Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மீனு தலை".. ப்ளீஸ், "மீன் தலை" மட்டும் கிடைச்சா விட்டுடாதீங்க.. தட்டில ஓரங்கட்டாதீங்க.. ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீனு தலையை தட்டில் ஒதுக்கிவைத்து விடுவீர்களா? இனி அப்படி செய்யாதீங்க.. முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த மீன் தலையை சாப்பிட தந்தால், உடலுக்கு வலு சேர்க்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மீனை ஆசை ஆசையாக விரும்பி சாப்பிடுபவர்கள் பலரும், ஏனோ அதன் தலையை விரும்புவதில்லை.. கடைகளில் மீன் வாங்கும்போதே, தலையை வெட்டி எடுத்துவிட்டுதான், வாங்கி வருகிறார்கள்.. உண்மையை சொல்லப்போனால், மீனின் உடல் பகுதியை விட தலைப்பகுதிதான் அதிக சத்து கொண்டதாக இருக்கிறது.

health news and Do you know what are the Health Benefits of Fish Head

மீன் என்றாலே உடலுக்கு நல்லதுதான்.. ஆனால், எல்லாவகை மீன்களுமே நல்லது கிடையாது.. நல்ல தண்ணீரில் வளரும் மீன் மட்டுமே சிறந்தது என்று நினைத்து கொள்ளவும் கூடாது.

உப்பு தண்ணீர்: நல்ல தண்ணீரில் வளரும் மீனை விட, உப்பு தண்ணீரில் வளரும் மீன்களுக்குள் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் நல்லது. மீனின் தலைப்பகுதியில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது தெரியுமா? அதன் பலன்கள் தெரியுமா?

பலவகையான வைட்டமின்களும், தாதுக்களும், ஆரோக்கியமான கொழுப்புகளும் இந்த மீன் தலைக்குள்தான் அடங்கி உள்ளன.. ஆரோக்கியமான புரதம் அதிக அளவில் மீனின் தலைப்பகுதியில் இருக்கிறது. மற்ற இறைச்சி வகைகளில் இல்லாத அளவுக்கு, செறிவூட்டப்பட்ட கொழுப்பு மிகவும் குறைவாக இருப்பது இந்த மீனின் தலைப்பகுதியில்தான்.. எனவே, மீன் தலையை சாப்பிட்டால், கொழுப்பு கூடாது..

பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் குறையும்.. பொதுவாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் கொண்ட உணவு வகைகளை சாப்பிடுபவர்களுக்கு கொழுப்பு அளவு குறைவதாகவும், இதயதுடிப்பு சீரடைவதாகவும் பெரும்பாலான ஆராய்ச்சிகள் சொல்கின்றன.. அந்தவகையில், ஒமேகா அமிலம் இதய நோய்களில் இருந்து காக்கும்தன்மை கொண்டது.

மனசோர்வு: மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மன நோய்களில் இருந்தும் விடுபடவும் இந்த மீன் தலை உதவுகிறது.. அதேபோல, வைட்டமின்-ஏ நிறைய உள்ளதால், கண் பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன், மூட்டுவலி வீக்கம் குறையவும் நிவாரணமாகிறது.. அதைவிட முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவாக இந்த மீன் தலை பயன்படுகிறதாம்.. பெண்களின் மாதவிடாய் காலத்தில் வரும் வயிறு வலி இல்லாமல் தடுக்க உதவும்.

இந்த மீன் தலையை வைத்து, ஸ்பெஷலாக ஒரு கறி செய்கிறார்கள்.. அதாவது, மீன் தலையை கழுவி உப்பு, மஞ்சள் தூள் தடவி ஊற வைத்து விடவேண்டும்.. பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, கா.மிளகாய், கறிவேப்பிலை, தாளித்துவிட்டு, சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கிவிட வேண்டும்..

வெண்டைக்காய்: பிறகு, வெண்டைக்காய், கத்திரிக்காய் இவைகளில் ஏதாவது ஒன்றையோ அல்லது இரண்டையோ வெட்டி போட்டு வதக்கவும்.. இத்துடன் மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, 2 கிளாஸ் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.. சிறிது புளிக்கரைசலையும் ஊற்றி நன்றாக கொதித்து வரும்போது, அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் மீன் தலையை போட்டு, 3 நிமிஷத்தில் இறக்கிவிட்டால் போதும்.. அருமையான தலைக்கறி தயார்.

கேரளாவில்கூட, மீன் தலைக்கறி குழம்பு என்றால் ரொம்ப ஃபேமஸ்.. அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வார்களாம்.. அதாவது, ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க வைத்து, சிறிது மஞ்சள் தூள், உப்பு தூள், குடம்புளி சேர்த்துவிட வேண்டும்.. அத்துடன், மீன் தலைகளை சேர்த்து மூடிவைத்துவிட வேண்டும்.

கேரளா ஸ்டைல்: மண் சட்டியில், எண்ணெய், கடுகு, வெந்தயம், நசுக்கிய இஞ்சி, நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம் இவையெல்லாம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.. பிறகு, மிளகாய் தூள், மஞ்சள், மல்லி தூள் சேர்க்கவும்.. தீயை மிதமாக குறைத்து, தேங்காய்ப்பால் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததுமே, குடம்புளியுடன் சமைத்த மீன் தலைகளை அதில் கொட்டிவிடவும்.

அந்த மீன் தலை துண்டுகள் அனைத்தும், கிரேவியில் முழுமையாக மூழ்கும் வகையில் கடாயை சுழற்ற வேண்டும்.. 8 நிமிடம் வரை அப்படியே வைத்துவிட வேண்டும்.. பிறகு, மூடியை திறந்து கறிவேப்பிலை + சிறிது தேங்காய் எண்ணெயைத் தூவி, 10-20 நிமிடங்கள் மூடி வைத்தால், மீன்தலைக்கறி குழம்பு தயார். இந்த டிஷ்கள் எல்லாம் சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன..

மீன் துண்டு: ஆக, எப்படி பார்த்தாலும், வாரம் ஒருமுறை அல்லது 2 முறையாவது மீன் தலையை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளுவதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைத்துவிடுமாம். சிவப்பு நிறத்திலான இறைச்சிக்கு பதிலாக, மீன் தலையில் அந்த அளவுக்கு சத்துக்கள் உள்ளது என்கிறார்கள்.. அதனால், இனிமேல் தட்டில் ஒரு ஓரமா "மீன் தலையை" ஒதுக்காதீங்க.. கிட்ட சேர்த்துக்குங்க..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+