"கருவாடு" மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க.. அதுவும் கருவாட்டுக்குழம்பை விட்றாதீங்க.. அதுல அதிசயத்தை பாருங்க
சென்னை: கருவாடுக்குள்ளே இவ்வளவு சமாச்சாரங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை, இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் அறியாமலேயே உள்ளனர்.. எந்த பொருளுமே வீண் கிடையாது.. ஏதோ ஒரு நன்மை அவைகளுக்குள் இருக்கவே செய்கிறது என்கிறார்கள்.
தமிழர்களின் உணவில், கருவாடுக்கு ஒரு ஸ்பெஷல் இடம் எப்போதுமே உண்டு.. ஆனால், ஏனோ, மீனை உணவில் சேர்த்து கொள்ளும் அளவுக்கு கருவாடை சேர்த்து கொள்வதில்லை.. ஒருவேளை அதன் வாடை காரணமாக இருக்கலாம்.. அல்லது அதன் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். எனினும், நிறைய மருத்துவ நன்மைகளை இந்த கருவாடுகள் ஒளித்து வைத்து கொண்டுள்ளன.

முதன்மையானது: அசைவ உணவுகளிலேயே, அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு இந்த கருவாடுதான்... 80-85 சதவீதம் வரை புரதம் இந்த கருவாடில் உள்ளது.
கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். கருவாடுகளில் ஆண்டிஆக்ஸிடன்ட் அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும். உடல் நலம் குன்றியவர்கள் கருவாட்டுக் குழம்பினை எடுத்துக் கொண்டால், உடல் நலம் தேறுவார்கள்.
தீர்வுகள்: சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச் சாறு சிறந்த மருந்தாகும்... கருவாடு சாப்பிடுவதால்,பூச்சிகளை அகற்றும்.. வாத, கப நோய்களைக் கட்டுப்படுத்தும். மாதவிலக்கு பலவீன சீரமைப்பிற்கும், உடல் தேற்றத்திற்கும் இந்த சுறா கருவாடு உதவுகிறது.. கருவாடு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது.
திருக்கை கருவாடு: பெண்களுக்கு அருமருந்தாவது இந்த கருவாடுதான். நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளைச் சரி செய்ய உதவுகிறது.. அத்துடன், வாத ஓட்டம், பித்த ஓட்டம், ரத்த ஓட்டம் போன்றவற்றை செய்ய உதவுகிறது.. பிரசவித்த பெண்களுக்கு பால் சுரக்க வேண்டுமானால், பால் சுறா கருவாடு போல சிறந்த தீர்வு வேறு கிடையாது.. இதுபோலவே திருக்கைமீன் கருவாடிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.
கொடுவா கருவாடு வாங்கி குழம்பு வைத்தால், அதுவே பலருக்கு மருந்தாகிவிடும்.. காரணம், கொடுவாமீனை விட கொடுவா கருவாடில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது.. 100கிராம் கொடுவா மீன், நமக்கு 79 கலோரி ஆற்றலை தருகிறது என்றால்,100கிராம் கொடுவா கருவாடு, 266 கலோரி ஆற்றலை நமக்கு தருகிறதாம். அதாவது, கொடுவாமீனுடன் ஒப்பிடும்போது, புரதச்சத்து 4 மடங்கும், தாதுப்புக்களின் செறிவு 10 மடங்கும், இரும்புச்சத்து 5 மடங்கும், சுண்ணாம்புச்சத்து 2 மடங்கும் அதிகமாக இருக்கிறதாம்..
ரத்த சோகை: இந்த கருவாடை சாப்பிட்டால், உடல்பலவீனம் மறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.. ரத்த சோகை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு இந்த கருவாடு.
அதுபோலவே, கெளுத்தி மீனைவிட, உப்பங் கெளுத்திக்கருவாட்டில்தான் சத்து அதிகம்.. சீலா மீனைவிட, சீலா கருவாடுதான் சத்து அதிகம்.. இறால் கருவாடை அடிக்கடி உணவில் பயன்படுத்தினால், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது.. வாய்வுப் பிடிப்பு, பசிமந்தம், மூட்டுவலி, அரிப்பு, வயிறுஉப்புசம், போன்றவற்றிலிருந்தும் விடுபடலாம்.. இன்னும் ஏராளமான கருவாடுகள் இருக்கின்றன.. ஆனால், எல்லா கருவாடுமே நன்மை தரக்கூடியதுதான்.
கருவாடு கட்டுப்பாடு: கருவாடு சாப்பிடவும் சில கண்டிஷன் உள்ளது.. சில நேரம் காலம் உள்ளது.. யார் யாரெல்லாம் குறைவாக சாப்பிட வேண்டும் என்ற லிமிட் உள்ளது..
இந்த கருவாடு சாப்பிட்டுவிட்டு, மோர், தயிர், கீரை போன்ற உணவுகள் சேர்த்துக்கொள்ளகூடாது என்கிறார்கள்.. புட் பாய்சன் ஆகிவிடலாம்... கருவாடு சாப்பிட்டு, பால் தயிர் சாப்பிடுவதையும் தவிர்க்க சொல்கிறார்கள்.. இதய நோய், சிறுநீரக நோய், தோல் நோய், செரிமானச் சிக்கல் மிக்க நோய், கடும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் உள்ளவர்கள் கருவாட்டை தொடாமல் இருப்பது இன்னும் நல்லதாம்.
தொடாதீங்க: அதேபோல, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கருவாடு சாப்பிட கூடாது என்கிறார்கள். ரத்த அழுத்தம் உள்ளவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்கள், கருவாட்டை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது.. மற்றபடி, தவிர்க்க வேண்டிய அளவுக்கு கருவாடு சத்துகுறைந்த உணவு கிடையாது.. வாரம் ஒருமுறையாவது சாப்பிடலாம்..!!
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications