தொள தொள தொப்பை.. மளமளன்னு கரையணுமா.. அப்ப வெறும் வயிற்றில் "இதை"யும் சேர்த்துக்குங்க.. ஜஸ்ட் ட்ரை
சென்னை: உடல் எடை குறைய வேண்டும் என்றால், பச்சை காய்கறிகளும், கீரைகளும், தினம் ஒரு பழமும், போதுமான உடற்பயிற்சியும் மிக மிக அவசியம்..
இவைகளை தவிர்த்துவிட்டு, உடல் எடையை குறைப்பது என்பது கொஞ்சம்கூட சாத்தியம் கிடையாது. அதேசமயம், சின்ன சின்ன விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினால், உடல் எடை குறைய அவை பெரிதும் துணைபுரியும்.
தொப்பை: தொப்பையை குறைக்க வேண்டுமானால், முதலில் குறைக்க வேண்டியது அல்லது தவிர்க்க வேண்டியது உப்புதானாம்.. உப்பு, மைதா, சர்க்கரையை தவிர்த்தாலே பெரிய பாரம் குறைந்துவிடுமாம். அத்துடன் சின்ன சின்ன டிப்ஸ்களை தொடர்ந்து முயற்சிக்கும்போது, எடை குறைவதில் நல்ல வித்தியாசம் தெரியும் என்கிறார்கள்.

தொப்பைக்கு பெரிய எதிரியே இந்த சர்க்கரைதானாம்.. அதனால், சர்க்கரை பதிலாக தேன் சேர்த்துகொள்ளலாம். காலையில் எழுந்ததுமே வெதுவெதுப்பான நீரைக்குடிப்பது, தொப்பையை கரைக்க துணைபுரியும்.. வேண்டுமானால் அதனுடன் எலுமிச்சம் சாறு கலந்து குடித்ததால் இன்னும் சிறப்பு.
புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை காலையிலேயே சாப்பிட்டுவிட வேண்டுமாம். இதுதான் அன்றைய நாள் முழுவதும் ஆற்றலை தரக்கூடியது. அத்துடன் நீண்ட நேரத்துக்கு பசியும் தெரியாது. முக்கியமாக, முட்டை, தயிர், பருப்பு வகைகள் இருக்குமாறு காலை உணவு இருந்தால், உடல் எடை குறைவது சுலபமாகிவிடுமாம்.
வேர்க்கடலை: ஸ்நாக்ஸ் நேரத்தில் பிஸ்கட், நொறுக்குதீனி பக்கம் போகாமல், வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்ற சத்தானவைகளை சாப்பிடலாம். எக்காரணம் கொண்டும் க்ரீன் டீயை மட்டும் விட்டுவிடக்கூடாது. ஒருநாளைக்கு ஒருமுறையாவது இந்த க்ரீன் டீ குடித்துவிட வேண்டும்.
எந்த சமையல் செய்தாலும் பெரும்பாலும் இஞ்சி, பூண்டைஅதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். எப்போது தண்ணீர் குடித்தாலும், அதில் சீரகத்தையும் சேர்த்து குடித்தால் கூடுதல் சிறப்பை தரும். அதுவும் வெறும் வயிற்றில் 2, 3 டம்பளராவது சீரகத்தண்ணீர் குடிப்பது, அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியை தந்துவிடும். வயிறு சுத்தமாகும்.
உணவில் நிறைய புதினாவை சேர்த்து கொள்ள வேண்டும்.. இஞ்சி + சீரகம் சேர்த்து புதினா துவையலை சாப்பிடுவது பல வழிகளில் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.
ரத்த ஓட்டம்: தேனுடன் கலந்து இவற்றை குடிப்பதால் வயிறு சுத்தப்படுத்தப்படும். இதனால் எளிதில் எடை குறையும். சமையலில் நிறைய பூண்டை சேர்த்து கொள்ளலாம். கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும். பூண்டில் இருக்கக் கூடிய சல்பூரிக் அமிலம் உடலுக்கு சீரான அமைப்பை கொடுக்கும். ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
சாயங்கால நேரங்களில், ஒரு கிளாஸ் நீரில், கால் டீஸ்பூன் வெந்தயம், கருஞ்சீரகம், 2 சிட்டிகை ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து 15 அல்லது 20 நாட்கள் குடிக்கலாம். கருஞ்சீரகம் உள்ளதால், நீண்ட நாட்கள் சாப்பிடக்கூடாது என்பார்கள். தொப்பை குறைய இதுவும் ஒரு சிறந்த டிப்ஸ்..

வெந்தயம்: அல்லது வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை சூடாக்கி குடித்தாலும், தொப்பை குறைய துவங்கும்.. அல்லது காலையில், சிறிய வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதை சொம்பு நீரில் சேர்த்து, எலுமிச்சை சாறு, ஒரு கைப்பிடி புதினா இலை, 2 ஸ்பூன் இஞ்சித்துருவல் சேர்த்து, 2 மணி நேரம் ஊறவைத்துவிட வேண்டும். அதற்கு பிறகு அந்த தண்ணீரை குடித்தால், விரைவில் உடல் எடையில் மாற்றம் தெரிய ஆரம்பிntrக்குமாம்.
அல்லது மதிய நேரத்தில், மோர் + புதினா, இஞ்சி, வெள்ளரிக்காய் என அனைத்தையும் அரைத்து குடிக்கலாம். அல்லது காபி, டீ குடிக்கும்போது, அதனுடன் சிறிது பட்டை தூளை சேர்த்து குடிப்பது உடல் எடை குறைய உதவும்.
தொள தொள தொப்பை: அனைத்தையும்விட, முக்கியமானது, தண்ணீர் குடித்து கொண்டிருந்தாலே அதுவே மிகப்பெரிய டயட்தான்.. ஏனென்றால், உடலில் தண்ணீர் நிறைய இருந்தாலே தேவையற்ற கொழுப்புகள் கரைய துவங்கும் என்கிறார்கள். மொத்தத்தில், சீரான உணவும், முறையான தூக்கமும், ஆரோக்கியமான உடற்பயிற்சியும், 3 லிட்டர் தண்ணீரும் இருந்தாலே போதும்.. தொள தொள தொப்பை, கரைய துவங்கிவிடும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications