கீரை வாங்கறீங்களா.. அடடே இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. கீரைகளை செய்தால் அந்த விஷயத்தை மறக்காதீங்க
சென்னை: கீரைகள் ஏன் நமக்கு மிகவும் அவசியமாகின்றன.. கீரைகளை எப்படி வாங்க வேண்டும்? எப்படி முறையாக சமைக்க வேண்டும் தெரியுமா?
40-க்கும் மேற்பட்ட கீரைகள் இருக்கின்றன.. ஒவ்வொரு கீரையும், ஒவ்வொரு தனித்துவம் உண்டு.. தனித்தனி மருத்துவ நன்மைகளும்உண்டு. எனினும், சில குறிப்பிட்ட நன்மைகள் அனைத்து கீரைகளிலுமே பொதுவாக கிடைக்கின்றன. சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் சி போன்ற முக்கிய மூலப்பொருட்கள் அதிகம் உள்ளன..

கீரைகள்: கீரைகளை சாப்பிடுவதால் ரத்த விருத்தி அதிகமாகும்.. ஹீமோகுளோபின் பிரச்சனை தீருவதுடன், ரத்த சுத்திகரிப்புக்கும் கீரைகள் நல்லது.. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கீரை பொரியல், கீரை கூட்டு, கீரை குழம்பு, கீரை மசியல், கீரை சப்பாத்தி இப்படி பல விதங்களில் கீரைகளை சமைத்து சாப்பிடலாம்.
கீரைகள் என்றாலே சத்துக்கள்தான் என்றாலும், அந்த சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமானால், முறையாக சமைக்க வேண்டும்..
கண்பார்வை: நம் நாட்டில், ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறுவர், சிறுமியர்கள், வைட்டமின் A, குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலைமை உள்ளதாம்.. ஆனால், இந்த கீரைகளில் உள்ள கரோடின் என்றபொருள், உடலில் வைட்டமின் Aவாக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.. மேலும், B காம்ப்ளக்ஸ் சத்தும் இதில் உள்ளதால்தான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் கீரையை சாப்பிட சொல்கிறார்கள்.
அந்தவகையில், பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம். 4-6 வயது குழந்தைகளுக்கு 50 கிராம், 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் என கீரை தினமும் தேவைப்படுகிறதாம்.
சுத்தம் செய்வது எப்படி: எந்த கீரையாக இருந்தாலும் முறையாக சுத்தம் செய்து, நன்றாக அலச வேண்டும்.. நிறைய மண், சிறுபுழுக்கள் இருக்கும் என்பதால், ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் கீரைகளை போட்டு வைத்தாலே போதும்.. 2 நிமிடங்கள் கழித்து பார்த்தால், கீரையிலுள்ள மண் எல்லாம் பாத்திரத்தின் அடியில் இருக்கும். இதற்கு பிறகு கீரைகளை மட்டும் வெளியே எடுத்து, 2 முறை நீரில் அலச வேண்டும்.
அதேபோல, அதிக நேரம் சமைக்க கூடாது.. கீரைகள் நிறைய வெந்துவிட்டால், சத்துக்கள் வீணாகிவிடும். அளவோடு தண்ணீர் வைத்துதான் கீரைகளை வேக வைக்க வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றி வேக வைத்து ,அந்த தண்ணீரை கீழே ஊற்றிவிட கூடாது.
எப்படி சமைக்க வேண்டும்: அதேபோல, கீரைகளை வெயிலில் உலர்த்த கூடாது. கீரைகளை பொரித்து சாப்பிடவும் கூடாது.. கீரைகளை சமைக்கும்போது, மூடி போட்டு மூடக்கூடாது என்பார்கள்..
கீரைகளை வாங்கும்போது கவனமாக பார்த்து வாங்க வேண்டும். கீரைகளில் ஓட்டை இருக்கக்கூடாது.. அப்படியிருந்தால், பூச்சிகளும், பூச்சி மருந்துகளும் அதற்கு காரணமாக இருக்கலாம். பூச்சிக்கொல்லி மருந்து இல்லாத கீரைகளை பயன்படுத்த வேண்டும். விளைவிக்கும் கீரையாக இருந்தாலும் சரி, விளைவிக்காத கீரைகளாக இருந்தாலும் சரி, இரண்டிலுமே நல்லது, கெட்டது இருக்கத்தான் செய்கின்றன..
துத்திக்கீரை: இதில் விளைவிக்காத கீரைகளான துத்திக்கீரை, தாளிக்கீரை, மூக்கிரட்டை கீரை, பால் பெருக்கி என பல கீரைகளில் நிறைய சத்துக்கள் உள்ளன.. இவைகளை சுத்தப்படுத்தி, பக்குவமாக சமைத்து சாப்பிட்டாலே நிறைய நன்மைகள் கிடைக்கும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications