சர்க்கரை வள்ளிக்கிழங்கு.. "இதுல" மட்டும் ஜாக்ரதையா இருங்க.. சக்கரை வள்ளிக்கிழங்கு காட்டும் ஆச்சரியம்
சென்னை: சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட்டால், உடல் எடை கூடுமா? சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாமா?
ருசி + ஆரோக்கியம் இரண்டுமே கலந்ததுதான் சர்க்கரைவள்ளி கிழங்கு.. இனிப்பு சுவையை தருவதற்கு காரணம், இதிலுள்ள மாவுப்பொருள்தான்.. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

இதயநோய்: விட்டமின் A,D,C, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சுவாச பிரச்சினை உடையவர்களுக்கும், மூட்டுவலி பிரச்சினை இருப்பவர்களுக்கும், வயிற்றுப்புண் இருப்பவர்களுக்கும், சர்க்கரை வள்ளிக்கிழங்கைதான் பரிந்துரை செய்வார்கள்.
குறிப்பாக, பி-6 வைட்டமின் நிறைய உள்ளதால், செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது... இதய நோய் பாதிப்பில் இருந்தும் நம்மை காக்கிறது.. அதேபோல, ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது... இதிலுள்ள விட்டமின் D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது... அத்துடன் எலும்புகளும் வலுவாகின்றன.. தைராய்டு சுரப்பி, பற்கள், நரம்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுவதே இந்த வைட்டமின் Dதான்..
அழகு சருமம்: சருமத்துக்கு இந்த கிழங்கு நிறைய நன்மை செய்கிறது.. அதிலும், குளிர்காலங்களில் சரும பொலிவை காக்க உதவுகிறது. புற ஊதாகதிர்களின் பாதிப்பில் இருந்தும் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.. வைட்டமின் A சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. அத்துடன், அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிராக போராட தூண்டுகிறது.
மன அழுத்தம் பிரச்சனையிலிருந்தும் மீட்டு ஆரோக்கியமான மனநிலைக்கு கொண்டுவருகிறது. சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம் என்பதால், உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகள், கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. வெள்ளை + சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கசெய்வதில் சர்க்கரைவள்ளி கிழங்குக்கு முக்கிய பங்குள்ளது.. உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது..
உடல் எடை: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெஸ்ட் சாய்ஸ்.. இதில், நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் இருப்பதால், அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை. கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக இதுபோன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகமாக துரிதப்படுத்தும்... மேலும், பசியை கட்டுப்படுத்துவதுடன், வயிறு நிறைந்த திருப்தியை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
நீரிழிவு நோய் இருப்பவர்களும் இந்த கிழங்கை அளவாக சாப்பிடலாம். இந்த கிழங்கில் ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது.. இது கார்போஹைட்ரேட்டில் இருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை விட வித்தியாசமானது...
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அதிலிருக்கும் ஸ்டார்ச் மெதுவாக எரிந்து நீண்ட நேரம் ஆற்றலை அளிக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் அதிகரிக்காது. அதனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள், "மருத்துவர்களின் அனுமதியோடு" இதை அளவோடு எடுத்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய்: உடலிலுள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம். உடலுக்கு தேவையான அனைத்து சக்தியையும் கொடுக்கும். இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை, "சர்க்கரை கொல்லிக்கிழங்கு" என்று சொல்லலாம் என்கிறார்கள்.
எப்படி சாப்பிடுவது: சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்தோ அல்லது சுட்டோ அல்லது சிப்ஸ் தயாரித்தோ சாப்பிடலாம்.. அதிலிருக்கும் சத்துக்கள் முழுவதும் உடலுக்கு கிடைக்கும். அதுமட்டுமல்ல, வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில். வாழைப்பழத்தில் இருப்பதை விட பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கும்.. இந்த பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது..
தீமைகள்: இந்த சர்க்கரைவள்ளி கிழங்கில், பொட்டாசியம் சத்து நிறைய உள்ளதால், இதை அதிகமாக சாப்பிடும்போது, பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் என்கிறார்கள்.. அதேபேல, ஆன்டி ஆக்ஸிடன்ட் சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ளதால், இதை அதிகமாக சாப்பிட்டால், சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..
ஒருவேளை கல்லீரல் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்கனவே இருப்பவர்கள் இதனை எடுத்துக்காண்டால், விளைவுகள் மோசமாகலாம்.. மேலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான கோளாறு, வயிறு உபாதைகள் போன்றவையும் ஏற்படலாம்.. நார்ச்சத்து அதிகம் என்றாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது கிடையாது.
அளவுகோல் என்ன: வைட்டமின் A இந்த கிழங்கில் நிறைய இருந்தாலும், அதிகமாக கிழங்கை சாப்பிடும்போது, முடி, புருவங்களில் உள்ள முடி உதிர்தல், வெடிப்புற்ற உதடு, வறண்ட சருமம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.. அத்துடன், கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தும். எதுவுமே அளவுக்கு அதிகமாக போய்விட்டால் பிரச்சனைதானே? அதனால், பெண்களுக்கு 700 மைக்ரோ கிராம், ஆண்களுக்கு 900 மைக்ரோ கிராம் என்பதே தினசரி பரிந்துரைக்கப்பட்ட உணவாக உள்ளது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications