Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டுனு வெயிட் குறையணுமா.. இதை மட்டும் சாப்பிடுங்க.. ஈஸியா ஒல்லியாயிடலாம்.. பெஸ்ட் காலை உணவு இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலையில் நாம் எடுத்து கொள்ளும் உணவுதான், அன்றைய நாளுக்கான ஒட்டுமொத்த புத்துணர்ச்சியை தருவதுடன், உடல் எடை குறைவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அவை என்னென்ன தெரியுமா?
பொதுவாக, பலரும் காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள்.. அல்லது ஏதோ ஒரு உணவை அவசரத்துக்கு வாயில் போட்டுக் கொண்டு ஓடிவிடுகிறார்கள்.. ஆனால், உடல் எடை பராமரிப்பில், காலை உணவின் பங்கு குறித்து ஆய்வு ஒன்று முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

Health Super Benefits of Oats Meal and do you know what are the Excellent Healthy Breakfast

காலை உணவுகள்: அதாவது, தங்கள் உடல் எடையை சீராக பராமரிப்பவர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர், தினமும் காலை உணவை தவிர்க்காமல் எடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களாம்.. அந்தவகையில், காலை உணவு தவிர்க்க முடியாதது.. அப்படியானால் என்னென்ன உணவுகளை எடுத்து கொள்ளலாம் தெரியுமா?

வைட்டமின் C அதிகம் உள்ள உணவுகளை காலையில் சாப்பிடணும்.. காரணம், வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனை தரக்கூடியது இந்த வைட்டமின் அதிகமுள்ள உணவுகள்தானாம்.. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதும், இந்த வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகள்தானாம். முழுக்க சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

குறிப்பாக, உடைக்காத முழுத்தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகு தோசை, போன்றவைகளில் அதிகம் வைட்டமின் C இருக்கிறது.

பாலாடைக்கட்டிகள்: அதேபோல, பால், தயிர், பாலாடைக்கட்டிகள் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச்சத்தும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்துக்குத் தேவையான சக்தியை தருகின்றன.. இவைகளை சாப்பிட முடியாவிட்டாலும்கூட, ஒரு தக்காளி பழத்தையாவது சாப்பிடுவது மிகவும் நல்லதாம்.. அதில் வைட்டமின் சி ஏகப்பட்ட அளவு நிறைந்து கிடக்கிறது.

இதில் பெரிதும் பலன்தரக்கூடியது, ஓட்ஸ் உணவுதான்.. கலோரிகளும் குறைவு என்பதுடன், கார்போ ஹைட்ரேட்டும் நிறைந்துள்ளது. பீட்டா குளூக்கன் என்ற ஒரு வகை நார்ச்சத்து உள்ளதால், கொழுப்பின் அளவை குறைக்கிறது.. சாதாரண ஓட்ஸையே வாங்கி, வேக வைத்து, தேன், பால், நட்ஸ்களை சேர்த்து சாப்பிடலாம். உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெறும் ஓட்ஸிலேயே சிறிது காய்கறிகளை வேகவைத்து உப்புமா போல செய்து சாப்பிடலாம்.

கோதுமை அவல்: அதேபோல கோதுமை அவல் சாப்பிடலாம்.. பல்வேறு சத்துக்கள் இந்த அவலில் உள்ளதால், கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். காலை உணவுகளில் எது சாப்பிட்டாலும் தவறாமல் கிரீன் டீ குடித்து விட வேண்டும். ஒருவேளை காலை உணவை சரியாக எடுத்து கொள்ள முடியாவிட்டால், வேகவைத்த முட்டையை சாப்பிடலாம் அல்லது வாழைப்பழத்தையாவது சாப்பிட்டு விட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+