இந்த "இலை" மேஜிக் தெரியுமா.. ஒரே இலையில், ஓராயிரம் தீர்வு.. வெயிட் குறையணுமா? இந்த இலையை ஜூஸ் போடுங்க
சென்னை: முருங்கை மரமும், வாழை மரமும் எந்த அளவுக்கு மொத்தமாக பயன்கொடுக்கக்கூடியதோ, அதுபோலவே, பப்பாளியும் நமக்கு மருத்துவங்களை வாரி வழங்குகிறது.
வெறும் பப்பாளி இலையை மட்டுமே எடுத்துக்கொண்டால், அதன் மருத்துவ குணங்கள் ஆச்சரியத்தை தருகிறது.. காரணம், இந்த இலைகளில் லைக்கோபீன் உள்ளது.. அதாவது புற்றுநோயை தடுக்கக்கூடிய பண்புகள் இந்த இலையில் நிறைந்துள்ளன. நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், புற்றுநோய் தாக்கும் செல்களை அழித்து, புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.

இலை ஜூஸ்: வைட்டமின் A,B,C,E,K பப்பெய்ன், ஆல்கலாய்டுகள் போன்ற கலவைகள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். அதனால்தான், இந்த இலையை அரைத்து ஜூஸ் போல செய்து சாப்பிடுவார்கள். இந்த இலையின் சாறு தரும் நன்மைகளை பார்ப்போம்:
இந்த இலையின் சாறு குடித்தால், காய்ச்சல், வாயு, வீக்கம், நெஞ்செரிச்சல், சரும அலர்ஜி, காயங்கள், வடுக்கள், பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கும் உள்ளுக்குள் மருந்தாகவும், வெளிப்புறம் பூசும் மருந்தாகவும் பயன்படுகிறது.
டெங்கு: அதேபோல டெங்கு காய்ச்சல் என்றால் என்றாலே, மிகச்சிறந்த நிவாரணியாக இந்த சாறு உள்ளது.. ரத்தப்போக்கு, காயம் ஏதாவது ஏற்பட்டுவிட்டால், ரத்தம் உறைதல் அல்லது உறைதலை ஊக்குவிக்க செயல்புரியும் செல் துண்டுகளுக்கு பெயர்தான் ரத்த தட்டுகள் அல்லது ரத்த பிளேட்லெட் என்பார்கள்.. மேலும், டெங்கு போன்ற காய்ச்சல் தாக்கும்போது, ரத்த பிளேட்லெட்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்..
ஆனால், இந்த பப்பாளி சாறு குடிக்கும்போது, ரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகமாகும் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன. அதனால்தான், இந்த பப்பாளி இலையை, மாத்திரைகள் தயாரித்து பயன்படுத்துகிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள்: துவர்ப்பு நிறைந்த பப்பாளிக்காயும் சரி, இந்த இலைகளும் சரி, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.. இதை அடிக்கடி சாப்பிடுவதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தப்படும்..
உடல் எடை குறையவேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த இலைகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.. காரணம், நீர்ச்சத்தும் அதிகம்.. நார்ச்சத்தும் அதிகம்.. இதனால், வயிறு கோளாறுகள் நீங்கி, ஜீரண சக்தியை அதிகரிக்க இந்த இலை தூண்டுகிறது.. இந்த சாறில் கலோரிகள் மிகவும் குறைவு.. இதனால் தேவையற்ற கொழுப்புகள் கறைக்கப்பட்டுவிடும்.. உடலிலுள்ள நச்சுத்தன்மையும் நீங்கிவிடும்..
சரும நலன்: பப்பாளி பழம் எப்படி சருமத்துக்கு பொலிவையும், ஆரோக்கியத்தையும் தருகிறதோ, அதுபோலவே, இந்த பப்பாளி இலைகளும் சருமத்துக்கு சிறந்தது..
ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால், வயதான தோற்றத்தை தள்ளிப்போடுவதுடன், சருமத்தின் அழகை அதிகரிக்க செய்கிறது. சுருக்கங்கள் மட்டுமின்றி முகப்பருக்கள், சருமத்தின் நிறம் மாறுதல் இப்படி பல விஷயங்களை நீக்குகிறது.. இந்த பப்பாளி இலை விழுதை தலை முடிக்கு தடவி வருவதால், முடி கொட்டுவது நின்று, தலைமுடி கருகருவென வளர துவங்கும்.
டாக்டர்கள் ஆலோசனை: பப்பாளி இலைகள், பெண்களுக்கு மிகவும் நல்லது.. குறிப்பாக கர்ப்பபை சுருக்கங்களை குறைப்பதில் இந்த இலையின் பங்கு அதிகம்.. பிசிஓடி என்று சொல்லப்படும் நீர்க்கட்டி பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் இந்த இலை மிகவும் பயன்தரக்கூடியது. எனவே, மருத்துவர்களின் அறிவுரையுடன் இந்த இலையை பயன்படுத்தினால், பல உடல்நாம் சார்ந்த தொந்தரவுகளிலிருந்து விடுபடலாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications