Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரல் + கல்லீரல்.. சத்தமில்லாமல் வேலைய காட்டும் "வீக்கம்"..இந்த 6 பொருளையும் உங்க கிட்ட சேர்க்காதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய உடலிலேயே கொஞ்சம் சிக்கலான உறுப்பு எது என்றால், அது இந்த கல்லீரல்தான்.. உடம்பில் உள்ள 2வது பெரிய உறுப்பு எது என்றால், அதுவும் இந்த கல்லீரல்தான். இப்படிப்பட்ட கல்லீரலை நாம் எப்படி பாதுகாப்பாக வைத்து கொள்வது தெரியுமா?

உடல் உறுப்புகளிலேயே மிக மிக முக்கியமானது கல்லீரல்.. இந்த கல்லீரல்தான், நம்முடைய உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு... உடலை சுத்தம் செய்யும் முக்கியமான வேலையை செய்வதே இந்த கல்லீரல்தான்..
சுத்திகரிப்பு: குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறது.. அத்துடன் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.. அப்படிப்பட்ட கல்லீரல் செயலிழந்துவிட்டால், அது உயிரையே பறித்துவிடும்..

Health Fatty Liver and Do you know How to keep our liver safe and Healthy

இந்த கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க மருந்து மாத்திரைகளை நாடுவதைவிட, கல்லீரலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள், நச்சுக்களை நீக்கினாலே கல்லீரல் பாதிப்படையாது. அப்படியானால்,

கல்லீரலை பாதிக்க செய்யும் உணவுகள் என்னென்ன தெரியுமா? மொத்தம் 6 விதமான உணவுகளை தொடவே கூடாது என்கிறார்கள். டாப் லிஸ்ட்டில் உள்ளது ஆல்கஹால்தான்.. அடுத்ததாக, ரெட் மீட் என்று சொல்லக்கூடிய சிவப்பு இறைச்சிகள்.. அதிலும் மாட்டிறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் என்பதால், கல்லீரலை சேதப்படுத்துமாம்..

6 வகை எதிரிகள்: அடுத்ததாக, உப்பு அதிகமாக சேர்ப்பதும் கல்லீரல் வீக்கத்துக்கு காரணமாகிவிடுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறிப்பாக, ரொட்டி, பீட்சா போன்ற உணவுகள் கல்லீரலுக்கு ஆகாதது. அடுத்ததாக, மாவுப்பொருட்களை அதிலும், வெள்ளை கலர் மாவில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவது கல்லீரலுக்கு கெடுதலை பெற்று தந்துவிடும்.. சர்க்கரையும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு கேடு உண்டுபண்ணக்கூடியது..

இந்த 6 உணவுகளை தவிர்த்துவிடுவதுடன், கல்லீரல் பலமாக சில உணவுகளையும் சேர்த்து கொள்ளலாம்.. அதில் குறிப்பிட்ட சில உணவுகளை பார்க்கலாம்.. காபி பொதுவாக நன்மைதரக்கூடியது இல்லை என்றாலும், கல்லீரலில் தேங்கும் கொழுப்பு செல் திசுக்களை தடுக்கிறதாம்.. ஒரு நாளைக்கு 3 கப் காபி குடிக்கிறவர்களிடம் நல்ல நன்மைகள் கிடைக்கிறதாம்.. க்ரீன் டீ மிகவும் நல்லது.. ஒரு நாளைக்கு 6 கப் வரை க்ரீன் டீ குடிக்கலாம். ஆனால் மாத்திரைகளாக எடுத்து கொள்ளக்கூடாது..

பழங்கள்: திராட்சை பழங்களும் கல்லீரலுக்கு நல்லது.. வீக்கத்தை குறைக்க உதவுகிறது.. கல்லீரலில் சேமிக்கப்படும் கொழுப்பின் அளவையும் குறைக்க உதவுகிறது.. அத்துடன், திராட்சையில் கல்லீரலை பாதுகாக்கும் நிறைய பொருட்கள் நிரம்பி உள்ளன.. இதில் சிவப்பு திராட்சை மிகவும் நல்லது.. இந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் அபாயம் குறையும்.

அதேபோல, முட்கள் நிறைந்த பேரிக்காய் இன்னும் நல்லது..

பூண்டு உணவில் அதிகம் சேர்த்து கொள்ளவேண்டும்.. தொப்பை குறைவதுடன், உடல் எடையும் சேர்ந்து குறையும்.. அத்துடன், கல்லீரல் வீக்க நோயிலிருந்து பூண்டு பாதுகாக்க உதவுகிறது..

முழு தானியம், ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகள் கல்லீரல் வீக்க நோயிலிருந்து பாதுகாக்கும். ஓட்ஸில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளதால், அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.. உடலில் உள்ள டிரை கிளிசிரைடை குறைத்து கல்லீரல் வீக்க நோயால் பாதிக்கப்படவர்களுக்கு பெரும் பலனை தருகிறது.

Health Fatty Liver and Do you know How to keep our liver safe and Healthy

பீட்ரூட்கள்: கல்லீரல் நோய், புண்கள், காயங்கள் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க முழுமையான மருத்துவத்தில் முட்கள் நிறைந்த பேரிக்காய் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. பீட்ரூட்டையும் நிறைய உணவில் சேர்த்து கொள்ளலாம்.. நெல்லிக்காய் சேர்த்துக்கொண்டால் கல்லீரலுக்கு இன்னும் நல்லது.. ஒமேகா-3 அதிகமுள்ள உணவுகளையும் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, அதிகளவு ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் ஆளி விதைகளில் உள்ளதால், கொழுப்பை குறைத்து கல்லீரலில் உள்ள கொழுப்பை மேம்படுத்துகிறது.. இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், போன்றவைகள் கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.. ஆனால், கல்லீரல் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் எந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள கூடாது..

சர்க்கரை அளவு: இதைத்தவிர, சாப்பாட்டில் சர்க்கரை, உப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடை எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.. முளை கட்டிய பச்சைப்பயறு, கோதுமை, கொண்டக்கடலை ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால், கல்லீரல் சுத்தமாகும். கல்லீரலை பலப்படுத்த மாத்திரைகளை தேடிப்போவதைவிட, நம் வீட்டு கிச்சனிலேயே இதற்கான மருந்தை தேடலாம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+