Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புளியங்காய்.. புளியம்பழம் மட்டுமல்ல, புளியின் தளிரும் மருந்தாகும்.. "இவங்க" மட்டும் புளியை தொடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: அறுசுவைகளில் ஒன்றான புளிப்பு சுவையை மட்டும் தனித்து விட்டுவிட முடியாது.. புளிப்பை தருகிறது என்றாலும், பல நன்மைகளையும் தருகிறது என்பதால்தான், அறுசுவைகளில் ஒன்றாக இந்த சுவையும் இடம்பெற்றுள்ளது. ஆனால், புளியை எந்த அளவுக்கு சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்?

நம்முடைய குடும்பங்களில் நெருங்கிய தொடர்பு கொண்டது இந்த புளி - சமையலில், புளிக்குழம்பு, புளி ரசம், புளி சாதம், புளி சட்னி, என சமையல்கள் கமகமக்கும்.. புளி இல்லாத மீன் குழம்பு, காரக்குழம்புகள் கிடையாது.. புளி சேர்த்து சமைத்தால், அந்த உணவுகள் சீக்கிரத்தில் கெட்டுப்போகாது என்பதால்தான், புளியின் பயன்பாடுகள் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

Health Benefits of Tamarind and Do you know How Tamarind is the Good Food for all

புளிக்குழம்பு: புளியில் வைட்டமின் பி1 + வைட்டமின் பி3, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன.. - நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது இந்த புளி.. நமது மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது. அத்துடன் புற்றுநோய் செல்களையும் தடுக்கக்கூடியது என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

எலும்புகள் தேய்மானத்தை குறைப்பதில் புளிக்கு மிக முக்கியமான இடமுண்டு. மேலும், ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. புளியை சமையலில் சேர்த்து சமைப்பதால், தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும்..

புளியங்காய்: புளிய மரத்திலிருந்து புளி எடுக்கப்படுகிறது.. இந்த புளிய மரத்தின் இலை, பூ, மரப்பட்டை, கொட்டை என எல்லாமே பலன்தருகிறது.. புளியம் பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் தீரும்.. புளிய மரப்பட்டை தாது பலத்தை தரக்கூடியது.. இந்த மரத்தின் இலைகளை, வீக்கம், கட்டி போன்றவற்றை கரைக்கக்கூடியது.. புளியம் பூ குளிர்ச்சியைத்தரக்கூடியது..

இந்த இலையின் தளிர்கள், கொழுந்து போன்ற இலைகள், உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது. இந்த தளிர் இலைகளை சிலர் துவையல் செய்து சாப்பிடுவார்கள். இதனால், பித்தம் நீங்கும்.. சிலர் பிஞ்சு புளியங்காயை எடுத்து அதிலும் துவையல் செய்வார்கள்.. பிஞ்சு புளியங்காய் + சிறிது தேங்காய் துருவல் + 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, துவையலாக அரைத்து கொண்டால், சூப்பரான டைஷ் டிஷ் ரெடி..

துவையல்: ஆனால், புளியை அதிகம் சாப்பிடக்கூடாது.. பற்களில் உள்ள பல்கூச்சம் ஏற்பட்டு ஈறுகள் பாதிப்படையும்.. பற்களும் வலுவிழந்துவிடும்.. ஆனால், 100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற அனைத்து இரும்புச்சத்து முழுமையும் கிடைக்கிறதாம்.. அதனால், அதிகபட்சமாக 100 கிராம் வரை நாம் புளியை எடுத்து கொள்ளலாம் என்கிறார்கள்.

எனினும், கேரளாவில் பயன்படுத்தப்படும் கொடம்புளி மிகவும் நல்லது.. இந்த கொடம்புளியில் அதிகமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதைப் பச்சையாகவும் சாப்பிடலாம், வெயிலில் காயவைத்து தூள் செய்தும் சாப்பிடலாம். இதில் கார்போஹைட்ரேட்கள், அசிட்டிக் அமிலம், வைட்டமின் பி, பொட்டாசியம், மெக்னீசியம், சிட்ரிக் அமிலம், ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் போன்ற தாதுக்கள் நிரம்பியுள்ளன.

கொடம்புளி அருமை: மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு , இந்த புளி மிகவும் நல்லது.. வயது முதிர்வு ஏற்படுவதை தாமதப்படுத்துவதுடன், நம்முடைய சருமத்தில் சுருக்கங்கள் விழாமலும் பாதுகாப்பதில் இந்த கொடம்புளி முக்கிய பங்கு வகிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+