வாழைக்காய்.. கடகடன்னு வெயிட் குறையணுமா.. அப்ப "இதை" மட்டும் பண்ணுங்க.. வாழ வைக்கும் வாழை
சென்னை: வாயுத்தொல்லை தருகிறது என்ற ஒரு காரணத்துக்காகவே, வாழைக்காயை ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், சிலபொருட்களை அதிகம் சேர்த்து, சமைத்து சாப்பிட்டு வந்தால், வாழைக்காய் நன்மை தரும் காய் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
வாழை என்றாலே வாழ வைக்கும் மரமாகும்.. இந்த மரத்திலுள்ள காயில் உள்ள சத்துக்களை பார்த்தாலே, அதன் நன்மைகளை சொல்ல வேண்டியதில்லை..

கார்போஹைட்ரேட் - 22.84 கிராம், கோலின் - 9.8 மிகி, நார்ச்சத்து - 2.6 கிராம், ஆற்றல் - 89 கிலோ கலோரி, கொழுப்பு - 0.33 கிராம், போலேட் - 20 எம்ஜி, இரும்புச்சத்து -0.26 மிகி, மெக்னீசியம் - 27 மிகி, நியாசின் - 0.665 மிகி, பாந்தோத்தேனிக் அமிலம் - 0.334 மிகி, பாஸ்பரஸ் - 22 மி.கி, பொட்டாசியம் - 358 மிகி, புரதச் சத்து - 1.09 கிராம், ரிபோப்ளேவின் - 0.073 மிகி, சோடியம் - 1 மி.கி, சர்க்கரை - 12.23 கிராம், தியாமின் - 0.031 மிகி, வைட்டமின் பி 6 - 0.4 மிகி, வைட்டமின் சி - 8.7 மிகி, துத்தநாகம் - 0.15 மிகி உள்ளன.
வாழைக்காய்: வாழைக்காயில் உள்ள பொதுவான பலன்கள் அனைவரும் அறிந்ததுதான். வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துவிடும்.
குடல் செயல்பாட்டை சீராக்கி, புற்றுநோய் வருவதை தடுக்கிறது.. இதிலுள்ள பொட்டாசியம் தசைகளின் சுருக்கத்தை நீக்குகிறது..
நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதய ஆரோக்கியத்திற்கும், மூளையின் செயல்பாடுளுக்கும் மிகவும் நல்லது.. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிவதை தடுக்கிறது.
அதேசமயம், வாழைக்காய் சாப்பிட்டால், வாயுத்தொல்லை ஆகிவிடும் என்பதால், இதை நிறையபேர் தவிர்த்துவிடுவார்கள்..உண்மையை சொல்லப்போனால், குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிப்பதே இந்த வாழைக்காய்தான்.. பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கியுள்ள கழிவுகளையும், நச்சு பொருட்களையும் வெளியேற்றி விடுகிறது.
உடல் எடை: வாழையை சாப்பிட்டாலே உடல் எடை கூடிவிடும் என்பார்கள். அதுவும் தவறு.. உடல் எடையை குறைப்பதில், இந்த வாழைக்காய்க்கு பெரும்பங்கு உள்ளது.. தினமும் ஒரு வாழைக்காய் சாப்பிட்டாலே, வெயிட் குறைய ஆரம்பிக்குமாம். காரணம், இதில், நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன.. செரிமானத்தை அதிகப்படுத்தி விடுகிறது.. இதை சாப்பிட்டால், வயிறு நிறைந்தது போல் நீண்ட நேரத்திற்கு இருக்கும். அளவுக்கு அதிகமான கலோரிகளை நீக்கி, ஆரோக்கியமான முறையில் எடை இழப்புக்கு இந்த வாழக்காய் உதவுகிறது.
அதேபோல சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. இதுவும் தவறான கூற்றாகும்.. வாழைப்பழத்தைவிட இதில் இனிப்பு குறைவுதான்.. சர்க்கரையின் அளவு மிகக்குறைவாக உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு வாழை சிறந்தது. அதாவது, 55- க்கும் குறைவான கிளைசெமிக் குறியீடு மடுமே இந்த வாழையில் உள்ளதால், சர்க்கரையை அதிகமாகாமல் தடுத்து விடுகிறது.
வாழைக்காய்: அதேசமயம், இதை அளவுடன் சாப்பிட வேண்டும்.. ஒரு வாழைக்காயில் கிட்டத்தட்ட 90 கலோரிகள் இருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனையுடன் அளவுடன் எடுத்து கொள்ள வேண்டும். வாழைக்காய் வறுவல், சிப்ஸ் என்று மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட உணவுகளை இந்த வாழைக்காய் வைத்து சமைப்பார்கள். சிலர் வாழைக்காயில் கோஃப்தா செய்வார்கள்.. சிலர் கட்லெட் செய்வார்கள்..
குழந்தைகளுக்கு வடை போல செய்து தரலாம்.. வெங்காயம், இஞ்சி, பூண்டு, கிராம்பு, கசகசா, பட்டை, ஏலக்காய், சிறிது தேங்காய் துருவல், சோம்பு, பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை போன்றவற்றை கெட்டியாக பேஸ்ட் போல அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

வாழை வடை: பிறகு, பெருங்காயம், மஞ்சள் தூள், நறுக்கிய வாழைக்காயையும் அரைத்து எடுத்து, இரண்டு கலவைகளையும் ஒன்றாக கலந்து வடை போல எண்ணெயில் சுட்டு எடுக்கலாம். ஒருவேளை மாவு கெட்டியாக வராவிட்டால், லேசாக கடலை மாவு சேர்த்துகொள்ளலாம்.
வாழை புட்டு: இந்த வாழையில் ருசியான புட்டு செய்யலாம்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் வாழைக்காயை 2ஆக வெட்டிப்போட்டு, குழையாமல் வேக வைத்து எடுத்துகொள்ள வேண்டும்.
பிறகு, அதன் தோலை நீக்கி, வெறும் காயை மட்டும் உதிர்த்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு வாணலியில் எண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை போட்டு வதக்கி, அதனுடன், உதிர்த்து வைத்துள்ள வாழைக்காய், சிறிது தேங்காய் துருவல சேர்த்து கிளறி இறக்கினால் வாழை புட்டு ரெடி. பலவகைகளில் பயன்படும் இந்த வாழை, என்றுமே நம்மை வாழ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை..
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications