மீனின் உடம்பெல்லாம் கரண்ட்.. "விலாங்கு மீன்" சாப்பிடலாமா.. ஈல் மீனிலுள்ள சீக்ரெட்ஸ் தெரியுமா?
சென்னை: மீன்கள் என்றாலே நல்லதுதான் என்றாலும், சிலவகை மீன்களில் நல்லது போலவே கெடுதலும் கலந்துள்ளது.. அத்தகைய மீன்களை சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.
அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம்.. ஒவ்வொரு வகையான மீன்களிலும், ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன என்றாலும், சில அடிப்படையான சத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்து மீன்களிலுமே உள்ளன..

சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது... மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது.. மனித ஆயுளையும் கூட்டுகிறது.
கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன.. மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது... நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒமேகா கொழுப்பு: புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். எனினும், அதிக பாதரசம் கலந்துள்ள மீன்வகைகளை கர்ப்பிணிகள் சாப்பிடவே கூடாது என்கிறார்கள். அதில் ஒன்றாக உள்ளது விலாங்கு மீன்.
விலாங்கு என்று பெயர் இருந்தாலும், இது ஒரு கத்திமீன் என்கிறார்கள்.. ஈல் மீன் என்பார்கள்.. பார்ப்பதற்கு மஞ்சள் அல்லது வெள்ளி நிறத்தில் இருக்கும்.. அதனால், எதிரிகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் பிற உயிர்களை வேட்டையாடுவதற்காகவும், 500 வோல்ட்டு மின்னழுத்தம், 1 ஆம்பியர் மின்னோட்டம் (500 வாட்) திறனுள்ள மின் அதிர்வுகளை உற்பத்தி செய்யவல்லது இந்த மீன்கள்.. அதனால், இதை மின்சார என்றும் சொல்வார்கள்.
பாறைகள்: அதேபோல, இதன் தாடையில் கூர்மையான பற்கள் இருக்கும். இந்த பற்களை வைத்து இறைகளை தேடினாலும், எதிரிகளை தாக்கவும், இந்த பற்களை பயன்படுத்தும்.. நீளமான உடல் இருந்தாலும், அதை வளைத்து கொண்டு, குழிகளிலும், பாறைகளிலும் மறைந்திருந்தாலும் தலையை மட்டும் வெளியில் நீட்டி வாயை திறந்து வைத்து கொண்டேயிருக்குமாம். தண்ணீரை விட்டு வெளியே வந்தாலும் பல மணி நேரம் இதனால் மண்ணிலும் இருக்க முடியும்..
நீருக்கடியில் கற்பாறைகளின் இடைவெளிகளிலும், நீருக்கடியிலேயே உள்ள பொந்துகளிலும் நிறைய காணப்படும்... ஈரப்பதம் உள்ள மண்ணிலும்கூட நிறைய இருக்கும்.. விலாங்கு மீனில் உள்ள நன்மைகள் என்னவென்றால், ஆண்மையை அதிகரிக்க செய்யுமாம்.. இதனால் வயிற்றிலுள்ள புண்களும் குணமாகும் என்கிறார்கள்.
இரும்புச்சத்து: இதிலுள்ள மக்னீசியம் மலச்சிக்கலை நீக்குகிறது.. மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் பொட்டாசியம் இதில் நிரம்பி உள்ளது.. உடலுக்கு தேவையான இரும்புச்சத்தும் இந்த மீனில் உள்ளது. நல்ல கண் பார்வைக்கு உதவுகிறது.. நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் துணைபுரிகிறது.. முடி, நகங்கள், தோல் பராமரிப்புகளுக்கு உதவுகிறது..
ஆனால், இந்த மீனில் பாலி குளோரினேடட் பைபினைல் + பாதரசம் என இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மையை கொண்டது என்கிறார்கள்.. அதனால்தான் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் பெண்கள் இந்த மீனை சாப்பிடக்கூடாது என்கிறார்கள். இதனால், குழந்தைகளின் வளரும் நரம்பு மண்டலங்களில் பாதரசம் நுட்பமான விளைவுகளை ஏற்படுகிறது.
தவிர்க்கலாம்: மொத்தத்தில், பாதரசம் கலந்த மீன்கள், மனச்சோர்வையும், பதற்ற தன்மையையுயும் ஏற்படுத்திவிடும். மாரடைப்பு, புற்றுநோய் அபாயமும் ஏற்படும்.. எனவே பாதரசம் அதிகமுள்ள இந்த ஷாக் அடிக்கும் மீன், உடலுக்கு கெடுதி என்கிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications