40+.. முப்பதிலேயே முதுமையா.. சுருக்கங்களை போக்கும் எளிய வழிகள்.. இதை மட்டும் மறக்காமல் சாப்பிடுங்க
சென்னை: முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க முடியுமா? குறைந்த வயதிலேயே ஏற்படும் தளர்வையும், தழும்புகளையும் நீக்க முடியுமா?
வயதாகும்போது சரும வடிவத்தை பராமரிக்க உதவும் புரத பொருளானகொலாஜன் உற்பத்தி குறையும். அதனால்தான் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள், தளர்ச்சி போன்றவை ஏற்படும்..
வயதாகி கொண்டே செல்லும்போது, வயதான தோற்றம் வருவது இயல்புதான்.. ஆனாலும், நிறைய பேருக்கு, குறுகிய காலத்திலேயே இந்த முதுமை தோற்றம் வந்துவிடுகிறது.. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.. மரபணு காரணங்கள், புற ஊதா கதிர்கள், மன அழுத்தம், வாழ்க்கை முறை, உணவு முறை, இப்படி நிறைய காரணங்கள் இருக்கலாம்..
தூக்கம்: நன்றாக தூங்கி எழுந்து, கண்ணுக்கு கீழே கருவளையம் வராமல் இருந்தாலே பாதி பிரச்சனை இல்லை.. அந்த அளவுக்கு தூக்கம் முக்கியம் என்கிறார்கள்.. தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், செல்கள் அழிவதோடு, அந்த இறந்த செல்கள் வெளியேறாமல் சருமத்திலேயே தங்கிவிடுமாம்.. முதிர்ச்சியான தோற்றத்துக்கு இதுவும் ஒரு பிரதான காரணம்.. அதனால், 8 மணி நேரம் தூக்கம் அவசியம்..
இதேபோல, கொழுப்புச்சத்து இல்லாத சருமம் வறட்சியை தந்துவிடுவதுடன், முதிர்ச்சியையும் சேர்த்து விரைவாக கொண்டு வந்துவிடும். அதனால் அளவான ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளும் தேவை என்பதை மறந்துவிடக்கூடாது..

ஈரப்பதம்: மேலும், நம்முடைய சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்வது முக்கியமானதாகும்.. அதுவும், கண்களை சுற்றியுள்ள தோலில், எண்ணெய் சுரப்பிகள் இல்லாமல் போனால், வறண்டு காணப்படும்.. அதனால், முதலில், கண்களை ஈரப்பதமாக வைத்திருப்பது அவசியம்.
முக சுருக்கத்துக்கு எலுமிச்சையைவிட அருமருந்து வேறு இருக்க முடியாது.. எலுமிச்சை சாறு கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், சுருக்கங்களும், புள்ளிகளும் நீங்கும்.. ஆனால், எலுமிச்சையை சருமத்திற்கு பயன்படுத்தினால், கட்டாயம் மாய்சுரைசர் பயன்படுத்த வேண்டுமாம்..
கற்றாழை: இன்னொரு சிறந்த வழி கற்றாழைதான்.. முகத்துக்கு பூசப்படும் அனைத்து கிரீம்கள், நெயில்பாலிஷ் உட்பட, அனைத்துமே இந்த கற்றாழையில் இருந்துதான் பெறப்படுகிறது.. எனவே, இதன் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும்.. இந்த சத்துக்கள், சருமத்துளைகளுக்குள் நுழைந்து, அங்கு தேங்கியுள்ள நச்சுக்களையும், இறந்த செல்களையும் வெளியேற்றிவிடும்.. இதனால், சருமம் வறட்சி அடைவதையும் தடுக்கலாம்..
தினமும் இரவில் தூங்குவதற்கு மன்பு, இந்த ஜெல்லை முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி வந்தால், சருமத்திற்கு தேவையான வைட்டமின்களான A, E, C என அனைத்துமே கிடைத்துவிடும்.. வயது முதிர்வு காரணமாக ஏற்படும் புள்ளிகள், கோடுகளைகூட இதை சரி செய்ய உதவுகிறது...
சந்தனம் + பன்னீர் + கிளிசரின் போன்றவற்றை பேஸ்ட் போல செய்து, முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழுவினால், முக சுருக்கம் குறையும்.. வாரம் ஒருமுறை இப்படி செய்யலாம்.. அல்லது கடலைமாவுடன் + கேரட் ஜூஸ் கலந்து முகத்தினால் தேய்த்து, சிறிது நேர கழித்து கழுவி வரலாம். அல்லது பப்பாளி பழத்தில் சில துளிகள் பால் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து பூசலாம்..
மனமகிழ்ச்சி: மேலும், தினமும் காய்கறிகள் மற்றும், வாரம் 2 முறையாவது பழச்சாறுகளை குடிக்க வேண்டும்.. இவை அனைத்தையும்விட முக்கியமாக, மனமகிழ்ச்சியுடன் இருந்தாலே பாதி முதுமை நம்மிடம் அண்டாது..!!
ஃபேஸ்மாஸ்க்: அல்லது சுருக்கத்தை போக்க, வீட்டிலிருந்தபடியே ஒரு ஃபேஸ் மாஸ்க் தயார் செய்து பயன்படுத்தலாம்.. மைசூர் பருப்பு 2 ஸ்பூன், பச்சரிசி 2 ஸ்பூன், இரண்டையும் மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள்.. இதில், 2 ஸ்பூன் மட்டும் எடுத்து, அதனுடன் தயிர் - 1 ஸ்பூன், அரைத்த தக்காளி விழுது - 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் - அரை ஸ்பூன் சேர்த்து விழுதாக கலந்து, முகத்தில் கீழ்ப்பக்கத்தில் இருந்து மேல்பக்கம் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
அதேபோல், கழுத்திலிருந்து பேஸ் மாஸ்க் போட வேண்டும். பத்து நிமிடம் கழித்து உங்களுடைய தோல் இறுக்கி பிடிக்கத்தொடங்கும். பிறகு லேசாக தண்ணீரைத்தொட்டு முகத்தில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் சோப்பு போடாமல் கழுவி வந்தால் போதும்.. வாரத்தில் 2 நாட்கள் இப்படி செய்வதால், நல்ல வித்தியாசம் முகத்தில் தெரியும்.. சுருக்கமும் படிப்படியாக குறையும்.. இதெல்லாம் முக சுருக்கங்களை குறைக்க செய்யும்.. சருமத்தையும் ஈர்ப்பதமாக வைத்திருக்கும்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications