Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாமாயில் வாங்கிட்டீங்களா.. இந்த மாசம் பாமாயில் வாங்கினால், "இந்த" விஷயத்தில் மட்டும் கவனமா இருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: எண்ணெய் குறைத்து சமைப்பது எப்போதுமே ஆரோக்கியம் என்றாலும், அவைகளில் சில மருத்துவ குணங்களும் ஒளிந்து கொண்டிருக்கின்றன.. அதில், இந்த பாமாயிலும் ஒன்று.
பாமாயிலில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதில், விட்டமின் ஏ, விட்டமின் ஈ அதிக அளவு காணப்படுகிறது.. மேலும், பீட்டா கரோட்டின் அதிகமாக இருக்கிறது.. இதனால், கண் சார்ந்த பிரச்சினைகளை சீர்செய்து, தெளிவான பார்வை கிடைக்க உதவுகிறது.. அத்துடன் ரெட்டினா குறைபாட்டையும் சரி செய்கிறது..

இயற்கையான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருக்கின்றன என்கிறார்கள்.. நம் உடம்பில் உருவாகக்கூடிய கெட்ட செல்களை ஒழித்துவிடக்கூடியவை.. புற்றுநோய் செல்களையும் ஒழித்துவிடக்கூடியவை... இதில், விட்டமின் ஈ நிரம்பி உள்ளதால், இளமையான சருமத்தையும், ஹார்மோன் சமநிலையையும் தரக்கூடியது.. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இதில் கொழுப்பு சத்துக்களும் இதில் அதிகம் கலந்துள்ளன..

health news and Do you know what are the health benefits of palm oil

உடல் எடை: அதனால்தான், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பாமாயிலை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். மேலும், இதய பிரச்சனை இருப்பவர்கள், தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஆகிய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் பாமாயில் எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தக் கூடாது. அத்துடன், திடீரென பாமாயிலை பயன்படுத்துபவர்களுக்கு, சில சமயம், வாந்தி, பேதி, மயக்கம் என உடல்நல பாதிப்பை தந்துவிடும்..

100 கிராம் எண்ணெயில் 884 கிலோ கலோரிகள் உள்ளன. ரீஃபைண்டு செய்யப்படாத எண்ணெயில் மட்டுமே இந்த வைட்டமின் சத்து நிறைந்திருக்கும்... பாமாயில் கலப்படமாக இருந்தால், அதன் நிறத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.. அந்த சிவப்பு நிறத்துக்கு காரணம், அதிலுள்ள கரோட்டின்.. ஆனால், இதில் சில ரசாயனங்கள் சேர்த்து வெள்ளை பாமாயிலாக மாற்றும்போதுதான், எண்ணெய் கலப்படமாகிறது.

உபயோகிக்கும் முறை: அதுமட்டுமல்ல, பாமாயிலில் சமைத்தால், உடலில் பித்தமும் அதிகரிக்கும்.. சுத்தப்படுத்திவிட்டு சமையலுக்கு பயன்படுத்தலாம்.. அடுப்பில் ஒரு கடாய் வைத்து பாமாயிலை அந்த வாணலில் சேர்த்து 5 பூண்டு பற்களை அந்த பாமாயிலில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பயன்படுத்தலாம்.. இதனால் பிரச்சனைகள் வராது. எனவே, குறிப்பிட்ட அளவில் பாமாயிலை உபயோகிப்பது பெரிய பிரச்சனையை உருவாக்கப்போவதில்லை.

பாமாயில் உடலுக்கு நல்லது.. தேவையற்ற கொழுப்பை வெளியேற்றும். இதய பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும். மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் வைட்டமின் ஏ அளவை அதிகரிக்கும். சரும ஆரோக்கியம் காக்கும். பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களுக்கு நலன் சேர்ப்பவை..

சமநிலை: பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் ஹார்மோன்களை சமநிலைபடுத்துகிறது.. ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட பாமாயிலை பயன்படுத்துவது சிறந்தது. பாமாயிலில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது உடலுக்கு இளமை தோற்றத்தை தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முகத்தில் உள்ள சுருக்கம் மற்ற தோல் பிரச்சனைகள் நீங்குகிறது. இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆன்ஸிடன்டாகும்.

பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களுக்கு நலன் சேர்ப்பவை.. இதிலுள்ள வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கும், கண் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. பாமாயிலில் டோகோபெரோல்கள் மற்றும் டோகோட்ரியெனோல்கள் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற விளைவுகளைக் கொண்டிருப்பதால் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும்.
யார் யார் சாப்பிடக்கூடாது: பாமாயிலில் அதிகப்படியான கொழுப்பு சத்து நிறைந்துள்ளதால், இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.. அதனால், இதய நோய் இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இதயநோய் இருந்திருந்தாலோ பாமாயில் உபயோகிப்பதை கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்..

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும், பாமாயிலை தவிர்த்துவிடலாம்.. இதிலுள்ள அதிகப்படியான கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கக்கூடும். பாமாயிலில் உள்ள அதிகமான கொழுப்பு, வளர்சிதை நோய்களை உண்டு பண்ணும். சமைத்த பாமாயில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், சமைக்காத பாமாயில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.

மிஞ்சினால் நஞ்சு: வளர்சிதை நோயை ஏற்படுத்துவதில் பாமாயில் உள்ள கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் வளர்சிதை நோய் உள்ளவர்கள் பாமாயிலை சேர்த்து சாப்பிடக்கூடாது. பாமாயிலை உணவில் சேர்த்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனினும், எந்த பொருளுமே வீணானது கிடையாது.. ஆனால், அவை அளவுக்கு மிஞ்சிவிடும்போதுதான், நமக்கு நஞ்சாக மாறிவிடுகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+