பித்தளை சொம்பில் தண்ணீர் குடிக்கலாமா? பித்தளை பாத்திரங்களை சமையலில் ஏன் பயன்படுத்த வேண்டும்? சூப்பர்
சென்னை: நம்முடைய வீடுகளில் பித்தளை பொருட்களின் பயன்பாடுகள் எப்போதுமே குறைவதில்லை.. அதேபோல, ஓட்டல்களிலும், கல்யாண வீடுகளிலும் சமையல் செய்வதற்கு பித்தளை பாத்திரங்களே இன்றுவரை பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.. என்னதான் சமையலறையில் விதவிதமான பாத்திரங்கள் இருந்தாலும், பித்தளை பாத்திரங்களே கனமானவை, மதிப்பும் வாய்ந்தவை. அந்தவகையில் பித்தளையின் பயன்கள் என்னென்ன? மருத்துவ நன்மைகள் என்னென்ன? என்பதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
செரிமானம், நோயெதிர்ப்பு அமைப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள், எலும்புகளை வலுப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கு பித்தளைகள் பயன்படுகின்றன.. பித்தளையில் லேசான தாமிரம் கலந்து தயாரிக்கப்படும் பாத்திரங்களை பயன்படுத்தும்போது, நம் உடலிலுள்ள உஷ்ணங்கள் நீங்கி, உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் கிடைக்கின்றன. அதனாதான் பித்தளை சொம்பில் தண்ணீர் குடித்து வந்தார்கள்.

சூடான உணவு - பாத்திரங்கள்
பித்தளை பாத்திரங்கள் வெப்பத்தை கடத்தும் திறன் கொண்டவை.. இவைகளை வைத்து சமைத்தால், வெப்பம் சீராக பரவி, சமையல் எளிதாகும்.. அதனால்தான் பிரியாணி போன்ற அரிசி வகை உணவுகளுக்கு பித்தளை பாத்திரங்களை உபயோகப்படுத்துகிறார்கள்..
பித்தளை பாத்திரம் சூடாகும்போது உப்பு, அமில தன்மை கொண்ட உணவுகளுடன் எளிதில் வினைபுரியும். அதேபோல சூடான உணவு வகைகளை பரிமாறுவதற்கும் பித்தளை பாத்திரங்களைதயே பயன்படுத்தலாம்.
உறுதித்தன்மை - நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள்
பித்தளை பொருட்கள் உறுதித்தன்மை வாய்ந்தது என்பதால் நீடித்து உழைக்கக்கூடியது.. பித்தளையில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பாத்திரங்களில் படிந்திருக்கும், தீய பாக்டீரியாக்களின் வளர்ச்சியை பித்தளைகள் தடுக்கக்கூடியவை... பித்தளை மட்டுமல்ல, பித்தளையின் உட்புறத்தில் படிந்திருக்கும் தாமிரம் கூட நம்முடைய உடலுக்கு இன்றியமையாத கனிமமாகும்... இந்த கனிமமும் உணவில் கலந்து சில நன்மைகளை நமக்கு தருகின்றன.
கனமான பாத்திரம் என்பதால் கீறல் விழாது.. அதேசமயம் எடை குறைவானது என்பதால் எளிதில் கையாளலாம்.. பராமரிப்புக்கும் மெனக்கென தேவையில்லை.. ஆனால், தக்காளி, சிட்ரஸ் போன்ற அமில, கார உணவுகளை சமைப்பதற்கு பித்தளை பாத்திரங்களை தவிர்த்துவிடவேண்டும. ஏனென்றால், எதிர்வினை புரிந்து உணவின் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடுமாம்.
ஆன்மீகத்தில் முக்கியத்துவம்
அதேபோல, ஆன்மீகத்திலும் பித்தளைகளுக்கு நிறைய முக்கியத்துவம் உள்ளன.. விசேஷ நாட்கள், விழாக்காலங்கள், திருமணம் போன்ற வைபவங்களுக்கு பித்தளையில் தயாரிக்கப்பட்ட விளக்குகளையே பயன்படுத்த வேண்டுமாம்.
இதற்கு காரணம், பித்தளை லட்சுமி விளக்கு, லட்சுமி தேவியின் அருளையும் செழுமையையும் குறிக்கக்கூடியது. அனைத்து கடவுளுக்கும் மிகவும் பிடித்தமான உலோகம் பித்தளை என்பார்கள்.. பித்தளை விளக்குகள் மென்மையான பிரகாசத்தை வெளியிடக்கூடியவை.. பித்தளை விளக்குகள் அலங்கார உறுப்பாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
பித்தளையை ஒரு சாத்விக் உலோகமாகும்.. தூய்மையின் மறுவடிவமாகும்.. பூஜை பாத்திரங்களையும் பித்தளையில் பயன்படுத்தினால் நேர்மறை ஆற்றல் பெருகும். இணக்கமான சூழலை பித்தளைகள் உருவாக்கக்கூடியவை. பித்தளையால் பூஜை பொருட்களை இருந்தாலே, பூஜை அறையே முழுமையாக நிறைந்ததுபோன்ற திருப்தி கிடைக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications