ஓம வாட்டரை வெறும் வயிற்றில் குடித்தால் என்னாகும்.. ஆரோக்கியம் காக்கும் ஓமம் விதைகள்.. ஹெல்த் டிப்ஸ்
சென்னை: மாதவிலக்கு நேரத்தில் பெண்களை ஓம வாட்டர் குடிக்க சொல்வது ஏன் தெரியுமா? உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய அற்புத மூலிகையாக ஓமத்தை சொல்வது ஏன் தெரியுமா? ஓம விதைகளிலுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன? இதை எப்படி சாப்பிடுவது? இவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
ஓம விதைகளில், கார்போஹைட்ரேட், கொழுப்பு, சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்தும், புரதச்சத்தும் அபரிமிதமாக நிறைந்துள்ளன..
பெரும்பாலும் இதனை சமையலில் செரிமானத்துக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.. அல்லது அஜீரண கோளாறுகளுக்காகவே இந்த ஓமம் உள்ளதாகவும் பலரும் நினைக்கிறார்கள்.. உண்மையை சொல்லப்போனால், உடலிலுள்ள முக்கிய பாகங்களின் செயல்பாடுகளுக்கு ஓமம் உதவுகிறது

நுரையீரல் தொல்லை
இதில் முதன்மையானதாக நுரையீரலை சொல்லலாம்.. இருமல், சளி, காய்ச்சல் போன்ற சுவாச கோளாறுகளை ஓமம் சரிசெய்கிறது. இதுபோன்ற நேரங்களில் ஓமத்தை சாப்பிடும்போது, நுரையீரலில் தங்கியிருக்கும் சளியை இளக்கி வெளியேற்றுகிறது.. அதேபோல, ஓமத்தை, ஒரு மெல்லிய துணியில் கட்டி மூக்கினால் நுகரும்போது, மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.. ஒற்றை தலைவலி இருந்தாலும், ஓமத்தை பவுடர் செய்து லேசாக தேய்க்கும் வலி பறந்துவிடும். பாரம்பரியமாக ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச நிலைகளைப் போக்க ஓம வாட்டர் பயன்படுத்தப்படுகிறது.
ஓம வாட்டர் - கெட்ட கொழுப்பு
ஓமத்திலிருந்து எடுக்கப்படும் ஓம வாட்டர், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது.. காரணம், அந்த அளவுக்கு நார்ச்சத்துக்கள் ஓம விதைகளில் உள்ளன.. இதனால் உடல் எடை குறைவதுடன், நல்ல கொழுப்புகளும் பெருகுகின்றன. வயிறு சம்பந்தமான உபாதைகளை தீர்க்க ஓமம் உதவுகிறது..
வயிறு வலி, வயிறு உப்புசம், வாயு பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கு ஓமம் உதவுகிறது.. இதனால், வயிற்றில் தங்கியிருக்கும் கழிவுகள், நச்சுகள் விலகி குடல் இயக்கத்தை சீராக்குகிறது.. குறிப்பாக மலச்சிக்கல் உள்ளவர்கள், 1 கிளாஸ் தண்ணீரில் ஓமம் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரும்போது நிவாரணம் கிடைக்கும். அல்லது ஓம விதைகளை சுடுநீரில் கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். இதில் வயிற்றில் உள்ள புண்களும் ஆறும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
குடல் பாதுகாப்பு
ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் ஓமம் பாதுகாக்க செய்கிறது.. வயிறு உப்புசம், வாயுத் தொல்லை மற்றும் பசியின்மை ஏற்படும்போது ஓம விதைகளுடன் சுக்கு சேர்த்து தூள் செய்து, அதில் நாட்டுச்சர்க்கரை கலந்து சிறு சிறு உருண்டைகளாக்கி ஒரு உருண்டை சாப்பிட்டு வரும்போது நிவாரணம் பெறலாம்.
முழங்கால் வலி, மூட்டு வலிகளால் அவதிப்படுபவர்கள் ஓம விதைகளை பயன்படுத்தலாம்.. சிறிது ஓமத்தை மைய விழுதாக அரைத்து, வலியுள்ள மூட்டுகளில் தடவினால் தீர்வு கிடைக்கும். அதேபோல, ஓம வாட்டரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது மூட்டு வலி மற்றும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது.
பெண்களுக்கு தேவையான மருந்து
பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக வலி இருந்தால், ஓம வாட்டரை குடிக்கலாம்.. அல்லது சிறிது தண்ணீரில் ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த கலவையில் கற்பூரத்தை பொடி செய்து, மிதமான சூட்டில் இடுப்பில் தேய்க்கும்போது வலி பறந்துவிடும்.
பல நன்மைகளை ஓம வாட்டர் தந்தாலும், ஆயினும், சிலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எனவே, ஓம வாட்டரை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications