Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருவாட்டுக்குள்ளே ஒளிஞ்சிருக்கும் அதிசயம்.. அதிலும் இந்த கருவாடு இருக்கே.. உடல் எடை குறைய செம சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாகவே மீன்கள் உடலுக்கு நல்லது.. அதிலும் பெரிய மீன்களைவிட, சிறிய மீன்களில் சத்து அதிகம்.. அதிலும் இந்த நெத்திலி மீன்களில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன என்பது பலரும் அறிந்த விஷயம்.

கேரளாவில் நெத்திலி மீன் மிகவும் பிரபலமானது... மிகவும் குளிராக இருக்கும் நீர்ப்பகுதிகளில் இந்த மீன் இருப்பதில்லை.. உதாரணமாக மத்திய தரைக்கடல் பகுதிகளில் அவ்வளவாக குளிர் இருக்காது.. அந்த பகுதியில் இந்த மீன் அதிகம் காணப்படுகிறது.

Health tips and Do you know what are the uses of Nethili Fish and Nethili dry fish

சத்துக்கள்: நெத்திலி எண்ணெய் நிறைந்த மீன் வகையாக இருப்பதால் இதில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன.. இது இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது.. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுவது இந்த நெத்திலி மீன்கள்தான்.. புரதம் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு ஒரு சத்து மிகுந்த உணவாகும்..

நம்முடைய உடலுக்கு 2 நாட்களுக்கு தேவையான மெக்னீசியம் + 5 சதவீதம் பாஸ்பரஸ் சத்தும் + இரும்புச்சத்தும் இந்த நெத்திலி மீனில் அதிக அளவு இருக்கிறது.. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், புரோட்டீன்கள் அதிகமாக இருப்பதால் இது உடல் எடையை குறைப்பதற்கு வழி வகுக்கும்...

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், நெத்திலியை உபயோகிக்கலாம்.. ஆனால், பொரித்து சாப்பிடக்கூடாது. நெத்திலி மீனில் ஊட்டச்சத்து அதிக அளவில் காணப்படுவதால், குழம்பு வைத்து சாப்பிடும்போது, முழு சத்தும் நமக்கு கிடைக்கும்..

உடல்எடை: உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளும் குறையும். நெத்திலி மீனில் ஃபேட்டி அமிலங்கள், வைட்டமின்கள் E, D வைட்டமின் பி நியாஸின் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.. அதனால், அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு மட்டுமின்றி சருமமும் பொலிவோடு அழகாக இருக்கும். நம்முடைய கண் பார்வை கூர்மையாகும்..

பொதுவாக மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும்.. ஆனால், இந்த மீனில் ஒமேகா-3 அதிகமாகவே இருப்பதுடன், வைட்டமின்களும் நிறைந்து காணப்படுகின்றன.. கால்சியம் அதிக அளவில் இருப்பதால், பற்கள், எலும்புகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன.. செலினியம் போன்ற தாதுக்கள் இதில் நிறைந்துள்ளதால், புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது..

தாய்ப்பால் சுரக்க: மகப்பேறு காலத்திலும், தாய்ப்பால் சுரக்க, பெண்களுக்கு நெத்திலி மீனை சமைத்து தருவார்கள்.. ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் காணப்படும் நெத்திலி மீன் எல்லா மீன்களையும் விட, உடல் மிக மெல்லியதாக இருக்குமாம்.. இந்த மீனின் மேல் பகுதியில், பச்சைக் கோடும், கீழ்பகுதியில் சிவப்புக்கோடும் இருக்கும்.. கர்ப்பக்காலத்திலும், குழந்தை பிறந்தபிறகு, தாய்ப்பால் ஊறவும் பாரம்பரியமாக இந்த மீன் சமைத்து தரப்படுகிறது.. இதனால் ராமேசுவரம் பகுதிகளில், நெத்திலி மீன்களுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கும்.

நெத்திலி கருவாடில் ஊறுகாய் செய்வார்கள்.. சிலர் நெத்திலி கருவாட்டிலேயே ரசம் வைப்பார்கள்.. அதாவது நெத்திலியை சுத்தம் செய்து, சிறிது மிளகாய் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.. 1 வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்..

ஊறுகாய்: பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.. அதனுடன் 1 தக்காளியை சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும்.. புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.

இப்போது கடாயில் எண்ணய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பிறகு, தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு, அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.. சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்... நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, பிறகு புளி தண்ணீர் சற்று அதிகமாகவே சேர்க்க வேண்டும்.. அத்துடன் வறுத்த கருவாடுகளையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி போட்டு இறக்கிவிடலாம்.

சுவைக்காக இப்படி செய்தாலும், ஊறுகாய் போலவே, பொரித்தோ சாப்பிடாமல், குழம்பு அல்லது மிளகு சேர்த்து ரசம் வைத்து சாப்பிடுவது உடலுக்கு முழு சத்தினை பெற்று தருமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+