ஈஸியாக கிடைச்சாலும் யாரும் மதிக்காத பழம்.. கேன்சரையே தடுக்கும்.. டாக்டர் அஸ்வின் சொல்லும் பழம் எது?
சென்னை: ஊர்களில் எளிதாக கிடைக்கும் ஒரு பழத்தை சாப்பிட்டால் கேன்சர் நோய் வராமல் தடுக்கும் என டாக்டர் அஸ்வின் விஜய் தெரிவித்துள்ளார். அது என்ன பழம் தெரியுமா?
இதுகுறித்து டாக்டர் அஸ்வின விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொய்யா பழத்தின் நன்மைகள் குறித்து நிறைய பேர் கேட்டு வருகிறார்கள். இந்த பழத்திற்கு நிறைய குணங்கள் உள்ளன. அதில் 3 முக்கியமான குணங்கள் உள்ளன.

இந்த பழம் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. ஆனால் இந்த பழத்தை நாம் தான் கண்டுக் கொள்வதே இல்லை. இந்த பழத்தின் முதல் குணம்- எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிப்பது. 2ஆவது குணம்- இந்த பழத்தில் விட்டமின் சி அதிகமாக இருக்கிறது. விட்டமின் சி எதற்கு என்பது நம் அனைவருக்கும் தெரியும். எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் நோய் தொற்றை எதிர்த்து போராடுவதற்கும் உடலை சீராக வைத்துக் கொள்வதற்கும் பல உறுப்புகள் வேலை செய்யவும் விட்டமின் சி தேவை.
இந்த கொய்யா பழத்தில் லைகோபீன் என்ற ஒரு கரோடினாய்டு இருப்பதால் இது கேன்சரை தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுத்து அவை உருவாவதை தடுப்பதாகவும் ஆய்வுகளில் கூறுகிறார்கள். மூன்றாவது முக்கிய குணம்- இதில் நார்ச்த்து அதிகமாக இருக்கிறது. இதன் மூலம் வயிற்று சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுமார் 100 கிராம் கொய்யா பழத்தில் 300 மில்லி அஸ்கார்பிக் அமிலம், அதாவது வைட்டமின் சி உள்ளது. கொய்யாவில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள், தாதுக்கள் உள்ளன. வயிறு வலி உள்ளவர்கள் கொய்யா பழத்தின் விதையை எடுத்து சாப்பிடலாம். அதே நேரம் அளவுக்கு அதிகமாகவும் கொய்யா பழத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. கொய்யா அமிலத் தன்மை கொண்ட பழம். எனவே இதனால் வாயுத் தொல்லை நீங்கும்.

கொய்யா பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது. மலச்சிக்கல்தான் மூலத்திற்கு மிகப் பெரிய காரணம். கொய்யா சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். மூலமும் சரியாகும். மாலை நேரங்களிலும் இரவு நேரங்களில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கொய்யாவை இரவில் சாப்பிட்டால் அதன் செரிமானம் சரியாக நடக்காது என்கிறார்கள்.
இந்த கொய்யா பழத்தில் விட்டமின் பி இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யா பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் போலிக் அமிலமும் விட்டமின் பி9 போன்ற முக்கிய சத்துக்களும் உள்ளன. இது குழந்தையின் மூளை, நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்பட செய்கிறது. கல்லீரலை பலப்படுத்த அடிக்கடி கொய்யா பழத்தை சாப்பிடுவது நல்லது.












Click it and Unblock the Notifications