பனங்கிழங்கில் கொட்டி கிடக்குது ஆரோக்கியம்.. உள்ளுறுப்புக்கு பலம் தரும் பனம்பழம்.. யார் தவிர்க்கலாம்
சென்னை: பனங்கிழங்கில் உள்ள சத்துக்கள் என்னென்ன? பனம்பழங்களை யார் யார் சாப்பிடலாம்? யார் யார் சாப்பிடக்கூடாது? சர்க்கரை நோயாளிகள் பனம்பழத்தை சாப்பிடலாமா? பெண்களுக்கு ஏற்ற பழம் என்று இதனை ஏன் சொல்கிறார்கள்? தெரியுமா?
பனங்கிழங்குகளில் வைட்டமின் B, C நிறைந்த பனங்கிழங்கில் பாதாமுக்கு இணையான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. வெறும் 100 கிராம் பனங்கிழங்கில் 87 கிலோ கலோரிகளும், 77 கிராம் நீர்ச்சத்தும் அடங்கியிருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது.

குளிர்ச்சி தன்மை: இந்த கிழங்குகள் குளிர்ச்சி தன்மை கொண்டவை.. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. மலச்சிக்கல் அதிகமாக இருந்தால், பனங்கிழங்கை வேகவைத்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு இடித்து சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும்.
உடலுக்கு வலு சேர்க்கக்கூடியது.. அனீமியா தொந்தரவு உள்ளவர்கள், பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், இரும்பு சத்து உடலுக்கு கிடைக்கும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது என்பதால், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம்.
ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகளை தடுக்கக்கூடிய தன்மை பனங்கிழங்குக்கு உண்டு.. ரத்தக் கொழுப்புக் கட்டிகள் உருவாவதை தடுப்பதால், இதய நோய்களையும் நம்மை நெருங்கவிடாமல் செய்கிறது. கால்சியம் சத்துக்களும், மெக்னீசியமும் அதிகமாக இந்த பனங்கிழங்கில் உள்ளதால், எலும்புகள் ஆரோக்கியத்திற்கு தூண்டுகோலாகிறது.
தேங்காய்ப்பால்: பனங்கிழங்குகளை தேங்காய்ப் பால் கலந்து சாப்பிட்டால் உடலுறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கருப்பை ஆரோக்கியத்தை பாதுகாப்பதில், இந்த பனங்கிழங்குக்கு பெரும் பங்கு இருக்கிறது.. இந்த கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். விந்து எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், அதன் வீரியத்தை பெருக்குவதிலும் பனங்கிழங்குகள் சிறப்பாக செயலாற்றுகின்றன.
பனம்பழங்களை பொறுத்தவரை, பப்பாளி, மாம்பழத்தைவிட அதிகமான வைட்டமின் C, கால்சியம் சத்துக்கள் இருக்கிறதாம்.. பனங்கிழங்கு சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நெருங்குவதில்லை.. காரணம், பீட்டா கரோட்டின் என்ற வைட்டமின் A சத்துக்கள் பனம்பழத்தில் அதிகமாக உள்ளன.
கலோரிகள்: கார்போஹைட்ரேட்டு, கொழுப்பு, சர்க்கரை, நார்ச்சத்து, புரோட்டீன், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், வைட்டமின் B6 போன்ற சத்துக்கள் பனம்பழத்தில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது. மிகக்குறைந்த அளவு கலோரிகளையும் அதிக அளவு பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்களும், நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் பெருகி கிடக்கின்றன.
நீரிழிவு நோயாளிகளும் பனம்பழத்தை சாப்பிடலாம். உணவு செரிமானம் பாதிப்பு இருந்தால், பனம்பழத்துடன் சிறிது வெல்லம் வைத்து சாப்பிட்டு வரலாம்.. வைட்டமின் C நிறைய உள்ளதால் சருமம் பொலிவு பெறுகிறது. ஆண்களின் குறைபாடுகளை நீக்கவும், சிறுநீரகம் பிரச்சனைகள் நெருங்காமல் தடுக்கவும், பனம்பழங்கள் உதவுகின்றன. ஆனாலும், பனம்பழத்தில் மாவுச்சத்து அதிகம் என்பதால், அதிகமாக சாப்பிடக்கூடாது. இதனால் வயிறு உபாதைகளும், தசைப்பிடிப்பும் ஏற்படலாம்.
பெண்கள்: அதேசமயம், பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிடாய் உள்ள பெண்கள், பித்தப்பை பாதிப்பு இருப்பவர்கள், கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் அலர்ஜி உள்ளவர்கள் பனம்பழத்தை தவிர்க்கலாம் அல்லது மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடலாம்..!!
அதேபோல, பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீர் உடல் ஆரோக்கியத்தை காக்கும் ஊட்டச்சத்து பானமாகும்.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும், உணவு ஆராய்ச்சி கழகமும் இணைந்து 2 வருட ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தன.
பதனீர்: அதில், பதனீரில் உள்ள சத்துக்கள் ஆச்சரியப்பட வைக்கும் ரகம். 8 அவுன்ஸ் பதனீரில் காரத்தன்மை 7.2 கிராமும், சர்க்கரை சத்து 28.8 கிராமும், சுண்ணாம்பு சத்து 35.4 மில்லி கிராமும், இரும்பு சத்து 5.5 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 32.4 மில்லி கிராமும், தயாமின் 82.3 மில்லி கிராமும், ஆஸ்கார்பிஸ் அமிலம் 12.2 மில்லி கிராமும், புரதசத்து 49.7 மில்லி கிராமும், நிகோடிக் அமிலமும், வேறு சில சத்துக்களும் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பதனீர் குடிக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications