நூக்கல் நூதனம்.. நூல்கோல் ஜூஸ் தெரியுமா.. உடம்பு மெலிய இந்த நூற்கோல் போதும்.. அல்டிமேட் பவர் நூக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் பச்சை காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வார்கள்.. அதில் முதன்மையான இடத்தில் உள்ள காய்தான், நூல்கோல் ஆகும்.

நூல்கோல் அல்லது நூக்கல் என்பார்கள்.. நூற்கோல் என்றும் சொல்வார்கள்.. வைட்டமின்கள் A,E,C, போன்றவைகளும், மற்றும், மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்களும் இந்த காயில் நிறைந்திருக்கின்றன.

Health Medicinal uses of Noolkal and Do you know Turnip is the Excellent vegetable for Weight Loss

உடல் எடை குறைய: கலோரிகள் மிகவும் குறைவு... அத்துடன், நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த காயாகும்.. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால்தான், மலச்சிக்கல் பிரச்சினையை தீர்த்து, உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது. இதை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது. இன்னும் சொல்லப்போனால், உடல் எடை குறைக்க மிகச்சிறந்த காய் இதுதான்.

இந்த காயை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. நீண்ட நேரத்திற்கு பசியும் எடுக்காது. இதனால் எடையும் குறைகிறது.. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதோடு பித்தநீரையும் உறிஞ்சும் ஆற்றல் கொண்டது இந்த நூக்கல்.. நார்ச்சத்து அதிகம் என்பதால், செரிமானத்தையும் சீராக்கிவிடுகிறது.. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த காயை தாராளமாக சாப்பிடலாம். அத்துடன், வயிறு பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது..

மாரடைப்பு: இந்த காயில் உள்ள சத்துக்களை போலவே, அதன் இலையிலும் அதிக சத்து இருக்கிறது.. இதய நோய்க்கும், மாரடைப்பு ஏற்படாமலும் தடுக்க உதவுவது இந்த இலைகள்தான். பெருங்குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

நூக்கல் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதிலுள்ள வைட்டமின் A நுரையீரல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.. நூக்கலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. அத்துடன் மார்பக புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.

தினமும் நூற்கோலை சாப்பிட்டு வந்தால், குடல் நாளங்கள் உறுதிப்படும்.. குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும் என்பார்கள். நூக்கலானது வயிற்று பிரச்சனைகளை நீக்கும் தன்மைக் கொண்டது. நரம்பு தளர்ச்சி ஏற்படாது. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

Health Medicinal uses of Noolkal and Do you know Turnip is the Excellent vegetable for Weight Loss

நூல்கோல் ஜூஸ்: நூல்கோலில் ஒருவித வாசனை வருவதால்தான் இதை சிலர் தவிர்த்துவிடுவார்கள்.. ஆனால், வேர்வையால் உடலில் உண்டாகும் உடல் துர்நாற்றம் தவிர்ப்பதற்கு பேருதவி புரிவது, நூல்கோல் ஜூஸ்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. பாதங்களில் வெடிப்பு வந்தால், இதன் சாறை பூசுவதால் வெடிப்பு மறையும்.

வயதாகும்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த நூற்கோல் தீர்வாகிறது.. குறிப்பாக வயதாகும்போது, எலும்புகளும் பாதிப்படைகின்றன. இதனால் வாதம், கீல்வாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதற்கு நூற்கோலை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் பலன் கிடைக்கும்.. அதேபோல. வயதாகும் போது ஏற்படும் கண்தசை அழற்சி நோய், கண்புரை நோய் ஏற்படாமல் இந்த காய் பாதுகாக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள் இந்த காயை அடிக்கடி சாப்பிடலாம்.. நூக்கல் சாறு 45 மி.கிராம் சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறகின்றன. இந்த நூல்கோலை சரியாக பார்த்து வாங்க வேண்டும்.. சற்று கடினமான காய் என்பதால், நன்றாக வேக வைக்கவும்.. சாம்பார், காரக்குழம்பு, பொரியல், கூட்டு, இப்படி நூல்கோலை வைத்து நிறைய செய்யலாம்.. சிலசமயம், சாலட்டுகள், ஊறுகாய்கள், சூப்புகளில் நூக்கோலை பயன்படுத்துவார்கள்..

அற்புதக்காய்கறி: தூக்கி பார்த்தால் கனமாக இருக்க வேண்டும்.. மேல்புறம் முழுவதும் ஒரே கலரில் இருக்க வேண்டும்.. வெட்டுக்காயங்கள் இருந்தால், அல்லது தூக்கும்போது எடை குறைவாக இருந்தால், தவிர்த்துவிடவேண்டும். எடை குறைவாக இருந்தால், அது முத்தின காய் என்று அர்த்தம். எனவே, நூக்கலை பொறுத்தவரை, வாரத்துக்கு 2, 3 முறையாவது சமையலில் பயன்படுத்துவது ரொம்ப நல்லது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+