பாக்யராஜ் இறப்பின் போது ஊர்வசியை திட்டிய ரசிகர்கள்.. அட பாவமே இப்படியா நடந்தது? உண்மை இதுதானா?
சென்னை: இயக்குனர் பாக்யராஜ் மறைந்த நாளில் தமிழ் சினிமா முழுக்க சோகத்தில் மூழ்கியது. முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஆனால், 'முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் பாக்யராஜ் அறிமுகப்படுத்திய ஊர்வசி மட்டும் இறுதி அஞ்சலிக்கு வரவில்லை.
இதைத்தொடர்ந்து, "தன்னை சினிமாவில் பெரிய இடத்திற்கு கொண்டு வந்த மனிதரின் இறுதிச் சடங்குக்குக் கூட ஊர்வசி வரலையே?" என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர். சிலர் அவரை கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர்.
இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த ஊர்வசி, தற்போது ஒரு பேட்டியில் அந்த நாளில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

நடிகை ஊர்வசி பேட்டி
அவர் பேசும்போது, "அன்று காலையில் நான் வழக்கம்போல ஷூட்டிங்குக்கு தயாராகிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு பிரபல செய்தி சேனலில் இருந்து போன் வந்தது. எடுத்ததும், 'பாக்யராஜ் சார் மறைவு குறித்து உங்களுடைய இரங்கலை சொல்லுங்கள்'ன்னு கேட்டாங்க.
அதைக் கேட்டதும் ஒரு நிமிஷத்துக்கு எனக்கு உலகமே நின்ன மாதிரி ஆகிடுச்சு. 'என்னங்க சொல்றீங்க... இரண்டு நாளைக்கு முன்னாடிதானே குஷ்பூ மகள் கல்யாணத்தில் சந்தோஷமா கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் நான் பார்த்தேனே? அவருக்கு என்ன ஆச்சு?'ன்னு கேட்டேன். உடனே என் கையும் காலும் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு" என்று கண்கலங்க சொல்கிறார்.
உதவியாளர் சொன்ன விஷயம்
அப்போது அருகில் இருந்த தனது உதவியாளர், "மேடம்... முதல்ல போனை வையுங்க... நான் விசாரிச்சு சொல்றேன்" என்று சமாதானப்படுத்தியதாகவும், சில நிமிடங்களில் வந்து, "பூர்ணிமா மேடம் பாக்யராஜ் சாரை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போயிருக்காங்க... நீங்க இப்போ பதறாதீங்க" என்று சொல்லியதாகவும் ஊர்வசி நினைவு கூர்ந்தார்.
"ஆனா அதுக்குள்ளேயே எனக்கு பிபி குறைஞ்சிடுச்சு. உடம்பே ஒரு மாதிரி ஆயிடுச்சு. கொஞ்ச நேரம் படுத்தே இருந்தேன். மனசுல ஒரே ஒரு விஷயம்தான் ஓடிட்டு இருந்தது... எப்படியாவது அவரை ஒரு தடவை பார்த்துடணும்."
அதன்பிறகு உடனே ஷூட்டிங்கில் இருந்து கிளம்பலாம் என்று நினைத்தேன். ஆனால் அன்றைய படப்பிடிப்பு முழுவதும் பல நடிகர்கள் சேர்ந்து நடித்த காட்சிகள். அவரால் மட்டும் கிளம்பிவிட முடியாத நிலை.
டைரக்டர் சொன்ன விஷயம்
"நான் டைரக்டர்கிட்ட போய் கேட்டேன். உடனே அவர், 'மேடம்... உங்க முகமே சரியில்ல. இப்பவே ரொம்ப டயர்டா இருக்கீங்க. ஷூட்டிங் நின்னாலும் பரவாயில்லை. ஆனா இந்த நிலைமையில நீங்க அங்க போய் உங்களுக்கு ஏதாவது ஆகிடக்கூடாதுன்னு தான் பயமா இருக்கு'ன்னு சொன்னார். உண்மையிலேயே எனக்கு உடம்பே ஒத்துழைக்கல."
அந்த இரவு முழுவதும் தூங்காமல் இருந்த ஊர்வசி, மறுநாள் அதிகாலையிலேயே கிளம்பியிருக்கிறார். "காலையில சீக்கிரமா கிளம்பிட்டேன். குறைந்தது கடைசி முறையாவது சாரை பார்த்துடணும்னு ஆசை. ஆனா பாதி வழியில போயிட்டு இருக்கும்போது போன் பண்ணி, 'அடக்கம் முடிஞ்சிடுச்சு'ன்னு சொன்னாங்க. அதற்குப் பிறகு அவங்க வீட்டில் போய் செய்தியாளர்கள் முன்பு என்னால பேச முடியாது. அதனால் நேராக வீட்டுக்கே திரும்பி விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்,.

கண்கலங்கிய நடிகை ஊர்வசி
மேலும், "இப்போ கூட சில நேரங்களில் இது உண்மையா என்று தோணவே மாட்டேங்குது. யாராவது 'இது எல்லாம் தவறான செய்தி... பாக்யராஜ் சார் நல்லாத்தான் இருக்காரு'ன்னு சொல்லிட மாட்டாங்களா என்ற ஏக்கம் இன்னும் இருக்கு. அந்த இழப்பை என்னால இன்னும் ஏத்துக்கவே முடியல" என்று குரல் தழுதழுக்க பேசினார்.
இந்த பேட்டி வெளியான பிறகு, ஊர்வசியை விமர்சித்த பலரும் தங்களுடைய கருத்தை மாற்றி வருகிறார்கள். "அவர் வராததுக்கு காரணம் அலட்சியம் இல்லை... அந்த துக்கத்தை தாங்க முடியாத மனநிலைதான்" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.














Click it and Unblock the Notifications