சர்னு வெயிட் குறையணுமா.. இந்த ஒரு காய்க்குள்ளே இவ்ளோ சத்துக்களா? அதுவும் அந்த தோல் இருக்கே.. அபாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் சத்துக்களை நிரம்ப வைத்திருப்பது பீர்க்கங்காய்.. ஆனால், பீர்க்கங்காய் ஏனோ இந்த காயை வீடுகளில் அவ்வளவாக சமைப்பதில்லை.

பீர்க்கங்காயில், அதன் இலை, விதைகள், வேர் என அனைத்துமே நமக்கு பயன்தரக்கூடியது.. பீர்க்கங்காயில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் உள்ளன.. வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் போன்றவை உள்ளன..

சத்துக்கள்: பீர்க்கங்காயில் உள்ள அதிக அளவிலான பெப்டைடுகள், ஆல்கலைடுகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. குறைந்த குளுக்கோஸ் அளவைக் கொண்ட காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று.

health medicinal benefits of ridge guard and peerkangai is very good health recipes for weight loss

கணையத்தின் செயல்பாட்டைத் தூண்டி, இன்சுலினை முறையாகச் சுரக்க உதவி செய்கிறது. சர்க்கரையை முறையாக சுரக்கவும் உறிஞ்சவும் உதவுகிறது.. ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும். பாகற்காய் போலவே, சர்க்கரை நோயாளிகள் இந்த காயையும் சாப்பிட்டு வரலாம்.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த தீர்வினை இந்த பீர்க்கங்காய் தருகிறது.. சிவப்பு ரத்த அணுக்களை ஒருங்கிணைக்க வைட்டமின் பி6 பீர்க்கங்காயில் அதிகளவு உள்ளது. பீர்க்கங்காயை அதிக அளவில் சாப்பிட்டால், உடல் சருமம் பளபளப்பாகும்..

எடைகுறைப்பு: உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு அருமருந்து இந்த பீர்க்கங்காய்.. இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. கொழுப்பை சரியாக ஜீரணித்து உறிஞ்சும் உணவு இழைகளால் நிரம்பியுள்ளது. மேலும் இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய எண்ணம் தோன்றும். பீர்க்கங்காயில் உள்ள நீர்ச்சத்து உங்களுக்கு எடை இழப்பை தருவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.. பீர்க்கங்காய் சேர்த்த உணவுகளை உண்ணும்போது நீண்டநேரத்துக்கு பசி எடுப்பதில்லை.

ஆண்களுக்கு 2 விதமான வழிகளில் இந்த பீர்க்கங்காய் உதவுகிறது.. முதலாவதாக, கல்லீரலை பலப்படுத்துகிறது.. மேலும், மதுப்பழக்கத்தினால், பாதிக்கப்பட்ட கல்லீரலைகூட, இந்த பீர்க்கங்காய் தேற்றிக்கொண்டுவந்துவிடுமாம்.. அதேபோல, மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறினை, மருந்தாக தருவார்கள்.. வயிற்றில் அமிலச்சுரப்பியை தடுத்து, புண்கள் வராமலும் காக்கும்..

சிறுநீரக கற்கள்: அதேபோல, சிறுநீரகக்கற்களை வலியில்லாமல் வெளியேற்றும் ஆற்றல் கொண்டது இந்த பீர்க்கங்காய்கள்.. வாழைத்தண்டுக்கு அடுத்தபடியாக, சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.. பீர்க்கங்காய் கொடியின் வேரை எடுத்து நன்கு சுத்தம் செய்து, வெயிலில் உலர்த்த வேண்டும்... பிறகு, உலர்த்திய வேரை பொடி செய்து அந்த பொடியை தினமும் கால் ஸ்பூன் வீதம் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக்கல் வெளியேறிவிடும்.

இதன் இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் அவை சீக்கிரமே குணமாகும்.. அதேபோல, இளநரை பிரச்னைக்கு மிகச்சிறந்த தீர்வாகவும், இந்த பீர்க்கங்காய்கள் உள்ளன..

துண்டு துண்டுகளாக நறுக்கி லேசாக உலர்த்தி எடுத்து, அதை அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும்.. பீர்க்கங்காய் நிறம் முற்றிலும் மாறியபிறகு, அந்த எண்ணையை வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைமுடிக்கு தேய்த்து வந்தாலும், தலைக்கு குளிக்கும் முன் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தாலும், இளநரை சிறிது சிறிதாக குறைந்து, கருப்பாக மாற ஆரம்பிக்கும். இந்த பீர்க்கங்காய் இருக்கும்.

துவையல்: துண்டு துண்டுகளாக நறுக்கி லேசாக உலர்த்தி எடுத்து, அதை அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும்.. பீர்க்கங்காய் நிறம் முற்றிலும் மாறியபிறகு, அந்த எண்ணையை வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைமுடிக்கு தேய்த்து வந்தாலும், தலைக்கு குளிக்கும் முன் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தாலும், இளநரை சிறிது சிறிதாக குறைந்து, கருப்பாக மாற ஆரம்பிக்கும்.

இந்த பீர்க்கங்காய் தோலைகூட வீணாக்கிடகூடாது.. காயைவிட, இந்த தோலில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன.. சிலர் இந்த தோலை வைத்து துவையல் செய்வார்கள்.

துவையல்: பீர்க்கங்காய் தோலை நறுக்க வைத்து கொண்டு, வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு வாணலில், எண்ணெய் சேர்க்காமல், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு, அதே வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் பீர்க்கங்காய் தோல், வெங்காயம், துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் வதக்கி கொள்ளவும்.... இப்போது 2 கலவையும் சூடு ஆறவைத்து, மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்தெடுத்தால் பீர்க்கங்காய் துவையல் ரெடி.. காய்கறிகளில் தோல்களிலும் நிறைய சத்துக்கள் உள்ளது என்பதற்கு உதாரணம்தான் இந்த பீர்க்கங்காய்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+