தினந்தோறும் பப்பாளி.. ஒல்லி ஒல்லி உடம்பு வேணுமா? இந்த இலை போதுமே.. எப்போது, எவ்வளவு சாப்பிடணும்?
சென்னை: உடல் எடை அதிகமாக உள்ளதாக கவலைப்படுவோருக்கு, கை கொடுத்து உதவக்கூடியதுதான் பப்பாளி பழங்கள்.. ஆனால், இந்த பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது தெரியாததால், பலருக்கும் இதன் பலன்கள் முழுமையாக தெரியாமல் போய்விடுகிறது. அதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன.. இதைத்தவிர, வைட்டமின் A, C, E, போன்ற சத்துக்களும் இந்த பழத்தில் அதிகமாகவே உள்ளன.. மேலும், இந்த பழத்தில் கலோரிகள் மிககுறைவாகவும், நார்ச்சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள்களும் அதிகமாகவும் உள்ளதால், டயட்டுக்கு உதவும் தலைசிறந்த பழமாக இது கருதப்படுகிறது.

உடல் எடை: உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள், பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவதால், வயிறு நீண்ட நேரம் முழுமையான உணர்வை அளிக்கிறது... இதனால், அடிக்கடி உணவு சாப்படும் தேவையும் குறைக்கப்படுகிறது. இப்பழத்திலுள்ள நார்ச்சத்துக்கள், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க தூண்டுகின்றன.
இப்படி ஒன்றாக சாப்பிட பிடிக்காவிட்டால், ஒரு கப் பால் குடித்துவிட்டு, அரை மணி நேரம் கழித்து பப்பாளி பழத்துண்டுகளை சாப்பிடலாம். அல்லது பப்பாளியை துண்டு துண்டாக நறுக்கி, தயிரில் போட்டு கலந்து சாப்பிடலாம். இதனாலும் தொப்பைகள் சீக்கிரமாகவே குறைய தொடங்குமாம். கிடைக்கும்.
புரோட்டீன்: தொப்பையை உடனடியாக குறைக்க நினைத்தால், காலை உணவில் ஒரு கிளாஸ் பால் மற்றும் பப்பாளியை சாப்பிட்டாலே போதுமாம்.. பால், பப்பாளி இவைகளில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால், உடல் எடையும் மெல்ல குறைய துவங்குமாம். அல்லது பப்பாளியை துண்டு துண்டாக வெட்டி, அதன் மீது கருப்பு உப்பு , கருப்பு மிளகு தூள் தூவி சாப்பிடலாம். இதனாலும் தொப்பை விரைந்து குறையுமாம். இப்படி சாப்பிட சீக்கிரம் தொப்பை குறையும்.
பப்பாளியில் லவங்கப்பட்டை, சேர்த்து ஸ்மூத்தி போல செய்து சாப்பிடலாம். லவங்கப்பட்டையலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.. உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த செய்கிறது.. கொழுப்பை எரிக்கவும் தூண்டுகோலாகிறது.. எனவே, பப்பாளியுடன் தண்ணீர், ஒரு சிட்டிகை லவங்கப்பட்டை சேர்த்து ஸ்மூத்தியாக கலந்து சாப்பிடலாம்.
எவ்வளவு சாப்பிடலாம் பப்பாளி எடை குறைப்புக்கு உதவும் என்றாலும், அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவுகோலும் முக்கியம்.. அந்தவகையில், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், 1 முதல் 2 கப் பப்பாளியை மட்டும் சாப்பிட வேண்டுமாம்.. எனவே, இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்கிறார்கள்...
அதிலும் பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, பப்பாளியில் உள்ள நார்ச்சத்து செரிமான குழாயில் விரிவடைந்து, அன்றைய தினம் முழுவதும் குறைவான கலோரி உட்கொள்ளப்படுவதை உறுதி செய்கிறது..
பப்பாளியைவிடவும், பப்பாளி இலைகளில் அதிக சத்துக்கள் உள்ளதாம்.. வைட்டமின் A,B,C,E,K , பப்பெய்ன், ஆல்கலாய்டுகள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் சக்தி இந்த பப்பாளி இலைகளுக்கு உண்டு..
பப்பாளி இலைகள்: பப்பாளி இலைகளில் நார்ச்சத்து, புரதம், அமினோ அமிலங்கள் இருப்பதால், உணவை செரிமானம் செய்ய எளிதாக்குகிறது. இந்த பப்பாளி இலைகளில் ஜூஸ் போல தயாரித்து குடிக்கலாம். நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளதால், ஊளைச்சதை, தொப்பை உள்ளவர்கள், பப்பாளி இலைகளை தவறவிடக்கூடாது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications