பொள பொள தொப்பை.. கடகடன்னு குறைய.. இதை ஒரு "துண்டு" சாப்பிடுங்க.. கண்ணெதிரே நடக்கின்ற மாற்றத்தை பாருங்க
சென்னை: உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், தானியங்கள் நிறைந்த உணவுவகைளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும. அதுவும் காலை நேரத்தில் எடுத்து கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.
உடல் எடை குறைய வேண்டும் என்றால், பச்சை காய்கறிகளும், கீரைகளும், தினம் ஒரு பழமும், போதுமான உடற்பயிற்சியும் மிக மிக அவசியம்.. இவைகளை தவிர்த்துவிட்டு, உடல் எடையை குறைப்பது என்பது கொஞ்சம்கூட சாத்தியம் கிடையாது. அதேசமயம், சின்ன சின்ன விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினால், உடல் எடை குறைய அவை பெரிதும் துணைபுரியும்.

தொப்பை: அதிலும், தொப்பையை குறைக்க வேண்டுமானால், முதலில் குறைக்க வேண்டியது அல்லது தவிர்க்க வேண்டியது உப்புதானாம்.. உப்பு, மைதா, சர்க்கரையை தவிர்த்தாலே பெரிய பாரம் குறைந்துவிடுமாம். அத்துடன் சின்ன சின்ன டிப்ஸ்களை தொடர்ந்து முயற்சிக்கும்போது, எடை குறைவதில் நல்ல வித்தியாசம் நிச்சயம் தெரியும் என்கிறார்கள்.
முக்கியமாக, புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை காலையிலேயே சாப்பிட்டுவிட வேண்டுமாம். இதுதான் அன்றைய நாள் முழுவதும் ஆற்றலை தரக்கூடியது, உடல் எடை குறைய துணைபுரியக்கூடியதாகும். அத்துடன் கொள்ளு, பார்லி போன்ற தானியங்களை வைத்து கஞ்சி செய்து சாப்பிட்டால் இன்னும் பலம் கூடும்.
கொள்ளு மற்றும் பார்லியை வறுத்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.. இதில் கொள்ளு பொடி 2 ஸ்பூன், பார்லி பொடி 1 ஸ்பூன், இரண்டையும் எடுத்து தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
கஞ்சி வெந்ததும், இதனுடன் மிளகு சீரக தூள், சிறிது உப்பு கலந்து சேர்த்து குடித்து குடிக்க வேண்டும். காலையிலேயே இப்படியான சத்து உணவுகளை சாப்பிடுவதால், உடல் எடை விரைவாக குறையும். ஊளைச்சதைகளும் கரையும்.. ஒரு மாதத்திலேயே உடலின் எடையில் மாற்றம் காணலாம்.
சோயா துண்டுகள்: அதேபோல, நொறுக்கு தீனி ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால், சோயா சங்க்ஸ் என்று சொல்லப்படும் சோயா துண்டுகளை வைத்து ஸ்நாக்ஸ் போல செய்து சாப்பிடலாம்.
வழக்கமாக, மீல்மேக்கர் எனப்படும் இந்த சோயாவை பிரியாணி உட்பட பல வகைகளில் பயன்படுத்துவார்கள். ஆனால், உடல் எடை குறைய நினைப்பவர்கள், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சாப்பிட்டாலே போதும். எண்ணெய் மட்டும் குறைவாக பயன்படுத்த வேண்டும். இதை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
நார்ச்சத்து: சோயாபீன் எண்ணெயை பிரித்தெடுக்கும்போது, அதிலிருந்து கிடைக்கும் துணைப்பொருள் தான், இந்த சோயா துண்டுகள். அதனால், எண்ணெய் இதில் சுத்தமாக இருக்காது.. கொழுப்புகளும் நீக்கப்பட்டிருக்கும். நார்ச்சத்தும் அதிகம். கலோரி அளவை குறைக்கவும் உதவும். புரதமும் அதிகமான பொருளாகும். அதனால் உடல் எடை குறைய சோயாவை அடிக்கடி பயன்படுத்தலாம்.
அதேசமயம், சோயா உருண்டைகள் நன்மை தருகிறது என்பதற்காக, அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், சிறுநீரகத்தில் கல் உருவாகும் என்பதையும் மறக்க கூடாது. அளவுக்கு மிஞ்சினால், எதுவானாலும், அது விஷம்தான்.












Click it and Unblock the Notifications