சமைத்த உருளைக்கிழங்கை ஃபிரிட்ஜில் வைக்கலாமா? இதுல இவ்ளோ சத்துக்களா? ப்ரிட்ஜில் இதை மட்டும் கவனியுங்க
சென்னை: உருளைக்கிழங்குகளில் உள்ள சத்துக்கள் என்னென்ன? உருளைக்கிழங்கு சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஃபிரிட்ஜில் உருளைக்கிழங்கு வைக்க வேண்டாம் என்று சொல்கிறார்களே? ஏன் தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வைட்டமின் C, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உருளைக்கிழங்குகளில் உள்ளன.. ஆறாத புண்களையும் ஆற்றக்கூடிய தன்மை உருளைக்கிழங்கிற்கு உண்டு. குறிப்பாக, வயிற்றுப்புண், வாய்ப்புண்களுக்கு சிறந்த மருந்து உருளைக்கிழங்காகும்.

சத்துக்கள்: உருளைக்கிழங்கில் உள்ள முக்கிய சத்து, அதிலிருக்கும் பொட்டாசியம்தான். ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதே இந்த பொட்டாசியம்தான் என்பதால், இதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் நன்மை தரக்கூடியது இந்த கிழங்கு. உருளைக்கிழங்கிலுள்ள மாவுச்சத்து, அடிவயிறு, இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதை தடுப்பதுடன், அசுத்தநீர் இரைப்பை குழாய்களில் தேங்குவதையும் வெளியேற்ற செய்கிறது.
வைட்டமின் C நிறைந்த உருளையை தோலுடன் சாப்பிட்டு வரும்போது, சருமத்துக்கு பாதுகாப்பாக விளங்க செய்கின்றன. எனினும், உருளைக்கிழங்குகள் அனைவருமே சாப்பிடக்கூடிய கிழங்கு என்று சொல்லிவிட முடியாது.
உருளைக்கிழங்கு உண்பதால் உடலில் நேரடியாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று அமெரிக்க போஸ்டான் பல்கலைக்கழகத்தை சேர்த்த "தி ஜார்ணல் ஆஃப் நியூட்ரிஷனல் சயின்ஸ்" நடத்திய ஆய்விலும் தெரியவந்துள்ளது.
ரத்த அழுத்தம்: உருளைக்கிழங்குகளை உணவில், சேர்த்து கொள்பவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் பிரச்சனை ஏற்படுவதில்லை என்றும், 2ம் நிலை நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு 24 சதவீதம் குறைவாக உள்ளதுடன், டிரைகிளசரைட்ஸ் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் கொழுப்பானது 26 சதவீதம் குறைவாக இருந்ததாகவும் ஆய்வுகளில் நிரூபணமாகியிருக்கிறதாம். எனவே, குறிப்பிட்ட அளவிலான கிழங்குகளை சாப்பிடலாம்.
சத்துக்கள் நிறைந்த உருளைக்கிழங்கு என்றாலும், அதிகமாக சாப்பிட்டால், ரத்த அழுத்தமும் அதிகமாகிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது. கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள கிழங்கு என்பதால், உடல் எடையையும் அதிகமாக்கிவிடும். எனவே, நீரிழிவு நோயாளிகள் மிக மிக குறைவான அளவிலேயே உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டும்.
கீல்வாதம்: உருளைக்கிழங்கை பொரித்து சாப்பிடும்போது அதிக கொழுப்பு சேர்ந்து, ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த கிழங்கிலுள்ள கார்போஹைட்ரேட்டுகள் கீல்வாதத்தின் வலியை அதிகரிக்க செய்யும் என்பதால், கீல்வாத நோயாளிகளும் உருளைக்கிழங்கை தவிர்க்கலாம்.
அதேபோல, முளைவிட்ட உருளைக்கிழங்குகள், பச்சை நிறமாகிவிட்ட உருளைக்கிழங்குகளில் விஷத்தன்மை இருக்கும் என்பதால், இதனை கர்ப்பிணிகள், குழந்தைகள் உட்பட சமையலிலிலிருந்தே தவிர்க்க வேண்டும்.
கேன்சர் ஆபத்து: அதேபோல, உருளைக்கிழங்குகளை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால், கேன்சர் பாதிக்க வாய்ப்புள்ளதாம்.. காரணம், ஃபிரிட்ஜிலுள்ள குளிர்ச்சி, உருளைக்கிழங்கிலுள்ள ஸ்டார்ச்சை (Starch), சர்க்கரையாக மாற்றுகிறது. பல்வேறு ஆபத்தான புற்றுநோய்களை உண்டாக்கும் ஒரு ரசாயன தூண்டுதலை இந்த சர்க்கரை உடலில் உண்டாக்கிவிடுமாம்.
அதுமட்டுமல்ல, ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உருளைக்கிழங்கை வேக வைத்தாலோ, எண்ணையில் வறுத்தாலோ, அதிலுள்ள சர்க்கரை மற்றும் அமினோ ஆசிட் இரண்டும் ஒன்றாக சேர்ந்து கலந்து அக்ரைலாமிட் (Acrylamide) என்ற வேதிப்பொருளை உருவாக்கிவிடும். பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் உருவாக்கத்தில் பயன்படுவது இந்த வேதிப்பொருள்தானாம். இதனை சாப்பிடும்போது புற்றுநோய் பாதிப்பு வரக்கூடும் என்று அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி ஆய்வில் நிரூபணமாகியிருக்கிறது.
ஹாட் & ஜில்: எப்போதுமே, உருளைக்கிழங்கை சமைப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு, அதனை நறுக்கி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.. இப்படி ஊறவைத்தால், அக்ரிலாமைட் (Acrylamide) வேதிப்பொருள் உருவாவது தடுக்கப்பட்டுவிடும்...
குளிர்ச்சியை போலவே, அதிக வெப்பமும் உருளைக்கிழங்குகளுக்கு தேவையில்லை. காற்றோட்டமான இடத்தில், அறை வெப்பநிலையிலேயே உருளைக்கிழங்குகளை வைப்பது சிறந்தது. அதேபோல, சமைத்த உருளைக்கிழங்குகளையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications