நெஞ்செலும்பு செய்றீங்களா.. ஆட்டுக்கறியில் இதை மறந்துடாதீங்க.. கொலாஜனை அள்ளி அள்ளி தரும் "மார்கண்டம்"
சென்னை: மட்டனை பொறுத்தவரை, அதன் ஒவ்வொரு உறுப்புகளும், நம்முடைய ஒவ்வொரு உறுப்புகளுக்கும் நன்மை தரும் என்று சொல்வார்கள்.. அதனால்தான், மட்டனுக்கான மவுசு எப்போதுமே உயர்ந்து காணப்படுகிறது. அந்தவகையில், நெஞ்சு எலும்புகளின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
உடலுக்கு தீங்கு என்று சொல்லியே, சிலர் ஆட்டுக்கறியை ஒதுக்கிவைத்துவிட்டார்கள்.. சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் இந்த ஆட்டுக்கறியை தொடவே கூடாது.

ஆரோக்கியம்: ஆனால், உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாராக இருந்தாலம், மாதம் ஒருமுறையாவது, குறைந்த அளவில் மட்டன் சாப்பிட்டால், உடலுக்கு வலு கிடைக்கும்.. உடல் சூடு தணியும்.. சருமத்துக்கான பளபளப்பு கூடும்.. பார்வை கோளாறுகள் நீங்கும்..
ஆட்டுக்கறியைவிட, அதன் உறுப்புகளே சத்துக்கள் நிரம்பியவை.. ஆட்டின் கண்கள், கபம், சளி, இருமல், நீங்கும்.. மார்புக்கு பலத்தை தரக்கூடியது.. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக்கூடியது.. ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.. ஆட்டு மூளையை சாப்பிட்டால், கிட்னியில் உள்ள கசடுகளை நீக்கிவிடும்.
ஆட்டின் தலைக்கறியை சாப்பிட்டாலல், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும்.. ஆட்டின் குடல் செரிமானக் கோளாறுகளை சீர்செய்யக்கூடியது. ஆட்டு கொழுப்புகளை, இடுப்பு பகுதிக்கு நன்மை தரக்கூடியது.
நெஞ்சு எலும்புகள்: அந்தவகையில், மிக முக்கியமானது நெஞ்சு எலும்புகள் ஆகும்.. மார்கண்டம் என்று சொல்வார்கள்.. ஆட்டின் விலா எலும்பு பகுதியைதான் மார்கண்டம் என்பார்கள்.
பெரும்பாலும் இதை சூப் வைத்தே குடிப்பார்கள்.. இதற்கு காரணம், எலும்புகளை நன்றாக வேக வைக்கும்போது, எலும்பு மஜ்ஜையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வெளிப்பட்டு அதுதான் நமக்கு முழுமையான சத்துக்களாக கிடைக்கின்றன.. இதில், கொலாஜன், குளுட்டமைன், புரோலின், கிளைசின், காண்ட்ராய்டின் சல்பேட் போன்றவை நிறைந்துள்ளதால், மூட்டுகள் + எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன..
குடல் பாதுகாப்பு: அத்துடன் குடல் பாதுகாப்பில் பெரும்பங்கு இந்த நெஞ்செலும்பு சூப்புக்கு உள்ளது.. இதனால் குடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. அடிக்கடி நெஞ்செலும்பு சூப் குடித்து வந்தால், வயிற்றுப்போக்கு, வாயு தொந்தரவுகள் நீங்கும். நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.. வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தியை அதிகரிக்க செய்வதுடன், எதிர்ப்பு சக்தியையும் பெருக்குகிறது.
கொலாஜன் இந்த எலும்பு சூப்பில் நிரம்பி உள்ளதால், நம்முடைய சருமத்துக்கும், தலைமுடி, தோல், நகங்களுக்கும் வலு தருகிறது.. தலைமுடிகள் பலம் பெறுகின்றன.. சரும சுருக்கங்கள் மெல்ல மெல்ல விலகுகின்றன.. இதய நோய், புற்றுநோய், நீரிழிவு போன்ற பல நாட்பட்ட நோய்களுக்கு அடிப்படை காரணம் அழற்சி என்று சொல்வார்கள்.. ஆனால், இந்த எலும்பு சூப் குடித்து வரும்போது, அந்த தொந்தரவுகள் எல்லாமே குறைக்கப்பட்டுவிடுகின்றன.
கர்ப்பிணிகள்: ஆனால், நெஞ்செலும்பு என்று சொன்னாலே, அதன் முதன்மையான பலத்தை தருவதுதான்.. ஆபரேஷன் செய்துவிட்டு சிகிச்சையில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு இந்த சூப் வைத்து தருவார்கள்.. சளி மற்றும் இருமலுக்கும் இந்த சூப் வைத்து தருவார்கள்.. பிரசவம் முடிந்த பெண்களுக்கும் நெஞ்செலும்பு சூப் தயார் செய்து கொடுப்பார்கள்..
வளரும் குழந்தைகள், பருவமடைந்த பெண்கள், பாலூட்டும் பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், பலவீனமானவர்கள் என அத்தனை பேருக்கும் இந்த நெஞ்செலும்பு சூப் மட்டுமே பிரதான பலத்தை தருகிறது..
பட்டை, லவங்கம், கிராம்பு, மிளகு, சீரகம், பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி, சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கல் உப்பு, சிறிது நல்லெண்ணெய் சேர்த்து, இறுதியில் 2 அல்லது 3 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். 7 அல்லது 8 விசில் வைத்தால்தான், எலும்புகளில் உள்ள சத்துக்கள் முழுமையாக இறங்கும்.
இதை வேறு வகையாகவும் செய்யலாம்.. ஒரு குக்கரில் சிறிது எண்ணை ஊற்றி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து தாளித்து, நன்றாக வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்க வேண்டும்..
மார்கண்டம் சூப்: இப்போது சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள நெஞ்செலும்பை அதில் கொட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி வேக வைத்து எடுத்தால் சூப் ரெடி. ஆனால், இதில் நிறைய கொழுப்புகள் இருப்பதால், மதிய உணவுக்கு மட்டுமே சாப்பிட வேண்டும். இரவில் சாப்பிட்டால், நெஞ்செரிச்சல், அஜீரணம் உள்ளிட்ட தொந்தரவுகள் வரலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications