ராஜ்மா செய்றீங்களா.. ஆச்சரியம் தரும் கிட்னி பீன்ஸ்.. சிறுநீரக பீன்ஸை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜ்மா - இது நம்ம ஊர் பயிறு கிடையாது.. மத்திய அமெரிக்கா, மெக்ஸிகோவை பூர்வீகமாக கொண்ட ஒரு பருப்பு வகை. ஆனால், ராஜ்மா இல்லாத பாரம்பரிய உணவுகள் கிடையாது.
இதை சிறுநீரக பீன்ஸ் என்பார்கள்.. சிறுநீரகத்தின் வடிவத்திலும் நிறத்திலும் இருப்பதால், இப்படி அழைப்பார்கள்.. ராஜ்மா, வெள்ளை, கிரீம், கருப்பு, சிவப்பு, ஊதா, புள்ளிகள், கோடிட்ட என பல பல வடிவங்களில், பலபல வண்ணங்களில் காணப்படும்.

Health Benefits of Rajma and Do you know Kindey Beans are the Excellent food for the Diabetics

ராஜ்மாவில், நிறைய அளவு ஃபோலிக் அமிலம், கால்சியம் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன.

கால்சியம்: நிறைய கால்சியம் நிறைந்திருப்பதால், எலும்புகளுக்கும், பற்களுக்கும் மிகவும் நல்லது.. ரத்தத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது.. ரத்த சோகை இருப்பவர்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைபாடு இருப்பவர்கள், ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகமாகும்.. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ராஜ்மாவில் உள்ளதால், புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது.

முக்கியமாக பருப்பு வகை என்பதால், புரோட்டீன் இதில் நிறைய இருக்கிறது.. இது உடலுக்கு ஆற்றலை தருகிறது.. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக ராஜ்மாவை சாப்பிடலாம்.. காரணம், நார்ச்சத்து அதிகம் உள்ளது.. மேலும், புரோட்டீன் அதிகம் என்பதுடன், எப்போதுமே வயிறு நிரம்பியது போன்ற உணர்வை தரக்கூடியது.. எனவே, ராஜ்மாவை சாப்பிட்டு, ஆரோக்கியமான முறையிலேயே உடல் எடையை குறைக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள், இந்த ராஜ்மாவை சாப்பிடலாம்.. சர்க்கரை அளவும் சமநிலையில் இருக்கும்.. அத்துடன் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தையும் ராஜ்மா குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

ராஜ்மாவை சாப்பிட்டால், முதுமை தள்ளிப்போடப்படுகிறது.. தோலில் உள்ள சுருக்கங்களும் குறைந்துவிடும்.. சருமத்துக்கு மட்டுமல்லாமல் தலைமுடிக்கும் ராஜ்மா மிகவும் நல்லது. உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால், முடி உதிர்வு கட்டுக்குள் வரும்..மூட்டுவலியின் போது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. ராஜ்மாவை அதிகமாக சாப்பிட்டால் உடைஎடை கூடிவிடும். அதனால் அளவுடன் சாப்பிடுவது நல்லது என்கிறார்கள்..
பயோடின்: மூளை செல்களுக்கு அத்தியாவசியமாக இருக்கிற தையமினும் ராஜ்மாவில் அதிகம் இருக்கின்றன.. இதில், மக்னீசியமும் இருப்பதால் மனதளவில் சோர்வாக உணர்வது தவிர்க்கப்படும். அதேபோல, அதிகப்படியான பயோடின் இருப்பதால், நகங்களை ஆரோக்கியமாக வளர்க்க உதவிடுகிறது

மூளையின் ஆரோக்கியத்துக்கும், நினைவுத்திறனை அதிகரிக்கவும் ராஜ்மா உதவுகிறது.. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி, இந்த ராஜ்மாவுக்கு உண்டு..

எப்படி சமைப்பது: ஏகப்பட்ட மசாலாக்களை சேர்த்து, அதிக எண்ணெய்யை ஊற்றி சமைத்தால், இந்த ராஜ்மாவில் உள்ள எல்லா சத்தும் போய்விடும்.. அதனால் குறைவான எண்ணெய்யில், குறைவான மசாலா பொருளை சேர்த்து, அளவுடன் சாப்பிட்டால், மிகச்சிறந்த சத்துமிக்க உணவாக ராஜ்மா மாறிவிடும். இதனை சத்தாக மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.

அதேபோல, சமைக்கப்படாத ராஜ்மாவில் நிறைய ராசாயன கலவை உள்ளதால், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். அதனால், நன்றாக ஊறவைத்து, நன்றாக வேகவைத்து, சாப்பிடுவது நல்லது. ராஜ்மாவை முதல்நாள் இரவில் ஊறவைத்து நன்றாக வேக வைத்து பயன்படுத்தினால் இன்னும் நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+