Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பப்பாளி இலையின் ஆரோக்கியம்.. எண்ணற்ற மருத்துவ குணம் நிறைந்த பப்பாளி.. ஆனால் இப்படி சாப்பிட்டுடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பப்பாளி பழத்தின் பலன்கள் என்னென்ன? பப்பாளி பழத்தைவிட பப்பாளி இலைகள் அதிக நன்மையை தருவதற்கு என்ன காரணம்? பப்பாளி பழம் சாப்பிடும்போது, எந்த உணவுப்பொருட்களை தவிர்க்கலாம்? இதோ சுருக்கமாக பார்க்கலாம்.

பப்பாளி பழத்தைவிட, பப்பாளி இலையில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளதாம்.. வைட்டமின் A,B,C,E,K , பப்பெய்ன், ஆல்கலாய்டுகள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் சக்தி இந்த இலைகளுக்கு அதிகமாக உண்டு என்பார்கள்.

papaya leaf papaya health

பப்பாளி இலைகளில் நார்ச்சத்து, புரதம், அமினோ அமிலங்கள் இருப்பதால், நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்ய உதவுகிறது.. இந்த பப்பாளி இலைகளை விழுதாக அரைத்து பலவகைகளில் பயன்படுத்தலாம்.. இந்த இலைகளில் ஜூஸ் தயாரித்து குடித்தால், மலச்சிக்கல், வாயு, அமிலத்தன்மைகள் நீங்கி, குடல் ஆரோக்கியம் காக்கப்படும்.

கர்ப்பிணிகள்: கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பை சுருக்கங்களை போக்கவும், PCOD என்று சொல்லப்படும் நீர்க்கட்டி பிரச்சனைகளை சரிசெய்யவும், இந்த இலைகள் உதவுகின்றன. டெங்கு போன்ற விஷக்காய்ச்சல்களின் தீவிரத்தையும் இந்த இலைகள் குறைக்கின்றன. ரத்தவிருத்தியும் அதிகமாகும். சர்க்கரை நோயாளிகள் பப்பாளி இலைகளை உணவில் சேர்த்து கொண்டால், ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படும்.

நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளதால், உடல் எடை குறைப்போருக்கு இந்த இலைகள் பெஸ்ட் சாய்ஸ். இதனால் தேவையற்ற கொழுப்புகள் கறைந்து, உடலிலுள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும். தசை வலி, மூட்டு வலிகளுக்கு தரப்படும் சிகிச்சைகளில், பப்பாளி இலைகளின் பங்கு அதிகமாகும். கீழ்வாதம், மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பப்பாளி இலைகளையே மருந்தாக தரப்படுகிறது. சரும சுருக்கம் முதல், முகப்பரு காயங்களை போக்கக்கூடிய தன்மை இந்த இலைகளுக்கு உண்டு.

பப்பாளி விழுது: இந்த பப்பாளி இலையை விழுதாக அரைத்து தலைக்கு பூசினால், தலைமுடி உதிர்வதும் நின்றுவிடுமாம். எனினும், இலைகளை அரைத்து மருந்தாக உட்கொள்ளும்போது, கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் டாக்டர்களின் ஆலோசனையை பெறுவது கட்டாயமாகும்.

பப்பாளி பழத்தில் வைட்டமின் A, C, E போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகள் எப்போதுமே இதய நோய் அபாயத்தை குறைக்கும்.. ஆனால், இந்த பப்பாளியில் அதிகமான நார்ச்சத்து உள்ளதே ஸ்பெஷலாகும்.. இது கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கின்றன .

ரத்த சர்க்கரை: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.. மலச்சிக்கலை தீர்க்ககும். நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் உடலில் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.. இப்படி பப்பாளி பழத்தில் எண்ணற்ற பலன்கள் இருந்தாலும், பப்பாளியை சாப்பிடும்போது சில உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லதாகும்.

குறிப்பாக, முட்டையுடன் பப்பாளி பழத்தை சாப்பிடகூடாது.. இது செரிமான தொந்தரவு, மலச்சிக்கல், வயிறு உபாதைகளை தந்துவிடும். அதேபோல, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களுடனும் பப்பாளி சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடும்.

தவிர்க்கலாம்: டீ, காபி குடித்ததுமே பப்பாளி பழம் சாப்பிடக்கூடாது. இதனால் வாயுத்தொல்லை, வயிறு வீக்கம், நெஞ்செரிச்சல், இரைப்பை பிரச்சனை போன்றவை ஏற்படும். அதேபோல, பால் குடித்த பிறகும் பப்பாளி பழத்தை சாப்பிடக்கூடாது என்பார்கள்.. அதிலும் பாலுடன் பப்பாளியை கலக்கவே கூடாது.. இதனால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு சிக்கலை தந்துவிடுமாம்.

இதயத்துடிப்பு: அதேபோல, சீரற்ற இதயத்துடிப்பு உள்ளவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடவே கூடாது. பப்பாளியை அதிகமாக உட்கொள்வது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், பப்பாளியை தவிர்க்கவும். அதேபோல, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், பப்பாளி பழத்தைத் தவிர்க்கலாம்..

மனித செரிமான அமைப்பில் ஹைட்ரஜன் சயனைடை உருவாக்கக்கூடிய ஒரு அமினோ அமிலமான சயனோஜெனிக் கிளைகோசைடுகளின் சிறிய அளவு பப்பாளியில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.. இது பப்பாளி அதிகப்படியான இதயத் துடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகளை மோசமாக்கிவிடும் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதே விளைவை ஏற்படுத்தலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+