ஆட்டு தலையின் சத்துக்கள்.. தாய்மார்களுக்கு தலைக்கறி தரப்படுவது ஏன் தெரியுமா? ஆட்டிறைச்சி ஆச்சரியம்
சென்னை: ஆட்டுக்கறியின் தலைப்பகுதியில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியும்? குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தலைக்கறியை சமைத்து தருவது ஏன் தெரியுமா? தலைக்கறியை வாங்கும்போது, நாக்கு பகுதியையும் கேட்டு வாங்க வேண்டுமாம்.. ஏன் தெரியுமா?
ஆட்டுக்கறியின் ஒவ்வொரு பாகத்திலும், ஒவ்வொரு சத்துக்கள் உள்ளன.. அந்தவகையில், ஆட்டின் தலைக்கறியில் இரும்புச்சத்து, வைட்டமின் B12, நியாசின், செலினியம், துத்தநாகம், போன்ற சத்துக்கள் உள்ளன..

ஆட்டு தலைக்கறி: ஆட்டின் தலைக்கறியை சமைத்து சாப்பிடும்போது, அதில் உள்ள சத்துக்கள் இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு அழற்சியின் அபாயத்தை குறைப்பதாக கூறுகிறார்கள்.. இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், வாரம் ஒருமுறையாவது குறிப்பிட்ட அளவு ஆட்டு தலைக்கறியை சாப்பிட வேண்டுமாம்.
அதுமட்டுமல்ல, இந்த தலைக்கறியில் CLA என்ற இணைந்த லினோலிக் அமிலம் அதிகளவில் இருப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தகிறது.. உடலினுள் ஏற்படும் பல அழற்சிகளையும் தடுக்கும். தொடர்ந்து தலைக்கறியை சமைத்து சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு வருவதில்லையாம். இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால், ஹீமோகுளோபின் பிரச்சனையும் தீரும்.
மன அழுத்தம்: ஆட்டு தலைக்கறி சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் நேரத்தில் வலியும் குறையும்.. மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். சரும ஆரோக்கியத்துக்கும் சிறந்த மருந்தாக இந்த ஆட்டுத்தலை உள்ளது.
குழந்தை பெறுவதற்கு முன்பேயே, கர்ப்பிணிகளுக்கு ஆட்டு தலைக்கறியை சமைத்து சாப்பிடும்போது, அதில் உள்ள சத்துக்கள் பிறப்பு குறைபாட்டின் அபாயத்தை குறைக்கிறது.. அத்துடன், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும், எவ்வித குறையும் இல்லாமல் பிறக்க வழிவகை செய்கின்றன.
தலைக்கறி குழம்பு: அதேபோல, குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறி குழம்பு வைத்துக்கொடுத்தால், அவர்களது இடுப்பு வலிக்கு நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், தாய்ப்பால் சுரப்பும் அதிகமாக இருக்கும். அதுமட்டுமல்ல, பிறந்த குழந்தைக்கும் தலை சீக்கிரமாக நிற்க வேண்டுமானால், இந்த தலைக்கறியைதான், பாலூட்டும் பெண்களுக்கு சமைத்து தருவார்கள்... ஆட்டின் தலை, இதயம் சார்ந்த வலிகளையும், கோளாறுகளையும் நீக்குவதுடன், குடலை வலிமையாக்க உதவும்... மேலும், எலும்புகளை வலுப்படுத்துகிறது..
ஆடு நாக்கில் செலினியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. 100 கிராம் நாக்கில் 188.6 கலோரிகள், 13.7 கிராம் கொழுப்பு, 16.6 கிராம் புரதம் ஆகியவை உள்ளன... இதனால், தலைக்கறியுடன் நாக்கையும் சேர்த்து சமைத்து சாப்பிடும்போது, வைட்டமின் ஊட்டச்சத்து, நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. இனப்பெருக்க செயல்திறனை அதிகரிக்கிறது.
தவிர்க்கலாம்: எனவே உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் வாரம் 1 முறை அல்லது மாதம் 2 முறையாவது தலைக்கறி சாப்பிடலாம். அதேசமயம், சிவப்பு இறைச்சியில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அதிகம் உள்ளது என்பதால், மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம் என்கிறார்கள் டாக்டர்கள். அதனால், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், உடல்எடை அதிகமாக உள்ளவர்கள், மட்டனை முற்றிலும் தவிர்த்துவிடலாம்.. உடல் ஆரோக்கியமும், உடலுழைப்பும் மிக்கவர்கள், குறைந்த அளவு சாப்பிடலாம்..!!












Click it and Unblock the Notifications