Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் அந்த "இலை" போதும்.. சர்க்கரை நோய் ஈஸியா தீரும்.. ஆச்சரியத்தை அள்ளி தரும் "ப்ளூ கலர்" பழங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமரத்தை போல, வேப்ப மரத்தை போல, வாழை மரத்தை போல, முருங்கை மரத்தை போல, முழுக்க முழுக்க பலன்தரும் நாவல் மரம்.. இந்த மரத்தின் பழம், விதை, இலை, பட்டை என அத்தனையும் மருத்துவம்தான்.. மகத்துவம்தான்.

வைட்டமின் C, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஃபோலிக் அமிலம் என அத்தனை சத்துக்களும் உள்ளன.. அதனால்தான், சித்த மருத்துவத்தில் நாவல் பழத்தின் தேவையை தவிர்க்கவே முடியாது.. சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் சீன மருத்துவ முறைகளில் நாவல் பழத்தின் கொட்டைகளை பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள்.. அந்த அளவுக்கு மருத்துவ சக்திகள் நிறைந்த பழம் இது..

Health Benefits of Naval Fruit and Do you know how to use Naval Fruit Leaves

கலோரி பழம்: இந்த பழத்தை பொறுத்தவரை, உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கக்கூடியது. இதனால், ரத்தசோகை பிரச்சனை நீங்கும்.. குறைந்த கலோரி பழம் என்பதால், உடல் எடை குறைப்போருக்கு, இந்த பழம் சிறந்த தேர்வு என்று சொல்லலாம்.. காரணம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் நாவல் பழம் உதவுகிறது

சருமத்தை பாதுகாக்க கூடியது.. முகப்பருக்களை நீக்கி, முக சுருக்கங்களையும் குறைக்கிறது. இதனால், வயது முதிர்ச்சி தள்ளிப்போடப்படுகிறது.. சருமமும் பளபளப்பாகிறது.

துவர்ப்பு சுவை: துவர்ப்பு தன்மையுடைய அத்தனை உணவுப்பொருளும் நமக்கு நன்மையை தரக்கூடியது. அந்தவகையில், இந்த நாவல் பழமும், இனிப்பு, புளிப்பு சுவை ஓரளவு இருந்தாலும், துவர்ப்பும் அதிக அளவு உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.. இந்த பழத்தின் விதைகளை இடித்து பவுடராக்கி அதை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சிறுநீர்ப்போக்கு குறையும். ஆனால், மருத்துவரின் ஆலோசனையை பெற்றே இதை செய்ய வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.. நுரையீரலுக்கும் பாதுகாவலனாக அமைகிறது.. கால்சியம் நிறைந்த இந்த பழம், எலும்புகள், பற்கள் வலு பெற துணை புரிகிறது..

நாவல்பழ விதைகள்: குடல்புண்கள், வாய்ப்புண்கள் ஆறிவிடும்.. இதய நோய்கள் வராமல் தடுப்பதில் நாவல் பழத்திற்கு முக்கிய இடமுண்டு. ஞாபக சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.. செரிமான கோளாறுகளை சரிசெய்து, ஜீரணத்தை பெருக்குகிறது.. இதனால் குடல் பகுதி சிறந்த முறையில் செயலாற்ற துணைபுரிகிறது.. நாவல் பழ விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்

பழங்களின் நன்மைகளை போலவே, இந்த நாவல் இலைகள் அபரிமிதமான சக்தியை கொண்டது. புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, சாம்பல் சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து என இந்த இலைகளிலும் சத்துக்கள் அடங்கியுள்ளன. நாவல் இலைகள் நுண்கிருமிகளை போக்கக்கூடிய வலிமை கொண்டவைஇருமல், சளி மற்றும் தொண்டை பிரச்சனைகளுக்கு இந்த இலைகள், அருமருந்தாகின்றன..

வயிற்றுப்போக்கு: வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த இலைகளை சுத்தமாக கழுவி, அதை இடித்து சாறு எடுத்து, 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும். இந்த மரத்தின் பட்டையை, தண்ணீரில் கொதிக்க செய்து, ஆறவைத்து குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். இந்த இலைகளை கஷாயம் வைத்தும் சாப்பிடலாம். ஆனால், டாக்டர்களின் ஆலோசனையுடன் இவைகளை பயன்படுத்துவதே சிறந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+