"பச்ச கத்திரிக்காய்".. கத்திரிக்காய் குண்டு கத்திரிக்காய்.. உங்க வெயிட்டை குறைக்கும் "அற்புத மருந்து"
சென்னை: தென்னிந்திய சமையல்களிலேயே தவிர்க்க முடியாத உணவு கத்தரிக்காய்.. சாம்பார், பொரியல், கூட்டு, மசியல் என்று ஏதாவது ஒரு ரூபத்தில் கத்தரிக்காய் இடம்பெற்றுவிடும்..
நம் முன்னோர்கள் கத்தரிக்காய் இல்லாமல், சமையலை அவ்வளவாக செய்ததே கிடையாது. இதில் உள்ள சத்துக்கள் + மருத்துவ குணங்கள் என்னென்னவென்று பார்ப்போம்.

சத்துக்கள்: கத்திரிக்காயில் கலோரி - 24%, புரதச்சத்து - 0 கிராம், நார்ச்சத்து - 3.40 கிராம், இரும்பு சத்து - 0.24 மில்லி கிராம், கால்சியம் - 9 மில்லி கிராம், சோடியம் - 2 மில்லி கிராம், பொட்டாசியம் - 229 மில்லி கிராம், சர்க்கரை - 3.5 கிராம், வைட்டமின் B6 போன்றவை அடங்கியுள்ளன. இதைத்தவிர, மாங்கனீசு, வைட்டமின்கள் A, C, B1, B2 இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
உடலுக்கு ஊட்டம் தருகின்ற அனைத்து வைட்டமின் சத்துக்களும் இந்த கத்தரிக்காயில் நிறைந்துள்ளன.. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதிலுள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது.. பசியின்மையை நீக்குகிறது.. உடல் சோர்வடைவதை குறைக்கிறது.. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது போன்ற பிரச்சனைகளையும் குறைக்கிறது.. நரம்பு மண்டலத்தை வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் கத்தரிக்காய் உதவுகிறது..
தலைமுடி: கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.. அதனால், சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை மின்ன செய்கிறது.. தலைமுடியின் வேர்கால்கள் வலுப்பட்டு முடியின் வளர்ச்சியும் அதிகமாகும்.. கத்திரிக்காய் காய்ச்சலை நீக்கக்கூடியது.. களைப்பை தீர்க்கக்கூடியது.. ரத்த அழுத்தத்தையும் குறைக்கக் கூடியது. இதயத்தின் பலம் அதிகரிக்கிறது.
மலச்சிக்கல் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க கத்திரிக்காய் சாப்பிடுவது நல்லது. கத்திரிக்காய் சாப்பிட்டால் இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு இதையெல்லாம் தடுக்குகிறது. கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமையை அதிகரிப்பதோடு ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. கத்திரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.
எடை குறைப்பு: உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கத்தரிக்காயை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.. காரணம், 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது.
பிஞ்சு கத்தரியை உணவில் சேர்த்து வந்தால், வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், போன்றவற்றுக்கு நிவாரணமாக இருக்கும்.
அலர்ஜி: முற்றிய பெரிய காய்களை சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இதுவென்பதால், மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம். கத்திரிக்காய் சாப்பிடும் சிலர் உடம்பின் தன்மைக்கு ஒத்துப் போகாமல் அலர்ஜியை உண்டாக்குகிறது. உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.
நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்... இந்த ஊதா நிற கத்திரிக்காய் சாப்பிடுவதால் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன..
இதிலுள்ள பாலிபினால்கள் புற்றுநோய்க்கு எதிரான விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. கட்டி வளர்ச்சி மற்றும் புற்றுநோய் செல்கள் படையெடுப்பதை தடுப்பதுடன், புற்றுநோய் உயிரணுக்களின் இறப்பையும் ஊக்குவிக்கிறது. நீரிழிவு நோயை நிர்வகிப்பதிலும், அதை கட்டுப்படுத்துவதிலும் கத்தரிக்காய்க்கு பங்குள்ளதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இருதய நோய் அபாயத்தை குறைக்கவும் இந்த கத்தரிக்காய் உதவுகிறதாம்.

எப்படி வாங்க வேண்டும்: கத்தரிக்காய் எப்படி வாங்க வேண்டும்: புத்தம் புதிய கத்தரிக்காய் என்றால், அடர் நிற பளபளப்பாக காணப்படும்.. அதில் விதையும் குறைவாக இருக்கும்.. எடையும் குறைவாக இருக்கும். அது கனமாக இருந்தால், அது பழையதாக இருக்கலாம் மற்றும் அதில் விதைகள் அல்லது பூச்சிகள் இருக்கலாம்.
அற்புதம்: அதேபோல, கத்தரிக்காயின் தண்டு புதியதாகவும் பச்சை நிறமாகவும் இருந்தால், அது புதிய கத்தரிக்காயாகும்.. பெரிய அளவிலான கத்தரிக்காய்களில் விதைகள், புழுக்கள் நிறைய இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்., அதனால் நடுத்தர அல்லது சிறிய கத்தரிக்காயை மட்டும் வாங்குவது நல்லது. குறைவான விலையில், நிறைவான சத்துக்களை அடக்கி வைத்துள்ள அற்புதஉணவுதான் கத்தரிக்காய்.












Click it and Unblock the Notifications