3 கிராம்தான் உள்ளது.. அதேசமயம், நிறைய எண்ணெய் நிறைய சேர்த்து இந்த ஆட்டுக்கறியை சமைக்க கூடாது.. ஆனால், கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், காலி பிளவர், தோல் இருக்கும் உருளைக்கிழங்கு போன்றவைகளுடன் சேர்த்து மட்டன் சமைக்கும்போது, மட்டனில் உள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்பட்டுவிடும்..

மட்டன் மீன்: மட்டன், கோழி, மீன், என எதுவாக இருந்தாலும், குழம்பு வடிவத்தில் எடுப்பதே நல்லது. அப்படி சாப்பிட்டால்தான், அந்த இறைச்சியில் உள்ள ஆற்றல், உடனடியாக நம்முடைய உடலில் சேரும்.. அதேபோல, கோழியை வாங்கும்போது, சிலர் தோலுரித்து வாங்குகிறார்கள்.. ஆனால், தோலுடன் சமைப்பதுதான் சிறந்தது என்கிறார்கள். அதேபோல, நாட்டுக்கோழி, கறி என எது செய்தாலும், குக்கரில் நிறைய விசில் வரும்வரை வேகவைக்கக்கூடாது. இதற்கெல்லாம் குக்கரை பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள்.

அதிக அழுத்தத்தில் வேகும் உணவுப்பொருள் எதுவானாலும், சத்துக்களை இழக்ககூடுமாம். இது நம்முடைய ஜீரணத்தையும் தாமதப்படுத்திவிடும். எனவே, மண் பாத்திரத்தில் இறைச்சியை செய்வதே சரி என்கிறார்கள். மீன், கோழி, ஆடு என எதுவாங்கினாலும், அதிலுள்ள ரத்தத்தை சுத்தமாக கழுவி எடுத்துவிட வேண்டும்..

மாரினேட் : அதேபோல, இறைச்சியை மாரினேட் செய்யும்போது அல்லது சுத்தப்படுத்தி வைக்கும்போது, உப்பு சேர்க்கக்கூடாது.. சமைக்கும்போதுதான் உப்பு சேர்க்க வேண்டுமாம். பெரும்பாலும், மட்டன் குழம்புடன் முருங்கைக்காய் சேர்த்து சமைத்தால், மணமும் சுவையும் அதிகரிக்கும். இதை இட்லி, தோசைக்கும் வைத்து கொள்ளலாம்.

மீன் வாங்கும்போது, மீனை தொட்டதுமே, அதன் தோல்கள் உரிந்துவந்தால், அது பழைய மீன் என்று அர்த்தம். அதேபோல, பழைய மீன்கள் என்றால், மீனின் கண்கள் வெள்ளை கலரில் இருக்கும்.. புதிய மீன்களின் கண்ணில் வெள்ளை தெரியாது..

மீனின் செவுள்கள்: மீனின் செவுள்களை நிமிர்த்தி பார்த்தால் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பாக இருக்கும்.. ஒருவேளை வெள்ளை கலராக செவுள்கள் இருந்தால், அது பழைய மீனாக இருக்கலாம். செவுளை பிளந்து அந்த இடத்தை தொட்டு பார்த்தால் கைகளில் பிசின் போல உணர முடியும்.. அப்படி இருந்தால் அது ஃபிரெஷ் மீன்.

மீனை கழுவும்போது, கல் உப்பை பயன்படுத்தி தேய்த்தால், மீனிலுள்ள வழவழப்புத்தன்மை நீங்கிவிடும். அயிரை மீனை இப்படித்தான் கல் உப்பு போட்டு தேய்த்து சுத்தப்படுத்துவார்கள். விரால் மீன்களை, சிமெண்ட் தரையில், தோல் தேய தேய்த்து எடுப்பார்கள்..

அதாவது, சாம்பல் போன்ற பொருட்களை வைத்து, பொன்னிறமாக இருக்கும் மீன், வெள்ளை கலராக மாறும் அளவிற்கு தேய்த்து எடுத்து சுத்தம் செய்வார்கள். அந்த வழுவழுப்பு கொஞ்சம்கூட இல்லாமல் பார்த்து கொள்வார்கள். தென்மாவட்டங்களில் மீன் குழம்பு ருசியாக இருக்க இதுவும் ஒரு சீக்ரெட் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+