வெறும் 4, 5 "இலைகள்" போதும்.. டக்கு டக்னு ஆச்சரியம் நிகழும்.. வாய்க்குள்ள போட்டு மெல்ல கூடாதாமே.. அட
சென்னை: நந்தவனத்தில் எத்தனை செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது... அதேசமயம், ஒரே ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்று வேதம் சொல்கிறது.. அந்த அளவுக்கு மகத்துவம் வாய்ந்தது துளசி.
"மூலிகைகளின் ராணி" என்று சொல்லப்படுவது இந்த துளசியைதான்.. கோயில்களுக்கு நடுவே துளசிகள் வளர்க்கப்படுகின்றன.. துளசிக்கு இன்னொரு பெயர் பிருந்தை என்பார்கள்.. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருக்கிறதாம்..

ஆனால், நாம் வெண்துளசி என்ற வகையைதான் பெரும்பாலும் அதிகம் பயன்படுத்துகிறோம்.. 4, 5 இலைகள் இருந்தாலே போதும்.. நம்மை நிறைய நோயிலிருந்து இந்த துளசி காக்கும் என்கிறார்கள்.
வாழவைக்கும் துளசி: என்றுமே இளமையுடன் வாழ உதவுகிறது துளசி நீர்... சுத்தமான செம்பு பாத்திரத்தில், நீரை ஊற்றி, ஒரு கைப்பிடி துளசியை போட்டு இரவு தூங்குவதற்கு முன்பு வைத்துவிட வேண்டும்.. காலையில், வெறும்வயிற்றில் அந்த நீரை குடித்து வந்தால், எந்த நோயும் அண்டாது.. இப்படி 48 நாட்கள் செய்ய வேண்டும்.. இதனால், தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும்... பார்வை குறைபாடு நீங்கும்.
தினமும் 4 துளசி இலையை சாப்பிட்டு வந்தாலே குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்னைகள் நம்மை அண்டவே அண்டாது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. ஆனால், முழுமையாக அந்த இலைகளை விழுங்க வேண்டும் என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள்..
காரணம் மென்று சாப்பிட்டால், சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமாம்.. காரணம், துளசி இலைகளில் அதிக அளவு பாதரசம், இரும்புச்சத்து இருப்பதால், நாம் துளசியை மெல்லும்போது அவை வெளிப்படும்.. மென்று சாப்பிடுவது நம் பற்களை கறைபடுத்தும்.. நிறமாற்றத்தை பற்களுக்கு தந்துவிடும். எனாமலில் தேய்மானத்தையும் ஏற்படுத்தும்.. அதனால், லேசாகவோ மெல்ல வேண்டும்.. அல்லது முழுவதுமாக துளசியை விழுங்க வேண்டும் என்கிறார்கள்.
வாய் துர்நாற்றம்: வெறும் வயிற்றில் துளசி சாப்பிடுவதால், வாய் துர்நாற்றம் பிரச்சனையும் தீரும்.. குளிக்கும் நீரில் முதல் நாளே துளசி இலைகளை ஊறவைத்தால், வியர்வை துர்நாற்றமும் நீங்கும்..
தலைவலியில் அவதிப்படுபவர்கள், துளசி இலை + சந்தனத்தை அரைத்து பேஸ்ட் போல செய்து நெற்றியில் தடவினால், தலைவலி நீங்குவதுடன், தூக்கமும் நன்றாக வரும். அதேபோல துளசி பொடியை பல் துவக்கவும் பயன்படுத்தலாம்.. இதனால் வாய் துர்நாற்றம் நீங்க, பல் சொத்தை, பல்வலி போன்றவை நீங்க உதவி புரிகிறது.. துளசி இலை சாறில் தேன் கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்களை சிறுநீர் பாதை வழியாக உடனடியாக வெளியேற்றும்..
பல்சொத்தை: வெறும் 12 துளசி இலைகளை சாப்பிட்டு வந்தாலே, மன அழுத்தம் நமக்கு குறைகிறதாம்.. இரத்த ஓட்டத்தை சீராக்கியும் வைத்திருக்கிறது..
எந்த காய்ச்சலாக இருந்தாலும் சரி, துளசியிடம் நிறைய தீர்வு இருக்கிறது.. 10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் வரும்வரை காய்ச்சி, குடித்து விடவேண்டும்.. பிறகு, சிறிது எலுமிச்சை சாறை அருந்தி, உடம்பெல்லாம் முழுமையாக போர்த்திக் கொண்டு படுத்தாலே, மலேரியா காய்ச்சல் மெல்ல குறையும் என்று சித்த மருத்துவம் சொல்கிறது.
உள்வெப்பம்: சளிக்கு சிறந்த மருந்தாக துளசி உள்ளது.. காரணம், உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் துளசிக்கு உண்டு.. துளசி சாறுடன் கொஞ்சம் தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.
துளசி இலையை, எலுமிச்சை சாறு விட்டு விழுதுபோல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்று போட்டு வந்தால், சொரி, சிரங்கு போன்றவை நீங்கும்.. துளசி இலையுடன், அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் மீது தடவி வந்தாலும், முகப்பரு காணாமல் போகுமாம்.
டீ தயார்: துளிசி இலையை சேர்த்து டீ தயாரித்து சாப்பிடலாம்.. கால் கப் துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க விட வேண்டும்.. 10 நிமிடங்கள் காய்ச்சிய பிறகு, அதில், 1 டீஸ்பூன் தேன் + 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டவும்... உயர் ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு துளசி அருமருந்தாகும்... அல்லது ஒரு கப் தண்ணீருடன் தேவையான அளவு துளசி இலைகளை சேர்த்து சில மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, அந்த தண்ணீரை வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம்.
சுவாச மண்டலம்: துளசி இலைகள் இயற்கையிலேயே சிறந்த ஆன்டிபயாடிக் ஆகும்.. துளசியில் உள்ள எண்ணெய்கள், நம்முடைய சுவாச மண்டலத்தில் திறம்பட செயல்படுகின்றன.
இந்துக்களால் புனிதமானவையாகவும் கருதப்படுகின்றன.. ஆன்மீகம் சார்ந்த விஷயங்களிலும் நம் முன்னோர்கள் அறிவியலை புதைத்தே வைத்திருந்தார்கள் என்பதற்கு இந்த துளசியும் ஒரு உதாரணம் ஆகும்.. ஆக மொத்தம் துளசியை மட்டும் கைவிட்டுடுடாதீங்க..!












Click it and Unblock the Notifications