தொள தொளன்னு தொப்பை.. பொல பொலன்னு கரையணுமா.. பொட்டுக்கடலை இருக்குல்ல.. அப்பறம் இந்த மூணும் முக்கியம்
சென்னை: உடல் எடை குறைக்க, 3 விதமான பானங்களை அருந்தினாலே போதும்.. நிறைய பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.. அதென்ன பானங்கள்?
உடல் எடையை குறைப்பதில் எத்தனையோ வழிவகைகள் உள்ளன. அதேசமயம், எந்த டயட்டாக இருந்தாலும் சரி, அது ஒவ்வொருவரின் உடல்வாகு மற்றும் உடலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஏற்றபடி தான் தேர்வு செய்ய வேண்டும்..
இது இன்டர்மிட்டண்ட் டயட்டுக்கும் பொருந்தும். அதில் ஒன்றுதான், இன்டர்மிட்டண்ட் டயட் என்பதாகும்.. இந்த டயட்டில் உள்ள முக்கியமான விஷயமே நாம் பின்பற்றும் உணவு இடைவெளி நேரமும், தேர்வு செய்வதும் தான். அதேபோல, எளிய உணவு முறையிலும் உடல் எடையை மெல்ல குறைக்கலாம்.. இதற்காக 5 வழிமுறைகள் சொல்லப்படுகிறது.

முதலாவதாக, வெறும் வயிற்றில் 2 டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தி கொள்வதுதானாம்.. காரணம், அன்றைய நாள் முழுக்க ஆரோக்கியமாக உடலை வைத்திருக்க உதவுவதே இந்த அடிப்படை தண்ணீர்தானாம்..
தண்ணீர் பாயிண்ட்: வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், ரத்த ஓட்டம் சீராகும்.. உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறும்.. உடலில் நீர்ச்சத்து இருக்கும். வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்தும்.. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.. முகத்திற்கு பளபளப்பை தரும்.. முடி ஆரோக்கியத்தை பராமரிக்கும்.. இப்படி அத்தனை நன்மைகளையும் வெறும் தண்ணீர் நமக்கு கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது.
ஊறவைத்த நட்ஸ்: அடுத்தாக, உலர் பழங்கள், மற்றும் நட்ஸ்களை அதிகம் சாப்பிடலாம்.. உடலில் உள்ள தீமை செய்யும் என்சைம்களை நீக்குவதற்கு இவைகள் உதவுகின்றன.
நட்ஸ் உண்பதால் கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் போன்றவைகள் கிடைக்கின்றன. சருமம் மென்மையாகும்.. தலைமுடி வலுப்பெறும்.. ரத்த சர்க்கரை அளவையும் எடையையும் கட்டுப்படுத்துகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.. இதயத்துக்கு வலு சேர்க்கிறது. ஹார்மோன் சுரப்பை சமநிலையில் வைத்திருக்கிறது.. உடல் எடையை கணிசமாக குறைகிறது.
பொட்டுக்கடலை சர்பத் என்று சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது.. அதாவது, பொட்டுக்கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு சிட்டிகை உப்பு + சீரகப்பொடி 1 ஸ்பூன் + துருவிய இஞ்சி கால் ஸ்பூன், ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ்.. இதெல்லாம் சேர்ந்து தயாரிக்கும் ஜூஸ்தான், பொட்டுக்கடலை சர்பத்.. இதில், புரதச்சத்து, நார்ச்சத்துக்கள், மினரல்கள் நிறைந்திருப்பதால், உடலுக்கு வலு சேர்க்கிறது.. அத்துடன், கொழுப்பை கரைத்து, தொப்பையையும் குறைக்க உதவுகிறதாம்.
மஞ்சள் டீ: அதேபோல, தொப்பையை கரைக்க மஞ்சள் டீயை உபயோகிக்கலாம்.. கிரீன் டீ, பிளாக் டீயைவிட, மருத்துவ குணம் நிறைந்த மஞ்சளை சேர்த்து இந்த டீ தயாரிக்கிறார்கள்.. இதில், ஆன்டி ஆக்சிடண்ட், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல் போன்ற பண்புகள் நம்முடைய உடம்பிலுள்ள தொற்றுக்களை தடுப்பதோடு கொழுப்புகளையும் எரிக்க உதவுகிறது.
பொதுவாகவே, மஞ்சள் பல நோய்கள் மற்றும் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அழகான சருமத்தை வழங்குகிறது. மஞ்சள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு, நம் கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
சமீபகாலமாகவே, மஞ்சள் டீ அதன் நீண்ட ஆரோக்கிய நன்மைகளுக்காக பிரபலமடைந்து வருகிறது.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு, மஞ்சள், இஞ்சி, கருமிளகு சேர்த்து கொதிக்க வேண்டும்.. பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து, பிறகு தேன் கலந்து குடிக்கலாம்.

மஞ்சள் டீ : ஒரே ஒரு டீஸ்பூன் அரைத்த மஞ்சளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கப் மஞ்சள் டீ-யில், 8 கலோரிகள், 1 கிராம் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் பி3, பி6, சி, தாமிரம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், ஃபிளாவனாய்டுகள், பீட்டா கரோட்டின், குர்குமின் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனால், நாட்பட்ட நோய்கள் மற்றும் அழற்சி அபாயம் குறைகிறது.. தொப்பையும் கரைகிறது. வீட்டிலுள்ள பொருட்களை சரியாக நாம் பயன்படுத்தினாலே பெரும் பலனை பெற்றுவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications