மீனில் "விரால் மீன்" மட்டும் ஏன் ஸ்பெஷல் தெரியுமா.. மதுரை பக்கம் மூக்கை துளைக்கும் வாசம்.. சீக்ரெட்
சென்னை: மீன்கள் எப்போதுமே நல்லதுதான் என்றாலும் விரால் மீனுக்கு ஒரு தனிசிறப்பு உண்டு.. இந்த மீனை அசைவ பிரியர்கள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள்.
அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம்.. காரணம், சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது... மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது.. மனித ஆயுளையும் கூட்டுகிறது.
கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன.. மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது... நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒமேகா கொழுப்பு: சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். அப்படி ஒமேகா அதிகமுள்ள ஒருமீன்தான் விரால் மீன்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு ஒமேகா 3 ஊட்டச்சத்து கிடைக்குமாம்.. அத்துடன் குழந்தைகளின் கண்பார்வை திறன் அதிகரித்து, மூளை வளர்ச்சியும் அதிகரிக்கும்.. கர்ப்பத்திலுள்ள குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்..
மீனின் தலை: விரால் மீனின் தோற்றம் உருண்டையாகவும், நீளமான உடலையும் பெற்றிருக்கும். .. இதன் தலையை பார்த்தால், பாம்பின் தலையை போலவே இருக்கும். இருக்கும். 100 கிராம் விரால் மீனில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? சோடியம் - 62 mg, கொழுப்பு - 1 g, புரோட்டீன் - 18 கிராம், கொலஸ்ட்ரால் - 44 mg, கால்சியம் - 1%, வைட்டமின் C - 2%, இரும்பு சத்து - 2% அடங்கியுள்ளன.
இந்த விரால் மீன் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கக்கூடியது.. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் மெல்ல குறைகிறதாம்.. அனைத்து வகை மீன்களைவிட, இந்த விரால் மீனில்தான் கூடுதல் ருசி இருக்கும். மற்ற மீன்களை போல, அந்த ருசி இருக்காது. இது தனித்துவமாக தெரியும். அதனால்தான், எப்போதுமே, இந்த மீனுக்கு மட்டும், டிமாண்டு அதிகமாகவே இருந்துவருகிறது.
இந்த மீனை வாங்கியதுமே, நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வெறும் கத்தியை வைத்து லேசாக சுரண்டி விட்டு, மீனை வெட்டி விடுகிறார்கள்.. இப்படியே, இந்த மீன்களை சுத்தம் செய்தாலும், அதன்மீது வழுவழுப்பு ஒட்டிக்கொண்டே இருப்பதால், கூடுதல் கவனத்துடன் சுத்தம் செய்ய வேண்டும்.. இந்த வழுவழுப்பு மீது ஒருவகையான துர்நாற்றம் இருக்கும்.. இதை அப்படியே விட்டுவிட்டால், மீனின் ருசியையே கெடுத்துவிடும்..
சுத்தம் செய்யும் முறை: மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்த விரால் மீன் வாங்கினால், அதை சுத்தம் செய்வதில், அதிக அளவு கவனம் பயன்படுத்தி, சிமெண்ட் தரையில் தேய்த்து தேய்த்து கழுவுவார்கள்.. அப்போதுதான், அந்த வழுவழுப்பு போய்விடும். எப்போதுமே இந்த விரால் மீன் ருசியாக இருக்க வேண்டுமானால், நன்றாக சுத்தம் செய்தாலே போதும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications