ஈரல் ஈர்க்குதா.. ஆட்டு ஈரல் சமாச்சாரம் தெரியுமா? ஆமா, பக்கத்துல "பூண்டு" இருக்குதா.. உடனே இதை படிங்க
சென்னை: கோழிகளைவிட ஆட்டு ஈரல் தான் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதால், அதுதான் நம்முடைய உடலுக்கு நல்லது என்கிறார்கள்.. கர்ப்பிணி பெண்களுக்கும், டாக்டர்கள் பரிந்துரைக்கும் ஒரு அசைவம் என்றால் அது ஆட்டு ஈரல் மட்டும் தான்...!
100 கிராம் ஆட்டு கல்லீரலில் இருக்கும் கலோரிகள் என்னென்ன தெரியுமா? 217.95 கிலோ, புரதம் 16.97 கிராம், கொழுப்பு 13.77 கிராம், நிறைவுற்ற கொழுப்பு 1.42 கிராம், கார்போஹைட்ரேட்டுகள் 6.17 கிராம், ஃபைபர் 1.96 கிராம், சோடியம் 51.08 மிகி, பொட்டாசியம் 390.21 மி.கி, கால்சியம் 38.54 மி.கி, இரும்பு 5.83 மி.கி, துத்தநாகம் 3.05 மி.கி ஆகும்.

சத்துக்கள்: 100 கிராம் ஆட்டு கல்லீரலில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன தெரியுமா? வைட்டமின் ஏ 12120 மில்லி கிராம்,வைட்டமின் பி 2 0.33 மி.கி, வைட்டமின் பி6 0.70 மி.கி, வைட்டமின் பி9 163.01கி, வைட்டமின் சி 13.60 மி.கி, கரோட்டினாய்டுகள் 1017.69கி, வைட்டமின் டி 20.71 மி.கி, வைட்டமின் டி3 0.43கி, வைட்டமின் டி3(செயலில்) 0.14 மி.கி ஆகும்.. இதைத்தவிர, வைட்டமின் ஏ,பி,பி12 மற்றும் பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம் மற்றும் செலினியம் உள்ளிட்ட தாதுக்களின் ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன.
ஆட்டு கல்லீரலில் கலோரிகள் குறையாகத் தான் இருக்கும். இதில் கார்போஹைட்ரேட் 100 கிராமுக்கு 1.8 கிராம் கணக்கில் தான் இருக்கும். ஆனால் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கும். அதுபோன்று கோழி ஈரலில் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை விட கார்போஹட்ரேட் குறைவாகத் தான் இருக்கும் ஆனால் கொழுப்புச் சத்து ஆட்டு இறைச்சியைப் போன்று அதிகமாக தான் இருக்கும்.
ஈரல் நல்லதா: கோழி, மாட்டிறைச்சியின் கல்லீரலைவிட, ஆட்டு கல்லீரலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது.. கல்லீரல் உடலுக்கு வலிமை தரும்.
இரும்புச் சத்து குறைபாட்டை நீக்கி, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.. ரத்த சோகை குறைபாடு நீங்கும்... எனவே, ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறை ஈரல் சாப்பிடுவது நல்லது. ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் இந்த ஈரலில் உள்ளன.. இதிலுள்ள வைட்டமின் ஏ, நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்றவற்றின் செயல்பாட்டுக்கு உதவுகிறது..
உடல்எடை: டயட் இருப்பவர்கள், ஆட்டு கல்லீரலை 419 கிராம் அளவே உணவில் எடுத்து கொள்ள வேண்டும்... அப்படி எடுத்துக்கொண்டால், சரியான உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும். இதில், கொலஸ்ட்ரால் அதிகம் என்பதால் இதை சாப்பிடும்போது பூண்டையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல, உடல் மெலிந்து பலமில்லாமல் இருப்பவர்கள் வாரத்திற்கு 2 முறை ஆட்டு ஈரலை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம், உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கும்.
நம்முடைய உடலிற்கு தேவையான அனைத்து புரதச்சத்துக்களும் உண்டாகக் கூடிய அமினோ அமிலம் கல்லீரலில் இருக்கிறது. தசை நிறை பராமரிப்பு, திசு சரிசெய்தல், ஹார்மோன் உற்பத்தி, தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது... கல்லீரலில் விட்டமின் "பி" உள்ளதால், மன அழுத்ததிற்கு சிறந்த மருந்தாகும். வைட்டமின் "பி" சோர்வை குறைத்து, மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது.. கல்லீரல் சாப்பிடுவதால், நம்முடைய உடலின் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க செய்கிறது..
மாதவிடாய் நின்ற பெண்கள் இதை சாப்பிட்டால் பெரிதாக எந்த பிரச்சனையும் வராது. எதிர்ப்பு சக்திகள் கூடும்.. கண் பார்வை சீராக இருக்கும்... கர்ப்பிணி பெண்கள், ஆட்டு ஈரலை சாப்பிட்டுவந்தால் கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்... உடல் சுறுசுறுப்படையும்.. அசேமயம், அதிக ஏ வைட்டமின் காரணமாக கர்ப்பிணிகள் தவிர்க்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். எனவே டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் இதை கர்ப்பிணிகளும் அதிக அளவில் எடுத்துக் கொள்ளக்கூடாது.
தீமைகள்: ஆட்டின் கல்லீரலே ஆரோக்கியம் மிகுந்தது என்றாலும், இதில் சில தீமைகளும் இருக்கின்றன.. கல்லீரல் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தேவையற்ற அசௌகரியங்களை தந்துவிடும்.
கல்லீரலில் ஆரோக்கியமான மோனோ- மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இருந்தாலும், ஆரோக்கியமற்ற டிரான்ஸ் கொழுப்புகளும், நிறைவுற்ற கொழுப்புகளும் உள்ளன.. இந்த நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இருதய நோயுடன் தொடர்புடையவை என்பதால், இதய நோய் இருப்பவர்கள், அதிக அளவு கல்லீரல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்..
அதேபோல, பக்கவாதம் இருதய பிரச்சினைகளுக்கு அதிக கொழுப்பு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.. எனவே டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் இவைகளை சாப்பிடக்கூடாது..
பெரும்பாலும் ஓட்டல்களில் அல்லது ரோட்டு கடையில் "கலர்" சேர்த்து சமைப்பதால், அதை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.. அதேபோல, 2, 3 நாள் பதப்படுத்தப்பட்டு சமைக்கப்படும் ஈரலையும் தவிர்க்கலாம்.. காரணம், இப்படி பதப்படுத்தும்போது, ஈரல் கெட்டுப்போகாது என்றாலும், அதிலுள்ள சத்துக்கள் மொத்தமாக போய்விடுமாம்.. அதனால் வாரத்துக்கு ஒருமுறை சமைத்தாலும், வீட்டிலேயே, ஃப்ரஷ்ஷாக சமைத்து சாப்பிடுவது நல்லது.
எப்படி சாப்பிடுவது: கல்லீரலை எண்ணெய் அல்லது வெண்ணையில் வறுத்துச் சாப்பிட்டால் கலோரிகள் மற்றும் கொழுப்புச் சத்து நம் உடலில் அதிகமாக சேர்ந்துவிடும். அதனால் எண்ணெயில் பொரிப்பது போன்ற முறையில் இல்லாமல் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து வேகவைத்து சாப்பிடுவது நல்லது..
அதேபோல, ஈரலை எப்போது செய்தாலும், அதனுடன் பூண்டை அதிகமாக சேர்த்து சமைத்தால், ஆரோக்கியம் கூடும்.. குறைந்த அளவில் முழுமையான சத்துக்கள் கொடுக்கக்கூடிய ஒரே அசைவம் என்றால் அது இந்த, ஆட்டு ஈரல் மட்டும்தான்....!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications