மாமல்லபுரத்தில் ஒரே ஆச்சரியம்.. அதென்ன மஞ்ச கலர்ல இருக்கு.. திரண்ட மக்கள்.. கிட்டபோய் பார்த்தால்?
காஞ்சிபுரம்: பலரும் அறியாத மீன் புலாசா.. மற்ற மீன்களைவிட, இந்த மீனுக்கு எப்போதுமே ஒரு கிராக்கி இருந்து கொண்டே இருக்குமாம்.. என்ன காரணம் தெரியுமா?
கடல்வாழ் மீன்கள் எத்தனையோ இருந்தாலும், புலாசா மீன் அவ்வளவாக நமக்கு கிடைப்பதில்லை.. ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றின் கழிமுகப்பகுதியில் இந்த மீன் கிடைக்குமாம்.. அந்த அளவுக்கு அரிதானது.. கடலும் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் இந்த மீன் சிக்குகிறது.. "மீன்களின் ராஜா" என்று இந்த புலாசா மீனை அழைக்கிறார்கள்.
அதுவும், ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் மட்டுமே இந்த மீன் அந்த பகுதிகளில் கிடைக்கும் என்கிறார்கள்.. அதனால்தான், இந்த மீன் கிடைத்துவிட்டால், போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்களாம் மீன்பிரியர்கள்.. இதற்காக எவ்வளவு விலையும் தர தயாராகவும் இருப்பார்களாம்..

2 கிலோ எடை: இதற்கு காரணம், இந்த மீனை சமைத்து சாப்பிடுவதை, கவுரவமாக நினைக்கிறார்கள் ஆந்திர மக்கள்.. அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடுவதை கெத்தாக பார்க்கிறார்கள்.. இப்படித்தான் ஒரு இளைஞர், கோதாவரி ஆற்றிலிருந்து பிரியும் ஆறு ஒன்றில் வலை வீசி மீன் பிடித்துள்ளார். அவருக்கு எதிர்பாராத விதமாக சுமார் 2 கிலோ எடையுள்ள புலாசா மீன் சிக்கியது..
உடனே பார்வதி என்ற மீன் வியாபாரி, 19,000 செலுத்தி அந்த மீனை வாங்கிவிட்டாராம்.. மார்க்கெட்டில் அந்த மீனை 20,000 ரூபாய்க்கு விற்றுள்ளார் பார்வதி. ஒருமுறை 2 கிலோ எடை கொண்ட மீன் ஒன்று, ரூ.25,000-க்கும் ஏலம் போயிருக்கிறது.. அதுமட்டுமல்ல, கவுரவம் என்ற விஷயத்துக்குள் இந்த மீனை கொண்டுவந்துவிடுவதால், இந்த மீனை வாங்கி மற்றவர்களுக்கு பரிசு அளிக்கும் பழக்கமும் அவர்களுக்கு இருந்து வருகிறது.
நன்மைகள்: எல்லா வகை மீன்களுமே ஏதாவது ஒருவிதத்தில் நமக்கு பலன் தரத்தக்கதுதான். அந்த வகையில் புலாசா மீனும் அதிக சத்துக்களை கொண்டுள்ள மீன்வகையாகும்.. இதய நோய், புற்று நோய் உள்ளிட்ட பலவித நோய்களின் பிரச்னைகளை இந்த மீன் தீர்க்கிறது.. அதனால்தான், "தாலியை விற்றாவது புலாசா மீனை வாங்கித் தின்றுவிடு" ("புஸ்டேலு ஆமினா புலாசா தின்னிலி") என்று ஆந்திராவில் ஒரு பழமொழியே இருக்கிறதாம்.
பெயர் காரணம்: இந்த மீனில் உள்ள கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-3 உடன் இணைந்து, அதை மிகவும் நல்லதாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகின்றன.. அதாவது மீனில் ஒமேகா-3 நிறைந்து, கண்களுக்கும் சருமத்திற்கும் நல்லது. இந்த மீன் பிடிக்கப் பட்டு கரையிலேயே விற்பனை செய்யப்பட்டு விடுவதால், மார்க்கெட்டுக்கு வருவது என்பது மிகவும் அரிது என்கிறார்கள்..
அந்த அளவுக்கு இந்த மீன் டிமாண்டாக இருக்கின்றது. புலாசா என்ற பெயரே தெலுங்கு மொழியிலிருந்து வந்ததாம்.. இதன் பொருள் "செதில்கள் கொண்ட மீன்" என்பதாகும்.
புளசா மீன் கெண்டை மீன் குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் இரண்டு அடி நீளம் வரை வளரக்கூடியது. மீனின் உடல் பெரிய செதில்களால் மூடப்பட்டிருக்கும், அவை சுவையான கறி தயாரிக்கப் பயன்படுகின்றன. மீனின் சதை வெண்மையாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். மணமும் வித்தியாசமாக இருக்குமாம்.
சினிமா பிரபலங்கள்: ஒருமுறை இந்த புலாசா மீன் 48 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போயுள்ளது.. அதிலும், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இந்த மீனுக்காக போட்டிபோடுவார்களாம்.
அதேபோல, "பலாசி" மீன்கள் என்று ஒருவகை உண்டு.. பலாசி + புலாசா என்ற இந்த மீன்கள் பெயரை வைத்து சிலர் குழம்பி விடுவார்கள்.. இந்த பலாசா மீன்களை நாம் சாப்பிட முடியாதாம்.. இதை பலூன் மீன்கள் என்றும் சொல்வார்கள்.. காரணம், இந்த மீனின் உடலில் இருக்கும் வெளி முள்ளானது விஷத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது... அதனால் வலையை வீசும்போது, இந்த மீன் சிக்கினாலும், அதை கரையிலேயே தூக்கி வீசிவிடுவார்களாம்..

மாமல்லபுரம்: இப்படித்தான் நேற்றும் வலையில் பலாசி மீன்கள் மாமல்லபுரத்தில் மீனவர்களுக்கு சிக்கி உள்ளன.. அவைகளை வழக்கம்போல் வீசியெறிந்துவிட்டு போய்விட்டனர்.. இந்நிலையில், இன்று அதிகாலை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடற்கரையை கண்டுகளித்தபோது, இந்த மீன்களை அவர்கள் தெரியாமல் மிதித்துவிடவும், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவைகளையெல்லாம் அவ்வப்போது மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், மாமல்லபுரம் மீனவர்கள் வலைகளில் உணவிற்கு பயன்படுத்த முடியாத "பலாசி" என்ற பலூன் மீன்கள் இப்போதெல்லாம் நிறைய சிக்கி வருகிறது.. இதனால் மீனவர்களின் வலையும் சேதம் அடைந்து வருகின்றதாம்.. இன்று அதிகாலை மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் வலைகளிலும் அதிகளவில் பலாசி மீன்கள் சிக்கியதால், கவலை அடைந்துவிட்டனர்..
குஷி: மீனவர்கள் வலையில் பலாசி மீன் சிக்கினாலே அதிக கவலைதானாம்ங.. ஆனால், இதே மீனவர்களின் வலைகளில் புலாசி மீன் சிக்கினால் அன்று வருமானம் கொட்டுமாம்...!
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications