எத்தனை "ஸ்டெப்ஸ்" நடந்தால் மரணம் தள்ளிப்போகும் தெரியுமா.. "நடப்பதெல்லாம்" நன்மைக்கே.. இதை படிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய சூழலில் உடற்பயிற்சி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.. அதிலும், உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சி அதைவிட தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த நடைபயிற்சி குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது ஆய்வுகளில் வெளியாகி உள்ளன.

உடற்பயிற்சிகளில் அனைவராலும் கொண்டாடப்படுவது நடைப்பயிற்சி.. இதற்கு காரணம், நடைபயிற்சி என்பது மிக எளிமையானது. இலகு தன்மை ஒளிந்திருக்கிறது.. ஜிம்முக்கு சென்று, கடினமான பயிற்சிகளை செய்ய வேண்டிய அவசியமுமில்லை.. கேஷூவலாக, சாலைகளில், தெருக்களில், மைதானங்களில், மொட்டை மாடிகளில் என நாம் எங்கிருக்கிறோமோ, அங்கே கை கால்களை வீசி நடக்கலாம்..

Health Benefits of Walking and Do you know just 4000 steps a day may reduce risk of dying of any cause

இதற்காக சிறப்பு பயிற்சியாளர்கள் யாரும் தேவையுமில்லை. கட்டணமும் தேவையில்லை. பக்கவிளைவுகள், எச்சரிக்கைக் குறிப்புகள் எதுவுமே இல்லாதது.. உடல்பாதிப்பு உள்ளவர்கள், ஆபரேஷன் செய்தவர்கள், வயதானவர்கள், என யார் வேண்டுமானாலும் நடக்கலாம். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்ததுதான் நடைப்பயிற்சி.

நடைப்பயிற்சி: இந்நிலையில், நடைபயிற்சி குறித்து ஒரு ஆய்வு வெளியாகி உள்ளது.. போலந்தில் உள்ள லாட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் சுமார் 2,27,000 பேரின் தரவுகளை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தியது.

இந்த ஆய்வு முடிவுகளின்படி, இதய ஆரோக்கியம், மனச்சோர்வு, சோர்வை நீக்குதல், மனநிலையை மேம்படுத்துதல், மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை உருவாக்குதல், எடை அதிகரித்தலை தடுத்தல், புற்றுநோய் ஆபத்தை குறைத்தல் இப்படி பல நன்மைகளை கொண்டுள்ளதாம் நடைபயிற்சி.

ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச 2,337 அடிகள் நடந்தால், இதய நோய் சம்பந்தமான எந்த பிரச்சனையும் வராது என்றும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

மரணம்: அதாவது, ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6,000 முதல் 10,000 அடிகள் நடந்தால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம் என்றும் ஆய்வு கூறுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், தினமும் 4,000 அடிகள் நடப்பவர்கள் மரணம் முதல் இதய நோய் பாதிப்பு வரை தள்ளி போடலாமாம்.

அந்த ஆய்வு சொன்னதாவது: ஒருவர் இவ்வளவு தூரம்தான் நடக்க வேண்டுமென்பதற்கு உச்சபட்ச அளவீடுகள் இல்லை. இருந்தாலும், இது உங்கள் உடல் திறன் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தினமும் 2,337 அடிகள், அதாவது 25 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம்.. இளம் வயதில் ஏற்படும் மரணத்தைத் தடுக்க தினமும் 3,967 அடிகள் அதாவது 40 நிமிடங்கள் நடப்பது அவசியம்.

வயதானவர்கள்: ஒவ்வொரு 1,000 அடிகள் அதிகரிப்பிற்கும் 15 சதவீதம் அளவுக்கு அபாயம் குறைகிறது. 60 வயதிற்கு மேற்பட்டோர் என்றால் தினமும் 6,000 முதல் 10,000 அடிகள் நடப்போருக்கு, அதே வயதுடைய நடைபயிற்சி மேற்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் அபாயம் குறைவாக இருக்கும்... இது ஆண், பெண் என்று இருபாலினத்துக்கும் பொருந்தும்" என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+