வெறும் நாலே நாலு விதைகள் போதும்.. கெட்ட கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.. அதென்ன கீரை தைலம்? அற்புதம்
சென்னை: நம்முடைய வீடுகளில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய கீரைவகைகளில் ஒன்றுதான், இந்த அரைக்கீரை.. ஆரைக்கீரைதான், அரைக்கீரையாக மருவியது என்பார்கள்.
அரைக்கீரை சூடு தன்மை வாய்ந்தது.. அதனால்தான், காய்ச்சல், குளிர், கபம் போன்ற நோய்களை தீர்ப்பதில் இந்த கீரைக்கு பெரும்பங்கு உண்டு. இந்த கீரையுடன் சுக்கு மிளகு, இஞ்சி, மஞ்சள் சேர்த்து கஷாயம் போல வைத்து குடித்தால், ஜன்னி, வலிப்பு நோய், குளிர்க்ய்யசல் நீங்கும்.. நெஞ்சில் உள்ள சளியும் கரைந்துவிடும்.

ஆண்மை குறைபாடு: தாம்பத்ய வாழ்க்கை சிறப்புற இந்த அரைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும் என்பார்கள்.. இந்த கீரையை சுத்தம் செய்து, நெய்யில், சின்ன வெங்காயம் சேர்த்து, கீரையை கடைந்து சாப்பிட்டுவந்தாலே ஆண்மைக் குறைவிலிருந்து விடுபடலாம். பிரசவம் அடைந்த பெண்களுக்கு இழந்த சக்தியையும், பலத்தையும் மீண்டும் பெறுவதற்கு இந்த கீரை உதவுகிறது.
அதேபோல. அனிமியா உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி செய்து சாப்பிட்டு வரவேண்டும். இதனால், ரத்த சோகை நீங்கும்.. பாசிபருப்புடன் இந்த கீரையை 21 நாட்களுக்கு சமைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த சோகை மறையும். உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.. மிகச்சிறந்த சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.
வாயு பிரச்சனை, வாத நோய் பிரச்சனை, மலச்சிக்கல் முதல் விஷக்கடி வரை அனைத்தையும் தீர்க்கும் சக்தி கொண்டது இந்த கீரை.. இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்தால், தலைமுடி நன்றாக வளரும்.. ஞாபக சக்தியும் பெருகும்.. உடல் வலியும் நீங்கும். கண் பிரச்சனைகள் அகலும்.. உள்ளுறுப்புகளை பலப்படும்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நூரையீரல் நோய்கள் நீங்கும்.
கோதுமை மாவு: இந்த கீரை எந்த அளவுக்கு உதவுகிறதோ, அதே அளவுக்கு இந்த அரைக்கீரையின் விதைகளிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன.. பொதுவாக, கீரைகள் மட்டுமின்றி அவற்றின் விதைகளிலும் ஏராளமான சத்துகள் உள்ளன... கீரை விதைகளை மாவாக அரைத்து கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி போல செய்து சாப்பிடலாம்.. கீரை விதைகள் கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயநோய் வராமல் தடுக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அந்தவகையில், அரைக்கீரை விதையையும் தவிர்க்க முடியாது.. இந்த விதையையும் அரைத்து மாவாக்கி சாப்பிடலாம்.. இதனால், நாட்பட்ட நோய்களையும் மெல்ல மெல்ல தீரும்.. இந்த அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் அரைக்கீரைத் தைலம், மிகவும் ஃபேமஸ் ஆன தைலமாகவும்.. அரைக்கீரையை சமைத்து சாப்பிட்டாலே, தலைமுடிக்கு நன்மை தரும்..
கண்களுக்கு குளிர்ச்சி: கண்களுக்கும் புத்துணர்ச்சி தரும்.. இந்த அரைக்கரையின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த தைலம், தலைமுடி வளர்ச்சிக்கு பேருதவி புரிகிறது.. கண்ணுக்கும் குளிர்ச்சியை தருகிறது.. ஒருவேளை, இந்த விதையின் தைலம் கிடைக்காவிட்டால், அரைக்கீரை விதையை நல்லெண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி, அதை வடிக்கட்டி தலைக்கு தடவினாலே போதும்.. தலைமுடி அடடர்த்தியாக வளருவதுடன், ஷைனிங்கும் கிடைக்குமாம்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications