பாரெக்ஸ் டிரேடிங்கில் இவ்வளவு லாபம் வருமா? குரளி வித்தையா? உண்மை பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் சமூக வலைதளங்களில் 'பாரெக்ஸ் டிரேடிங்' (Forex Trading) பயிற்சி தொடர்பான வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் காட்டப்பட்ட காட்சிகள் இணையவாதிகளைத் தூக்கி வாரிப்போட்டன. காரணம், அதில் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்கள் தங்களுக்குக் குறுகிய காலத்தில் கோடிகளிலும் லட்சங்களிலும் லாபம் கிடைத்துள்ளதாகத் தங்களது மொபைல் திரையைக் காட்டினார்கள். "பங்குச்சந்தையில் முதலீடு செய்து இவ்வளவு விரைவாகப் பணம் சம்பாதிக்க முடியுமா?" என்று பலரையும் ஆச்சரியப்பட வைத்த அந்த வீடியோ குறித்து, இணையவாசிகளிடையே மிகப்பெரிய விவாதம் எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சை:

அந்த வீடியோவில், பயிற்சி அளிக்கும் நபர் அங்கிருப்பவர்களைப் பார்த்து, "யாரும் செல்ல வேண்டாம்; உங்கள் லாபத்தைக் காட்டிவிட்டுச் செல்லுங்கள்" என்று கூறுகிறார்.

அப்போது ஒரு பெண், "டெபாசிட் ₹50,000, கிடைத்த லாபம் ₹4.43 லட்சம்" எனக் காட்டுகிறார்.

Can one earn millions in Forex trading Is it a magic trick What is the real story behind it

மற்றொரு நபர், "₹50,000 டெபாசிட் செய்து ₹1.44 லட்சம் லாபம் பெற்றேன்" என்கிறார்.

இன்னொருவர், "$150 டெபாசிட் செய்து $600 லாபம் எடுத்தேன்" எனக் கூறுகிறார்.

இந்த வீடியோ பரவியதை அடுத்து, "டிரேடிங்கில் இவ்வளவு லாபம் வருமா அல்லது இது வெறும் குரளி வித்தையா?" என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும், பலர் இது முற்றிலும் போலி என்றும், இந்தியாவில் பாரெக்ஸ் டிரேடிங் செய்வது சட்டவிரோதம் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.

நிதி நிபுணரின் தெளிவான விளக்கம்:

இந்நிலையில், பொருளாதாரம் மற்றும் டிரேடிங் துறையைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் இதன் பின்னணியில் உள்ள ஆபத்துகளைப் பற்றித் தெளிவாக விளக்கி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"கூவி கூவி பாரெக்ஸ் டிரேடிங் சொல்லித் தருகிறார்களே, உண்மையிலேயே இந்தியாவில் இருந்துகொண்டு டாலரில் சட்டப்பூர்வமாகச் சம்பாதிக்க முடியுமா என்றால், நிச்சயமாக முடியாது!

கிரிப்டோ மற்றும் பிளாக் மணி சிக்கல்

இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத தரகர்கள் (Unauthorized Brokers) மூலம் பாரெக்ஸ் டிரேடிங் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் உங்களின் இந்திய வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பாரெக்ஸ் புரோக்கர் கணக்கிற்குப் பணத்தை அனுப்ப முடியாது.

இதற்காகப் பெரும்பாலானோர் Binance போன்ற தளங்கள் மூலம் தங்களது ரூபாயை USDT (Crypto) ஆக மாற்றி, அதை பாரெக்ஸ் புரோக்கருக்கு அனுப்புகிறார்கள். லாபம் வந்த பிறகும் அதே வழியில் USDT-ஐ மீண்டும் ரூபாயாக மாற்றுகிறார்கள்.

வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம்

வெளியில் இருந்து பார்க்கும்போது இது எளிதான வழிமுறையாகத் தோன்றினாலும், இங்குதான் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. நீங்கள் ரூபாயைக் கொடுத்து USDT வாங்கும்போதும் சரி, லாபத்தை USDT-லிருந்து ரூபாயாக மாற்றும்போதும் சரி (P2P Trading), அப்பணம் பெரும்பாலும் சட்டவிரோத அல்லது கருப்புப் பணக் கணக்குகளுடன் தொடர்புடையதாக இருக்கும்.

இதனால், 90% நேரங்களில் உங்களது முதன்மை வங்கிக் கணக்கு காவல் துறையால் முடக்கப்படவே அதிக வாய்ப்புள்ளது. உங்களது கணக்கில் ₹5 லட்சம் இருக்கும் போது அக்கணக்கு முடக்கப்பட்டால், நீங்கள் காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற அலைச்சல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் குற்றமற்றவர் என்று நிரூபித்தால் மட்டுமே அந்த முடக்கம் நீக்கப்படும்.

நிதி நிபுணரின் எச்சரிக்கை

"இவ்வளவு பெரிய சட்ட ரீதியான ஆபத்துகளை எதிர்கொண்டு இந்தியாவில் இருந்து பாரெக்ஸ் டிரேடிங் செய்ய வேண்டுமா என்பதை யோசித்துப் பாருங்கள். 'நான் பாரெக்ஸ் டிரேடிங் செய்தே தீருவேன்' என்று நினைத்தால், நேராக துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று அங்குச் சட்டப்பூர்வமாகச் செய்யலாம்.

அதை விடுத்து, இந்தியாவில் இருந்துகொண்டு முறையற்ற வழிகளில் பாரெக்ஸ் டிரேடிங் செய்து, சம்பாதித்த முதலீடு முழுவதையும் இழந்துவிடாதீர்கள். நல்ல நிறுவனங்களைக் கண்டறிந்து, சரியான மதிப்பில் உள்ள பங்குகளில் முதலீடு செய்து உங்களது பணத்தைப் பாதுகாப்பாகச் சேமியுங்கள்!" என்று அவர் எச்சரித்துள்ளார்.

அதேநேரம் சில நெட்டிசன்கள் பாரெக்ஸ் டிரேடிங்கிற்கு இந்தியாவில் தடை இல்லை.. கட்டுப்பாடு தான் விதித்துள்ளதாக கூறி விளக்கம் தருகிறார்கள். ஆனால் அவர்களும் அறிய வேண்டிய உண்மைகளை பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி வெளிநாட்டுச் செலாவணி வர்த்தகத்திற்கு (Forex Trading) கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்தியாவில் NSE, BSE, MCX போன்ற அங்கீகரிக்கப்பட்ட பங்குச்சந்தை தளங்களில் மட்டுமே, அதுவும் இந்திய ரூபாய் ஜோடிகளில் (E.g., INR-USD, INR-EUR, INR-GBP, INR-JPY) மட்டுமே வர்த்தகம் செய்ய அனுமதி இருக்கிறது. மற்றவகையான வணிகத்திற்கு முற்றிலும் தடை உள்ளது.

சர்வதேச ஆன்லைன் தளங்களான Exness, OctaFX, XM, Olymp Trade போன்ற தளங்களில் டாலரிலோ அல்லது பிற வெளிநாட்டு நாணயங்களிலோ வர்த்தகம் செய்வது FEMA சட்டப்படி குற்றம். இதில் ஏமாந்து போய் மக்கள் பணத்தை பறிகொடுக்கக்கூடாது என்பதற்காகவே ரிசர்வ் வங்கி 'Alert List' என்ற பெயரில் 75-க்கும் மேற்பட்ட போலி / அங்கீகரிக்கப்படாத பாரெக்ஸ் தளங்களின் பட்டியலை வெளியிட்டு எச்சரித்திருக்கிறது. அதேபோல் சமூக வலைதளங்களில் பரவும் "₹50,000 போட்டேன், ₹4 லட்சம் வந்தது" என்பவை பெரும்பாலும் இரண்டு வழிகளில் ஏமாற்றம் நடக்கும். நிஜப் பணத்தைப் பயன்படுத்தாமல், போலி Virtual Moneyயை வைத்து டிரேடிங் செய்து லாபம் போலக் காட்டுவார்கள்.

அடுத்ததாக போலி புரோக்கர் மென்பொருள்களை வைத்து ஏமாற்றுவார்கள். நீங்கள் பணத்தை டெபாசிட் செய்யும் வரை லாபம் வருவது போல் ஆப்ஸில் காட்டும். ஆனால், அந்தப் பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்ற முயலும் போது, "கூடுதல் வரி கட்டுங்கள்", "கமிஷன் கட்டுங்கள்" என்று சொல்லி ஏமாற்றி பணத்தை மொத்தமாக திருடிவிடுவார்கள். எனவே இதுபோன்ற மோசடிகளை மக்களே ஒரு போதும் நம்பாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+