கவனம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே.. டீ குடிப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்குதான் இந்த செய்தி
சென்னை: டீ பிரியர்களா நீங்கள்.. அப்போ உங்களுக்குதான் இந்த டிப்ஸ்கள்.. டீ குடிப்பதில் உள்ள நன்மை - தீமைகள் என்னென்ன தெரியுமா?
டீ பிரியர்களிடம், ஒருநாள் முழுக்க டீ குடிக்காமல் இருக்க சொன்னால், அவர்களுக்கு தலையே சுற்றிவிடும்.. அந்த அளவுக்கு அவர்கள் டீயை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
டீ குடிப்பதற்கென்று பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.. எத்தனையோ பேச்சிலர்களுக்கு டீ-தான் பிரதான சாப்பாடாகவே உள்ளது.. எவ்வளவு களைப்பாக இருந்தாலும் சரி, மனவருத்தமாக இருந்தாலும் சரி, நிறைய குழப்பத்தில் இருந்தாலும் சரி, தூக்கமே வராமல் போனாலும் சரி, இவர்களுக்கெல்லாம் பெரும்பாலும் கை கொடுப்பது ஒரு கப் டீ-தான். அந்தவகையில், இந்தியர்களை ஒருங்கிணைப்பது இந்த தேநீர்தான்.

டீ பிரியர்கள்: சுறுசுறுப்பாக வேலையை தொடர்வதற்காக டீ-யை விரும்பி பலர் செல்கிறார்கள் என்றாலும், இந்த டீ-யில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைய உள்ளன.. கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதாகவும் சொல்கிறார்கள்.. ஆனால், தேநீருடன் சில சிற்றுண்டிகளை சாப்பிடுவது உடலுக்கு தீங்கை விளைவிப்பதாக நிபுணர்கள் வார்னிங் தருகின்றனர்.. அந்தவகையில், டீ-யுடன் சேர்த்து எந்த வகையான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இப்போது பார்ப்போம்..!!
அசைவ சாப்பாடு: அசைவ சாப்பாட்டுடன் சேர்த்து டீ யை குடிக்கக் கூடாது என்கிறார்கள்.. அதேபோல, குழம்பு, மிளகாய் போன்றவையுடன் டீ குடிக்கக் கூடாது. காரணம், அசைவ உணகளில் நிறைய பூண்டு, வெங்காயம் சேர்க்கப்பட்டிருக்கும்.. இதனால், செரிமான கோளாறுகள் ஏற்படும்... எலுமிச்சை ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை எடுத்துகொள்ளும்போதும், டீ அருந்தக்கூடாது... டீயில் உள்ள கேட்டசின்களை உறிஞ்சு எடுத்து கொள்வதில் இடையூறு ஏற்படும்..
அத்துடன் கேட்டசின்கள் என்பவை ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் ஆகும். இவை உடலுக்கு தேவையானது. இதை உறிஞ்சுவதில் குறுக்கீடு ஏற்பட்டு, இதனால், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் குறைந்துவிடுகின்றன. அதனால்தான், எலுமிச்சை ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்ளும்போது டீ குடிக்கக்கூடாது என்கிறார்கள்.
கடுங்காபி: ஆனால், கடுங்காபி என்று சொல்லப்படும் பால் இல்லாத கருப்பு டீயில் இந்த நிகழ்வு அளவில் குறைவாகவே ஏற்படுகிறது... அதேபோல, வறுத்த அல்லது பொரித்த உணவுகளுடன் சேர்த்து டீ குடிப்பது, செரிமானத்திற்கு கடினமாக இருப்பதுடன், நம்மை சுறுசுறுப்பாக உணர விடாமல் மந்தமாக மாற்றிவிடும்.. அதனால், செரிமானத்திற்கு கடினமான உணவுகளுடன் எப்போதும் டீ அருந்தக்கூடாது என்கிறார்கள்.

கடலை மாவு போன்றவற்றால் செய்யப்படும் பஜ்ஜியுடன் சேர்த்து டீ-யை குடிக்கக்கூடாதாம்.. இதனாலும் அஜீரண கோளாறு ஏற்படுகிறதாம்.. டீ குடிக்கும்போது, பச்சை காய்கறிகளை சேர்த்து சாப்பிடக்கூடாதாம்.. வெறுமனே பச்சை காய்கறிகள் சாப்பிடுவது உடலுக்கு நன்மையளிக்கும், ஆனால் டீ-யுடன் சேர்த்து சாப்பிடும்பொழுது தீங்கை தருகிறது என்கிறார்கள்.. அதேபோல, மஞ்சள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை டீயுடன் சேர்த்து குடிக்கக்கூடாது.. அது அமிலத்தன்மையை அதிகரிக்க செய்து செரிமான கோளாறுகளை உண்டுபண்ணுகிறது...
ஹைலைட்: இவைகள் எல்லாவற்றையும்விட ஹைலைட் என்னவென்றால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிக்கக்கூடாதாம்.. அஜீரண கோளாறு ஏற்படுத்தும் என்கிறார்கள்.. வயிறு உப்புதல், வலி, அல்சர் வலியையும் அதிகப்படுத்தும். இதற்கு காரணம் டீ மற்றும் காப்பியில் இருக்கும் பொருட்கள், நம்முடைய வயிற்றில் இருக்கும் ஜீரணனிக்கும் அமிலத்தை பாதிக்கிறது.. சில சத்துகளை உடம்பில் எடுத்துகொள்வதற்கு இந்த டீ அல்லது காப்பி இடையூறாக உள்ளது.. பல சத்துக்களை உள்வாங்குவதையும் தடுக்கிறது. அதனால், காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதுதான் சரி என்றும் சுடு தண்ணீர் பாதுகாப்பான தேர்வு என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications