"பாகற்காய்".. திகட்ட திகட்ட ஆரோக்கியம் தரும் "கசப்புக்காய்".. ஆனாலும் ஒரு பிரச்சனை இருக்கே.. என்னவாம்
சென்னை: பாகற்காயை எந்த அளவுக்கு உணவில் சேர்த்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு வாழ்க்கை இனிக்கும்.. அதன் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? உடல் எடை குறைக்க வேண்டுமா? அப்ப உங்களுக்குதான் இந்த தகவல்.
பாகற்காயில், பசலைக்கீரையில் இருப்பதைவிட 2 மடங்கு கால்சியம் இருக்கிறதாம்.. எனவே, நம்முடைய எலும்பு, பல் வளர்ச்சிக்கு பாகற்காய் பெரிதும் உதவுகிறது..

அத்தனையும் சத்து: வாழைப்பழத்தில் உள்ளதைவிட 2 மடங்கு பொட்டாசியம் இருக்கிறதாம்.. எனவே, தசை வலிமை, நரம்பு மண்டலச் செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்கு பொட்டாசியம் உதவுகிறது.
பாகற்காய் சாப்பிடுவதால், வயிற்று பிரச்சனைகள் தீரும்.. குறிப்பாக இரைப்பை பிரச்சனைகளுக்கு இது நல்ல மருந்து.. சிலர் சமைக்கும்போதோ அல்லது சாப்பிடும்போதோ இதன் விதைகளை தவிர்த்துவிடுவார்கள். ஆனால், இந்த இதய நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்தும் விடுபட வைக்கிறது.. புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இந்த பாகற்காய்களுக்கு உண்டு..
ஜூஸ்: பாகற்காயை ஜூஸ் போல தயார் செய்து குடித்தால், குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகள் அழியும்.. அதேபோல, ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் நீக்கக்கூடியவை. அதேபோல, இதனுடன் எலுமிச்சைச் சாற்றில் கலந்து காலை வெறும் வயிற்றில் ஆறு மாத காலம் குடித்துவந்தால், முகப்பரு பிரச்னை நீங்கும்.. தோல் பிரச்னைகளான சிரங்கு, அரிப்பு, சொரியாஸிஸ், படர்தாமரை, அலர்ஜி போன்றவற்றுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
புற்றுநோய்: பாகற்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பது சமீபத்திய ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது.. அதேபோல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. இந்த பாகற்காய் ஜூஸை சீரான இடைவெளியில் குடித்து வருவது புற்றுநோய் செல்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி கட்டி உருவாவதை நிறுத்துகிறது. மார்பக, பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தும் இதன் மூலம் கணிசமாக குறைகிறது. தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்னைகள் நீங்கும்.
எடை இழப்பு: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பாகற்காயை முயற்சிக்கலாம்.. காரணம், இதில் 85% வரை தண்ணீர் உள்ளது. இந்த காயில் கலோரிகளும் மிக குறைவுதான்.. தண்ணீர் அதிகம் உள்ள காய் என்பதால், இதை சாப்பிடும்போது பசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.. இதனால் எடை குறையும். மேலும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. தவிர இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலினுள் இருக்கும் நச்சு தன்மையை குறைக்கின்றன.
தலைமுடியை பாதுகாப்பதிலும் பாகற்காய்களுக்கு தனித்துவம் உள்ளது.. இந்த காயில் இருந்து சாறு எடுத்து, அதில், சிறிது தயிர் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும். இதனால், தலைமுடி பளபளப்பாக மாறும்... இதன் சாற்றுடன் சீரகத்தை அரைத்து பூசிவந்தால், பொடுகுப்பிரச்சனையும் தீரும்.. இதன் சாற்றுடன் வாழைப்பழத்தை அரைத்து தலையில் தேய்த்தால், தலை அரிப்பு நீங்கும்...
பாகற்காய் சாற்றோடு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசிவர, முடிகொட்டுவது குறையுமாம். வாழைப்பழத்தை அரைத்தும் தலையில் தேய்த்தால், தலை அரிப்பு நீங்கும்.
எச்சரிக்கை: பாகற்காயை நல்லது என்றாலும், குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.. இல்லாவிட்டால், அடிவயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது. பாகற்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும் என்றாலும், கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ரத்த சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகள் இதைத்தொடர்ந்து சாப்பிட்டால், அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டி வரும். அதனால், டாக்டர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகுதான் பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பாகற்காயை தவிர்ப்பது நல்லது. அதேபோல, கருவுற்ற பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் பாகற்காய் சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
டிப்ஸ்: தேங்காய் உடைத்ததும் வரும் இளநீரில், சிறிது நேரம் வெட்டிய பாகற்காய் துண்டுகளை ஊற விட வேண்டும்.. அல்லது உப்பு போட்டு ஊறவைக்க வேண்டும். இப்படி செய்தால், பாகற்காயில் உள்ள கசப்பு குறைந்துவிடும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications