துண்டு துண்டா.. அதென்ன மோடி தட்டுல.. பார்க்கவே அட்டகாசமா இருக்கே.. அடடே இவ்ளோ ஸ்பெஷலா.. வாவ் விருந்து

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் தடபுடல் விருந்து நடந்துள்ளது.. இந்த விருந்தில், அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது, "மில்லட் கேக்".. இந்த மில்லட் கேக் என்றால் என்ன?

Recommended Video

    Modi US Visit | Modi-க்கு Special விருந்து வைத்து அசத்திய Joe Biden! அடுத்த Plan என்ன?

    பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில், இன்றைய தினம் மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.. வெள்ளை மாளிகையில் உற்சாகமான வரவேற்புடன், வாழ்த்தொலிகள் விண்ணை பிளந்தன.

    health news and Do you know what are the health benefits of millet cake

    வெள்ளை மாளிகைக்கு வந்த மோடிக்கு, அந்நாட்டு அதிபர் ஜோ பிடன் தம்பதியினர் சிறப்பு பரிசை அளித்தனர்.. விருந்தினராக பிரதமர் மோடி சென்றுள்ளதால், சந்தனப்பெட்டி, வைரக்கல்லை பரிசாக அளித்தார்..

    கவனம்: இந்த அமெரிக்க பயணத்தில், பெரிதும் கவனிக்கக்கூடிய விஷயம், வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அதிபர் தந்த இரவு விருந்துதான்.. வழக்கமாக, வெள்ளை மாளிகை வரலாற்றில், விருந்து என்றாலே, அது உச்சபட்ச கவுரவமாக கருதப்படுகிறது.. அதாவது, அரசு முறை பயணமாக வருகை தரும் தலைவர் அல்லது ஆட்சி செய்யும் மன்னரை கவுரவிப்பது.. மிக பிரமாண்டமான, அதிக கவர்ச்சிகரமான ஒன்றாக இந்த விருந்துகள் தயாராகும்..

    விருந்தோம்பல்: இது அதிகாரப்பூர்வ அரச முறைப்பயணத்தின் ஒரு பகுதியாகவும் மதிப்பிடப்படுகிறது.. நல்ல விருப்பத்தின் வெளிப்பாடு.. விருந்தோம்பலை நீட்டிக்கும் சிறந்த வழிமுறை.. நட்பை வலுப்படுத்தும் அற்புத தருணம்.. பாரம்பரியத்தை பகிர்ந்துக் கொள்ளும் இனிய தருணம்.. இன்னும் நிறைய நிறைய சொல்லலாம். அந்த அளவுக்கு வெள்ளை மாளிகை விருந்து என்பது முக்கியத்துவம் நிறைந்தவை.. உலக மக்களாலும் கவனிக்கப்படக்கூடியவை.

    அப்படிப்பட்ட வெள்ளை மாளிகைக்கு விருந்தாளியாக சென்றிருக்கிறார் நம்முடைய பிரதமர்.. ஏற்கனவே ஒருமுறை பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது, இதே வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றார்.. அந்த நேரம்பார்த்து, நவராத்திரி விரதம் இருந்திருக்கிறார் மோடி.. அதனால், வெறும் சுடுதண்ணீர் குடித்துவிட்டு வந்திருக்கிறார்..

    விருந்து: இந்த முறை அப்படியில்லை.. வெள்ளை மாளிகை விருந்தை மகிழ்வுடன் ஏற்றார்.. இரவு நடைபெற்ற விருந்தில் சுவைமிக்க வட மாநில மற்றும் ஐரோப்பிய புகழ்பெற்ற உணவுகள் இடம் பெற்றிருந்தன.. சில உணவுவகைகளில் அமெரிக்க, இந்திய தேசிய கொடி வண்ணமும் அலங்கரித்தன...

    பாஸ்தா மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பொருட்கள் விருந்தில் இடம்பெற்றிருந்தன.. இது பிடனுக்கு ரொம்ப பிடிக்குமாம்..
    அதேபோல, காளான் மற்றும் சோளத்தினால் ஆன உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன. அனைத்து உணவு வகைகளும் சைவமாகவே இருந்திருக்கிறது.. தர்பூசணி மற்றும் பச்சை காய்கறிகளுடன், சாலட், வெண்ணெய் சாஸ், டாங்கி அவகொடாசாஸ், ஐதராபாத் புகழ்பெற்ற உணவுகளும் இடம் பெற்றிருந்தன..

    சமையல்: பரிமாறப்பட்ட உணவுகள் எல்லாமே சத்து நிறைந்தவையாக இருந்திருக்கின்றன.. அதிலும், திணையிலான பல்வேறு உணவு வகைகள், சமைக்கப்பட்டுள்ளன.. இதில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது மில்லட்கேக்ஸ்.. பிரதமருக்கு தரப்பட்ட இந்த கேக், முழுக்க முழுக்க திணையை கொண்டு தயாரானவை.. தினை மாவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான மற்றும் சத்தான கேக் இதுவாகும்..

    வழக்கமாக கேக் என்றாலே மைதாவில் செய்வார்கள்.. அல்லது கேக் சாப்பிட்டாலே உடல் எடை கூடும் என்பார்கள்.. ஆனால், இந்த மில்லட் கேக் அப்படியில்லை.. இதில், இரும்பு சத்து, புரதம் இரண்டுமே நிறைந்துள்ளது.. இந்த கேக் உடல் எடையை குறைக்ககூடியது.. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது..

    இந்த கேக் செய்ய எந்த மாவையும் பயன்படுத்தலாம். கம்பு, கோதுமை, தினை, வரகு, குதிரைவல்லி, ராகி போன்றவற்றை இந்த கேக் செய்ய பயன்படுத்தலாம். இந்த கேக்கை தயாரிக்க குயினோவா மாவையும் பயன்படுத்தலாம்.

    வெண்ணெய்: இதற்கு மைதா, வெண்ணெய் அல்லது பேக்கிங் பவுடர் அல்லது பேக்கிங் சோடா போன்ற உயர்த்தும் ஏஜென்ட் தேவையில்லை. இந்த ஆரோக்கியமான கேக்கை தயாரிக்க 5 பொருட்கள் மட்டுமே தேவை. ஆரோக்கியமான இந்த மில்லட் கேக்கில், ஐசிங் இல்லை, கிரீம் இல்லை.. ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் இந்த எளிய மற்றும் எளிமையான கேக்கை முயற்சி செய்யலாம்.

    இந்த மில்லட் கேக் செய்ய எந்த மாவையும் பயன்படுத்தலாம். இதற்கு மைதா, வெண்ணெய் அல்லது பேக்கிங் பவுடர் அல்லது பேக்கிங் சோடா போன்ற உயர்த்தும் ஏஜென்ட் தேவையில்லை. இந்த ஆரோக்கியமான கேக்கை தயாரிக்க 5 பொருட்கள் மட்டுமே தேவை. அதாவது, கேக் தயாரிக்க பயன்படும் ஏதாவது ஒரு தினை மாவு + முட்டைகள் + சர்க்கரை + பால் + வெண்ணிலா இவைகளை மட்டுமே வைத்து கேக் செய்யலாம்.

    செய்முறை: சர்க்கரையுடன் முட்டைகளை சேர்த்து நன்றாக அடித்து கொள்ள வேண்டும்.. கேக் தயாரிக்க பயன்படுத்தும் மாவை, சல்லடையால் மென்மையாக சலித்து கொள்ள வேண்டும்.. பிறகு, பால் மற்றும் வெண்ணிலாவில் இதை கொட்டி மெல்ல கிளறவேண்டும்.. இறுதியில், அதை சூடாக இருக்கும்போதே ஒரு வாணலியில் கொட்டி, அதை சிறு சிறு துண்டுகளாக கேக் போல வெட்டிக் கொள்ளலாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+