முத்து முத்து "தித்திப்பு விதை".. வெயிட் குறையணுமா? ஒரே பழத்தில் 20 பிரச்சனை நீங்கும்.. என்ன பாருங்க
சென்னை: விதைகள் எப்போதுமே நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பவை. சம்பந்தப்பட்ட மரத்தின் சத்துக்களை உள்ளடக்கியிருப்பதே அதன் விதைகள் என்பதை மறுக்க முடியாது. அப்படியிருக்கும்போது, முழுக்க முழுக்க விதைகளாலேயே ஆன மாதுளம் பழம் கிடைத்தால்??
மாதுளையில் வைட்டமின் C, நார்ச்சத்து, பொட்டாசியம், அளவுக்கு அதிகமான ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்துள்ளன.. இதை சாப்பிடும்போது, புற்றுநோய் பாதிப்புகளை தடுத்து நிறுத்தும்.. அதனால்தான், புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களும்கூட, மாதுளம் பழத்தை விடாமல் சாப்பிடுவார்கள்..

மாதுளை: மாதுளையில் உள்ள விதைகளில் நிறைய நிறைய தளும்பிக்கிடப்பது நார்ச்சத்துக்கள்தான்.. பொதுவாக, பழங்களை சாப்பிட்டாலே மலச்சிக்கல் தீரும் என்பார்கள்.. ஆனால், இந்த மாதுளையில் உள்ள நீர்ச்சத்து, மலச்சிக்கலை விரட்டியடிப்பதில் முதன்மையாக திகழ்கிறது.. இந்த பழத்தின் விதைகள், நம்முடைய சருமத்துக்கும் மிகவும் நல்லது..
சமீபத்தில் எலிகளை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்கள்..அதில் சில எலிகளுக்கு சர்க்கரை தண்ணீரையும், இன்னும் சில எலிகளுக்கு மாதுளை ஜூஸையும் கொடுத்து வந்தார்களாம். இதில் சர்க்கரை தண்ணீரை குடித்த எலிகளை விட, மாதுளை ஜூஸ் குடித்த எலிகள் ஆக்டிவ்வாக பணிகளை செய்கிறதாம்.. அந்த பணிகளை விரைவில் கற்றுக் கொள்கின்றனவாம்.. அப்போதுதான், இந்த மாதுளை ஜூஸை குடித்தால், மூளை சுறுசுறுப்பாகும், அறிவு பெருகும் என்று அறிவித்துள்ளனர்.
ஆயுர்வேத சிகிச்சை: பழங்காலம் முதலே, ஆயுர்வேத மருந்துகளில் இந்த மாதுளையின் பயன்பாடுகள் அதிகமாகவே உள்ளது.. மாதுளையை சாப்பிட்டுவந்தால், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க செய்யும்.. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மேலும், குடல் ஆரோக்கியம் பெறுகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு, நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த இந்த மாதுளை மிகச்சிறந்த உணவாகும்.. வயிற்றிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து நீக்கும்.. இதயம் சம்மந்தமான நோய் பிரச்சனை உடையவர்களும், மிதமான அளவில் அதுவும் டாக்டர்களின் ஆலோசனையை பெற்று, மாதுளம்பழச்சாறை சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.
பழவகைகள்: மொத்த பழவகைகளிலேயே பெண்களுக்கு மிகவும் பயன்தரத்தக்க பழம் என்றால், அது இந்த மாதுளைதான்.. கர்ப்பிணி பெண்களுக்கு இந்த மாதுளை ஜூஸ் மிகவும் நல்லது.. கருவிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாக அமைய, இந்த மாதுளை துணைபுரியுமாம்.

பெண்களின் மூட்டுப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகிறது.. மாதுளம் பழ ஜூஸ் குடித்தாலே உடல் மினுமினுப்பாகும். ஆனால், இந்த பழத்திலுள்ள தோல்கள், காயங்கள், தழும்புகளை குணமாக்கக்கூடியது.. மாதுளைப்பழம் தலைமுடி வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கிறது..
தலைமுடி: ஜூஸ் குடித்தால், தலைமுடி வளரும் என்பதுபோலவே, இந்த பழத்தின் சாறு, தலைமுடிக்கு உறுதியை தரக்கூடியது.. தலைமுடி கொட்டுபவர்கள், இந்த சாறினை வைத்து, தலைக்கு மசாஜ் போல செய்தால், முடி உதிர்வது நிற்கும்.. கண்டிஷனராக பயன்படுத்தலாம். மெனோபாஸ் காலங்களில், மூட்டுவலி உள்ளிட்ட கோளாறுகளை சரி செய்ய இந்த மாதுளை உதவுகிறது.
ஆண்களுக்கும் இந்த மாதுளை மிகச்சிறந்த மருந்தாக விளங்கி கொண்டிருக்கிறது..இந்த மாதுளை ஜூஸ் குடித்தால், விறைப்புத்தன்மை பிரச்சனை கொண்டவர்களுக்கு, அக்குறைகள் குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..மேலும், விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆண்களை 50 வயதிற்கு மேல் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications