திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்தார்.. தொண்டர்கள் ஷாக்!
சென்னை: திமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த பலர் தவெகவில் இணைந்து வரும் நிலையில், திமுகவின் முக்கிய புள்ளியின் மகன் தவெகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோசப் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட கழக செயலாளர்கள் என பலரும் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அண்மையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம் ஆனந்தன், எஸ்.வளர்மதி ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், இன்று தவெகவில் இணைந்துள்ளார். சந்தீப் ஆனந்த், மிகப்பெரிய மதுபான ஆலையான அக்கார்ட் டிஸ்டில்லரீஸ் அண்ட் புரூவரீஸ் பிரைவேட் லிமிடெட்டை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் உள்ளிட்ட பலரும் இன்று தவெகவில் இணைந்தனர். அவர்களை தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் சால்வை அணிவித்து வரவேற்றார். இன்று நடந்த நிகழ்ச்சியில் திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெ.கருணாநிதி, வி.பி.கலைராஜன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். நடிகர்கள் ரவி மரியா, ஜெ.எம். பஷீர் உள்ளிட்டோரும் இன்று தவெகவில் இணைந்தனர்.


Click it and Unblock the Notifications
