Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒல்லி ஒல்லி உடம்பு வேணுமா.. அப்ப இந்த "பரட்டையை" சாப்பிடுங்க.. கீரைகளின் ராணின்னா அது இந்த இலைதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், கட்டாயம் சாப்பிட வேண்டிய கீரை பரட்டைக்கீரையாகும்.. இந்த கீரையை கேல் என்று சொல்வார்கள்.

நீண்ட இலைகளும் உண்டு.. ஆனால் பெரும்பாலும் சுருட்டை வடிவிலேயே இருப்பதால்தான், இதற்கு பரட்டைக்கீரை என்று பெயர் வந்ததாம். அகலமான மற்றும் மிருதுவான இலைகளை கொண்டிருக்கும் இந்த பரட்டைக்கீரை, குளுமையான பருவத்தில் மட்டுமே பயிராகிறது..

Health Benefits of Parattai Keerai Do you know that Prarattai Keerai is the Best tips for Weight loss

அதிக சூடு மற்றும் அதிக குளிர் பகுதிகளில் பயிராவதில்லை. அதுமட்டுமல்ல, இந்த கீரை லேசாக கசப்புத்தன்மை உடையதாக இருக்கும் என்பதால், பலரும் இதை விரும்பவதில்லை.

ஆனால், உலகின் சிறந்த சத்துக்களை லிஸ்ட் போட்டு பார்த்தால், இந்த கீரை கட்டாயம் அந்த லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கும். ஆரோக்கியம் காரணமாக, வெளிநாட்டினர் அதிக அளவுக்கு இந்த கீரையை தங்கள் உணவில் பயன்படுத்துவார்கள்.

அதிக சத்துக்கள்: ஒரு கப் பரட்டைக்கீரையில் வைட்டமின்களும், சத்துக்களும் அபரிமிதமாக உள்ளன. K, A, C, B1, B2, B3, B6 வைட்டமின்கள், கால்சியம் மேங்கனீஸ், மெக்னீஷியம், காப்பர், பொட்டாஸியம், இரும்புச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் ஏகப்பட்டவை நிரம்பி உள்ளன.. அதாவது, ஒரு ஆரஞ்சுப்பழத்தில் இருப்பதைக்காட்டிலும், வைட்டமின் C, இந்த ஒரு கப் கீரையில் நிறையவே உள்ளதாம்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.. காரணம், நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி, கெட்ட கொழுப்பை குறைப்பதில், பரட்டைக்கீரை பெரும்பங்கு வகிக்கிறது. எனவே, கொலஸ்ட்ரால் அளவும் சீராக இருக்கிறது... நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக நடக்கிறது.. மலச்சிக்கலும் குணமாகிறது.

கண்பார்வை கோளாறுகள்: கண்பார்வை கோளாறுகளை நீக்குகிறது இந்த கீரை.. கண்பார்வையை அதிகரிக்கவும் செய்கிறது.. கால்சியம், இரும்புச்சத்து அதிகமுள்ள பரட்டைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவதால், ஹார்மோன்கள் சீராகின்றன. சிறுநீரகம், கண்கள், பாதம், ஈரல் என முக்கிய உறுப்புகளுக்கு வலு கொடுக்கும் தன்மை உடையது இந்த பரட்டைக்கீரை.. புற்றுநோயை தடுக்கும் ஆற்றலை உடையது.. ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

இந்த இந்தக் கீரையின் சாறு எடுத்து அதனை குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். இன்சுலின் சுரப்பை தூண்டுவதுடன், இருதயத்தின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது. மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படக்கூடிய நாட்பட்ட நோய்களை போக்கும் தன்மை கொண்டது.

Health Benefits of Parattai Keerai Do you know that Prarattai Keerai is the Best tips for Weight loss

பரட்டைக்கீரை சூப்: இந்த பரட்டைக்கீரையில் கலோரிகள் மிகவும் குறைவு.. அதனால் ஜூஸ் போல செய்து சாப்பிடலாம் அல்லது குக்கரில் வேக வைத்து, சூப் போல செய்தும் சாப்பிடலாம். அல்லது சாலட்டுகளிலும் சேர்க்கலாம்..

பரட்டை கீரையிலிருந்து சாறு எடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாக காய்ச்சி எடுத்து வைத்து கொண்டால், படை சொறி சிரங்கு போன்றவைகளை குணப்படுத்த முடியும். அதேபோல இந்த கீரையை உலர்த்தி பொடி செய்து, இரவு தூங்க போகும்முன்பு, அரை ஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டால், மலச்சிக்கல் தீரும்.

கீரைகளின் ராணி: பரட்டைக்கீரையுடன் வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை என 3 கீரைகளையும் சமமாக எடுத்து, சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி தைலமாக்கி தேய்த்து வந்தால், இடுப்பு மற்றும் மூட்டு வலிகள் குணமாகும். இந்த கீரையுடன், பூண்டு, மிளகு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால், வாயு கோளாறுகள் நீங்கும்.. இப்படி பல நன்மைகளை தரும், இந்த "கீரைகளின் ராணி"யை மருத்துவர் ஆலோசனையுடன் அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நலம் பெருகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+