1 ஜூஸ்.. நீங்க வெயிட்டை குறைக்கணுமா.. அப்ப உங்களுக்குதான் இந்த குட்நியூஸ்.. நல்ல ரிசல்ட் இருக்காமே
சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதோ இந்த 2 விதமான ஜூஸ்களை குடித்தால் நல்ல ரிசல்ட் இருப்பதாக சொல்கிறார்கள்.. வீட்டிலேயே நாம் தயாரித்து கொள்ளலாம்.
உடல் எடையை குறைப்பதில் எத்தனையோ வழிவகைகள் உள்ளன. அதேசமயம், எந்த டயட்டாக இருந்தாலும் சரி, அது ஒவ்வொருவரின் உடல்வாகு மற்றும் உடலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஏற்றபடி தான் தேர்வு செய்ய வேண்டும்..

இது இன்டர்மிட்டண்ட் டயட்டுக்கும் பொருந்தும். அதில் ஒன்றுதான், இன்டர்மிட்டண்ட் டயட் என்பதாகும்.. இந்த டயட்டில் உள்ள முக்கியமான விஷயமே நாம் பின்பற்றும் உணவு இடைவெளி நேரமும், நேரமும் தேர்வு செய்வது தான்.
இன்டர்மிட்டண்ட் டயட் இருக்கும்போது, நாம் வழக்கமாக பின்பற்றும் உணவு இடைவெளி நேரம் (food window time) 16 - 8 என்கிற நேர இடைவெளி என்று வைத்துக் கொண்டால், அந்த 8 மணி நேரத்துக்குள் என்ன வகை உணவுகளை வேண்டுமானாலும் நம்முடைய விருப்பப்படி சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு.
சமச்சீர் உணவு : அந்த கால இடைவெளி என்பது நம்முடைய உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்கு முழுமையாகக் கிடைக்கச் செய்யவும் மெட்டபாலிசத்தை தூண்டவும், ஜீரண மண்டலத்தை சீராக வைத்திருக்கவும் உதவி செய்வதே தவிர, ஆரோக்கியமற்ற, ஊட்டச்சத்துக்கள் குறைவான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது பொருளல்ல.. உங்களுடைய 8 மணி நேர உணவு இடைவேளையின்போது நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள் நிச்சயம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, சமச்சீர் உணவுகளாக தான் இருக்க வேண்டும்.
கழிவுகள்: இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்-கில் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) அதிகமாகும்... அதாவது நம் உடலில் தேவையில்லாமல் இருக்கும் தசைகள் அனைத்தும் கலோரியாக மாறுகிறது.. இதன்காரணமாக உடல் எடை குறைகிறது.. அதேபோல, இந்த இன்டர்மிட்டண்ட் விரதமானது, கருமுட்டை, விந்தணுக்களின் தரத்தை பாதித்து, கருவுருதலுக்கே கேடு விளைவிக்கும் என்று அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கைகள் வெளியாகி உள்ளன.. இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அளவு மட்டுமே உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
சீந்தில் இலை: அதேபோல, உணவுப்பழக்கம் மூலமும் உடல்எடையை குறைக்க பல வழிகள் உள்ளன.. குறிப்பாக 2 விதமான பானங்கள் பற்றி சொல்கிறார்கள்.. சீந்தில் கொடி பற்றி நாம் அறிந்திருப்போம்.. இது ஒரு ஆன்டிபயாடிக்.. கொரோனா காலத்தில் பலருடைய வீடுகளிலும் இயல்பாக பயன்படுத்தப்பட்ட ஒரு மூலிகைதான் இது.. நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி உடலில் தொற்றுகளை அண்டவிடாமல் இது தடுக்கும்.. இந்த சீந்தில் இலையில் ஜூஸ் தயாரித்து சாப்பிட்டாலும் உடல் எடை குறையும், கொலஸ்டிராலையும் குறைக்க முடியும் என்கிறார்கள்.
இந்த சீந்தில் இலையின் சாறில், நிறைய பயன்கள் உள்ளன.. அதில், முக்கியமானது எடையை குறைப்பதுதானாம்.. காரணம், இந்த சீந்திலில் அடிபோனெக்டின், லெப்டின் போன்ற மூலப்பொருள்கள் உள்ளன.. இவை ரெண்டுமே நம்முடைய நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் மூலப்பொருள்கள் ஆகும். இந்த சீந்தில் உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்கள், கொலஸ்டிரால் ஆகியவற்றைக் குறைத்து ஜீரண ஆற்றலையும் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்க செய்கிறதாம்.. அத்துடன் உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க செய்கிறது என்கிறார்கள்.
மன அழுத்தத்தை குறைக்கிறது. நினைவாற்றல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் இது தீர்வாக அமையும். சீந்தில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும்... ஆனால், நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சில துளிகள் அளவு மட்டும் சீந்தில் இலைச்சாறை எடுத்துக் கொள்வதன் மூலம் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதேசமயம், இவைகளை எடுத்துக்கொள்ளும்முன் மருத்துவ ஆலோசனை பெறுவதும் நல்லது.
ஜூஸ் : சீந்தில் கொடியின் இலை மற்றும் தண்டு ஆகியவற்றின் சாறினை காலை வெறும் வயிற்றில் அரை கிளாஸ் அளவு குடித்து வரும்போது அது உடல் எடையை குறைக்க உதகிறதாம்.. அதேபோல, ஒரு டம்ளர் தண்ணீரில் அல்லது கற்றாழை ஜூஸில் 2 ஸ்பூன் அளவு சீந்தில் சாறினை கலந்து குடிக்கலாம். இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும் என்றாலும், அளவுக்கு அதிகமாகவும் இதை குடிக்கக்கூடாது, பக்க விளைவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
எலுமிச்சம் + வெல்லம்: இன்னொரு டிப்ஸ்யும் சொல்கிறார்கள்.. எலுமிச்சம்பழத்தில், வெல்லம் கலந்து குடித்தால் வயிற்றில் தங்கியிருக்கும் கொழுப்புகள் விரைவில் கரைந்துவிடும் என்கிறார்கள்.. ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி வெதுவெதுப்பாக சூடாக்கி இறக்கி கொள்ள வேண்டும். அந்த வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து குடிக்க வேண்டும்.. தினமும் காலையில் எழுந்ததும் காபி, டீக்கு பதிலாக வெறும் வயிற்றில் இதை குடித்தால் நல்ல பலன் கிடைக்கிறதாம்.












Click it and Unblock the Notifications