"ஆட்டுக்கறி".. மட்டனை இப்படிதான் சாப்பிடணும்.. அட, "தலைக்கறி"க்குள்ள இவ்ளோ ஒளிஞ்சிருக்கா? அப்ப மூளை?
சென்னை: மட்டனை பொறுத்தவரை, நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும், நன்மை தரும் என்பார்கள்.. அந்தவகையில், ஆட்டுக்கறி தலையையும் சொல்லலாம்.
ஆட்டிறைச்சியை வாங்கும்போது, நாம் 2 வகைகளில் வாங்கி சமைக்கிறோம்.. செம்மறி ஆட்டுக்கறி + வெள்ளாட்டுக்கறி என்று இரண்டு வகையான மட்டன்கள் உள்ளன..
செம்மறி ஆட்டில், வெறும் 100 கிராமை எடுத்துக் கொண்டால், அதில், 300 காலரிகள் இருக்கிறது.. கொழுப்பு மட்டுமே 20 கிராம் உள்ளது.. புரோட்டீன் 25 கிராமும், கொலஸ்டிரால் 100 மி.கிராமும் உள்ளது. ஆனால், வெள்ளாட்டில் அப்படியில்லை.. 100 கிராமில் 130 காலரிதான் இருக்கிறது.. கொழுப்பு 3 கிராம்தான் உள்ளது.. புரோட்டீன் 27 கிராம் உள்ளது.. அதனால், இவைகளில் வெள்ளாடுதான் சிறந்தது..

மட்டன்கள்: பொதுவாக, இந்த இரண்டு மட்டன்களிலுமே இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி-12 என சத்துக்கள் சமமாக இருந்தாலும்கூட, காலரிகளில் வித்தியாசப்படுகிறது. அதனால், வெள்ளாட்டை பயன்படுத்துவது நல்லது.. செம்மறி ஆட்டில் கொழுப்பு அதிகம் உள்ளதால், மாரடைப்பு இதில் வர வாய்ப்புள்ளது.. வெள்ளாட்டுக்கறி சாப்பிட்டாலும்கூட, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
நார்ச்சத்து: மட்டனை எப்படி சமைக்கிறோம் என்பதில்தான் ஆரோக்கியம் அடங்கி உள்ளது. குறைவான எண்ணெய்யில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும். ஆனால், மட்டன் சாப்பிடும்போது கண்டிப்பாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்..
ஆண்களுக்கு 40 கிராமும், பெண்களுக்கு 30 கிராம் நார்ச்சத்தும் எடுத்தே ஆக வேண்டுமாம். அதனால், கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், காலி பிளவர், தோல் இருக்கும் உருளைக்கிழங்கு போன்றவைகளுடன் சேர்த்து மட்டன் சமைக்கும்போது, மட்டனில் உள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்பட்டுவிடும்..
பிறகு, வெங்காயம் + தக்காளி போன்றவைகளை சாலட் போலவும் சேர்த்து சாப்பிட வேண்டும்.. காரணம், இந்த நார்ச்சத்துக்கள் மட்டனுடன் இணைந்து வேகமாக கொழுப்பை எரித்துவிடும்..
இந்த ஆட்டுக்கறியில், ஒரு சிலருக்கு தலைக்கறி மிகவும் பிடித்த உணவாக இருக்கும்.. இட்லி, தோசைக்காக, தேங்காய் பாலில் சமைத்து சாப்பிடுவார்கள்.. சிலர் தேங்காய் ஊற்றாமலும், செய்வார்கள். எப்படி சாப்பிட்டாலும், அதிக சுவையை தரக்கூடியது இந்த தலைக்கறி.
பக்குவம்: ஆனால், தலைக்கறி பெரும்பாலானோரால் விரும்பப்படுவது இல்லை.. காரணம், அதனை சமைக்கும் பக்குவம் என்பது சற்று சிரமமானது. ஆனால், அதற்குள் நிறைய நன்மைகள் ஒளிந்து கிடக்கின்றன..
ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது. அந்தவகையில், ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும்.. இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு முக்கிய இடம் உண்டு என்கிறார்கள்.. அதேபோல,நம்முடைய தலை பகுதியில் இருக்கும் எலும்பு வலுப்படுகிறது.. பார்வை கோளாறுகள் சரியாகும்.. கண்களுக்கு கூடுதல் வலிமை கிடைக்கிறது.
சருமம் பொலிவு: இந்த தலைக்கறியை அளவோடு சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கிறார்கள்.. உடல் சூட்டை அகற்றுவதன், சருமத்திற்கு இளமை தரும் பளபளப்பை தரும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறியை வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி செய்து தருவார்கள்.. இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது.. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும்.. பிறந்த குழந்தைக்கும் தலை சீக்கிரமாக நிற்கவேண்டுமென்று, இந்த ஆட்டுத்தலைக்கறியை குழம்பு செய்து தருவார்கள்.
தலைக்கறிமூளை: சிலர், தலைக்கறி செய்யும்போது, ஆட்டின் மூளையை தனியாக வறுத்து சாப்பிடுவார்கள்.. இது கூடுதல் சுவையை தரக்கூடியது.. இது மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுப்பது இந்த ஆட்டின் மூளை.. கண்கள் குளிர்ச்சி பெறும்... நினைவாற்றல் கூடும்.. விந்தணு குறைபாடு உடைய ஆண்கள், ஆட்டுமூளையை சாப்பிடுவார்கள்.. இதனால், தாது விருத்தி உண்டாகும் என்று நம்பப்படுகிறது..

ஆட்டு மூளையில் கொழுப்பு மிக மிக குறைவு. இந்த மூளையிலுள்ள பாஸ்பரஸ், கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் செய்கிறது.. நினைவாற்றலை அதிகரிக்கும். ஆட்டு மூளையை உணவில் சேர்த்துக்கொள்வதால், கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்துகிறது..
தவிர்க்கலாம்: எனினும், அதிக அளவு தலைக்கறியை சாப்பிட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாம்.. அதேபோல, மது அருந்தி விட்டு, ஆட்டிறைச்சி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியமான ஆட்டின் அனைத்து பாகங்களும், அசைவ பிரியர்கள் சாப்பிடக்கூடியவையே.. நன்கு வேகவைக்கப்பட்ட சாப்பாட்டில் எந்த கெடுதலும் இல்லை.. ஆனாலும், அளவுக்கு மிஞ்சினால் எதுவானாலும் நஞ்சுதானே..!!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications