நாலஞ்சு துண்டு "இது" மட்டும் போதும்.. ஒல்லியாகலாம்.. டல்லடிக்கும் முகம்கூட டாலடிக்குமாம்.. அற்புதம்
சென்னை: பப்பாளிப்பழம் விலை குறைவுதான்.. ஆனால் அதுன் பயன்களோ அபாரம்.. ஏராளம் என்றே சொல்லலாம்.. எல்லா காலங்களிலும் கிடைக்கும் பழம் என்பது மட்டுமல்ல, மலிவு + சுவை + சத்துக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பழமும்கூட..!!!
பப்பாளிகளில் வைட்டமின் A உயிர்சத்து நிறையவே உள்ளதால், கண்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. பப்பாளி, தசை சிதைவு போன்ற நோய்களில் இருந்து கண்களை பாதுகாக்கின்றன. கார்னியாவையும் பாதுகாக்க உதவுகிறது. ஆன்டி ஆக்சிடென்டுகளும் நிறைந்திருப்பதால் விழித்திரை சிதைவை குறைக்கவும், பார்வை திறனை மேம்படுத்தவும் பப்பாளி உதவுகிறது.
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக்காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளியை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

வயிறு குடல்: வயிறு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு, பப்பாளி சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வைட்டமின் சி, நார்ச்சத்து, பல ஆக்ஸிஜனேற்றங்கள் இந்த பப்பாளியில் உள்ளதால், இதிலுள்ள நார்ச்சத்து குடல் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.. எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறிக்கு உதவுகிறது... பெருங்குடல் பிரச்சனையை நெருங்கவிடாமல் பப்பாளி தடுக்கிறது. ஒழுங்கற்ற குடல் இயக்கங்களிலிருந்து நிவாரணம் தருகிறது.. மலச்சிக்கலை விடுவிக்கிறது..
அடிவயிற்று பிரச்சனை, வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இப்படி வயிறு சம்மந்தப்பட்ட அத்தனை தொந்தரவுகளுக்கும் பப்பாளி தீர்வாக உள்ளது... அதனால்தான், பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும் என்பார்கள்.. முறையான மாதவிலக்குக்கு பப்பாளியே சிறந்த மருந்தாகும்.. சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி உதவுகிறது.
கர்ப்பிணிகள்: பழுக்காத பச்சை பப்பாளி துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும்.. எனினும், பழுக்காத பப்பாளியில் அதிக அளவு லேடெக்ஸ் கலந்திருப்பதால், கருப்பை சுருக்கத்தைத் தூண்டிவிடக்கூடியது என்கிறார்கள்.. எனவே, ஆனால், பழுக்காத பப்பாளியை கர்ப்பிணிகள் டாக்டரை ஆலோசிக்காமல் சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள்.
தோலுக்கு மிகச்சிறந்த கவசமாக இந்த பப்பாளி உள்ளது.. வைட்டமின்கள் E & C போன்றவை உள்ளதால், சருமத்தை பாதுகாக்கிறது.. சரும பொலிவை தருகிறது. சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.. ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி உதவுகிறது.
ஆரோக்கியம்: இதயத்திற்கு ஆரோக்கியமான உணவாக பப்பாளி உள்ளது.. இதில் பொட்டாசியம் + வைட்டமின் சி + ஆன்டிஆக்சிடென்டுகளும் அதிகமுள்ளதால், அனைத்தும் தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பப்பாளி உதவுகிறது.. பக்கவாதம், மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கக்கூடிய ஆற்றல் பப்பாளிக்கு உண்டு.. புற்றுநோய் அபாயத்தையும் தவிர்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக்கூடிய பழமாகும்.. நார்ச்சத்து + மிதமான கார்போஹைட்ரேட் இந்த பப்பாளியில் இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள். கலோரி குறைந்த பழங்களில் பப்பாளியும் ஒன்றாகும்.. அதாவது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன.. எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், தாராளமாக பப்பாளியை சாப்பிடலாம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.. காரணம், கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் பப்பாளி உதவுகிறது.
புற்றுநோய்: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளதால், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் பாதுகாக்கும் ஆற்றலும் பப்பாளிக்கு இருக்கிறது. இதைத்தவிர, லைகோபீன், புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும்.. பீட்டா கரோட்டினுடன் இணைந்து அத்தகைய புற்றுநோயை தடுக்கக்கூடியது இந்த பப்பாளி.
பல் சம்மந்தமான குறைபாட்டையும் பப்பாளி போக்குகிறது.. நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும் பப்பாளியை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கிறது.
நிறைந்த பலன்: இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒருவகை சத்து இந்த பப்பாளியில் இருக்கிறது.. அதனால், தொடர்ச்சியாக பப்பாளி சாப்பிடுபவர்களை எந்த நோயும் லேசில் அண்டாது.. ஆக மொத்தம் குறைந்த விலையில், நிறைய பலனை தரக்கூடியது, இந்த பப்பாளி..!!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications